கடன் தொல்லை ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் தற்கொலை.

சென்னை குமரன் நகரைச் சார்ந்தவர் அனவர், இவரது மனைவி பரிதா, இவர்களுக்கு இவர்களுக்கு விஷ்வானா, ரியானா என்ற இரு பெண் குழந்தைகள். கடுமையான விலைவாசி உயர்வால் வருகிற வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்த இயலாத நிலையில் கடுமையான கடன் சுமையில் குடும்பம் தள்ளாடியிருக்கிறது. கடனை அடைக்க முடியாமல் வருமானமும் போதாத நிலையில் கடும் மன அவஸ்தையில் இருந்த அன்வரும் பரிதாவும் தன் இரு குழந்தைகளையும் தூக்கிலிட்டுக் கொன்றூ விட்டு தாங்களும் தற்கொலை செய்து கொண்டனர். குடும்ப வறுமை காரணமாக குடும்பம் குடும்பமாக தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் தமிழகத்திலும் அதிகரித்துள்ளன.