கஜேந்திரன் குழு – சந்தர்ப்ப வாதிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் : குட்டி

இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறை மேலும் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த ஒடுக்கு முறைக்கெதிரான அரசியல் என்பதை யார் முன்னெடுப்பது என்பது மிக முக்கியமான விடயம். ஆரம்பத்தில் இந்த அரசியல் தவறான சக்திகளால் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாகவே போராட்டம் என்பது சரியான திசையில் நகராமல் சீர்குலைக்கப்பட்டது. இறுதியில் முள்ளிவாய்க்காலில் அழிந்து போனது. ஆரம்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற தவறான சக்திகள் தேசியப் போராட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொண்டதன் பலன் தான் அதன் தொடர்ச்சியான தவறுகளும் அழிவுகளும். இதே தவறு மறுபடி உருவாகிறது. தமிழ் காங்கிரஸ் கஜேந்திரன் குழுவினர் நிலைமைகளைப் புரிந்து கொண்டு தேசியக் கோஷங்களைத் தமது கைகளில் எடுத்துக்கொண்டுள்ளனர். இவர்களோடு பல தேசிய உணர்வுள்ளவர்கள் இணைந்து கொள்ளும் அபாயம் உள்ளது. போராட்டம் இவ்வாறான பதவியை நோக்கமாகக் கொண்ட கஜேந்திரன் குழுவினரின் கைகளிற்கோ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளுக்கோ மாறும் அபாயத்தை எதிர்கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் பதவிய நோக்காகக் கொள்ளாமல் தேர்தலை மக்களை அணிதிரட்டும் கருவியாகப் கையாள வேண்டும் என்ற சுலோகத்தின் அடிப்படையில் போட்டியிடும் புதிய ஜனநாயக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை சந்தர்ப்பவாதக் கட்சிகளின் பிடியிலிருந்தும் பின்னணியிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும் லண்டனில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வொன்றில் அரசியற் செயற்பாட்டாளர் குட்டி தெரிவித்தார்.

புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பலர் கருத்துத் தெரிவித்தனர்.

4 thoughts on “கஜேந்திரன் குழு – சந்தர்ப்ப வாதிகளின் கைகளில் தமிழ்த் தேசியம் : குட்டி”

 1. உண்மை தான்.
  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சம்பந்தனின் (இந்தியத்) திட்டங்களுக்கு வசதியாக இல்லை என்று கழற்றப் பட இருந்தார். பத்மினியும் கஜேந்திரனும் கழற்றப் பட்டுப் போக இடம் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்கள். இவர்களை இயக்குவது யார்?
  த. தே. கூ. என்ற நெல்லிக் காய் மூட்டை சிதறி விட்டது.
  உள்ளும் வெளியும் எல்லாமே சொத்தைகள் தான்.

  1. த.தே.மு உருவாகிய கூட்டணியல்ல உருவாக்கப்பட்ட கூட்டணி . சம்பந்தர் செல்லாக்காசாக பிரேமசந்திரன் முருங்கை மரத்தில் நிற்கிறார்.

 2. Kutti u are wrong..
  Pathmini or Kagendran or for that matter Jr Ponnampala were not response for this political formation…Puthiya Gnanaya Katchi might be a good alternative but here we have a same kind of people speak politics during election and endoring their publications… if Eazham sympathaisers associate themseves atleast in Jaffna and Trinco it is good for Tamil Politics…pro-Indian politicians Sampanthan and Suresh needs to be isolated…before their victory they invested in the indian bokered development in Northern East…who is listening…will diaspara take a right unified decision without theorising too much……….

 3. என்ன இண்டைக்கு செய்தி பாப்போம் எண்டு வந்தால் எல்லாம் ஒரே குழப்பமா இருக்கு. இதே தளத்தில இதுக்கு மேலே இருக்கிற செய்தியில சபேசன் என்றவர் சொல்றார்.
  “தமிழ்ப் பேசும் மக்கள் இலங்கை அரசியலமைப்பிலும் பாராளுமன்ற ஜனநாயகத்திலும் நம்பிக்கையிழந்துள்ளனர். இவ்வாறு நம்பிக்கையிழந்துள்ள சூழலில் மறுபடி அவர்களுக்குப் பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ஆதரவு வழங்குவதும் தவறானது என புதிய திசைகள் ஒன்று கூடல் நிகழ்வில் கருத்துத் தெரிவித்தார். இந்த வகையில் புலம் பெயர் தமிழர்கள் இலங்கைத் தேர்தலில் பங்காற்றும் எந்தக் கட்சியையையும் ஆதரிபதென்பது தவறான முடிபாகும் என மேலும் தெரிவித்த அவர், நாம் பலமான நிலையிலிருந்தால் தேர்தலில் பங்குபற்றுவது குறித்துச் சிந்திக்கலாம் என்றும் இன்றைய சூழலில் இது தவறான நடவடிக்கையே என மேலும் தெரிவித்தார்”
  இப்படி சொல்றார். கிலே என்னெண்டால்

  “இந்த நிலையில் பதவிய நோக்காகக் கொள்ளாமல் தேர்தலை மக்களை அணிதிரட்டும் கருவியாகப் கையாள வேண்டும் என்ற சுலோகத்தின் அடிப்படையில் போட்டியிடும் புதிய ஜனநாயக் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்றும் எதிர் காலத்தில் தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தை சந்தர்ப்பவாதக் கட்சிகளின் பிடியிலிருந்தும் பின்னணியிலிருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும் லண்டனில் நடைபெற்ற ஒன்று கூடல் நிகழ்வொன்றில் அரசியற் செயற்பாட்டாளர் குட்டி தெரிவித்தார்.
  புதிய திசைகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பலர் கருத்துத் தெரிவித்தனர்.”

  இப்படியும் கிடைக்கிது. வெளிநாட்டில இருக்கிற எங்களுக்கு பறுவாயில்ல நாங்கள் எல்லா செய்தியையும் வாசிக்கிறது. ஆனா நம்ம நாட்டிலையும் இப்ப இந்த தளங்கள் பாக்கிற வசதி இருக்கிறதால அந்த சனம் இந்த ஒரே புதிய திசை நிகழவில இரண்டு செய்தியை பாத்து குழம்பிவிடும். பாவங்கள்.

  ஒருத்தர் “பாராளுமன்ற வழிமுறையில் நம்பிக்கையளிக்கும் வகையில் தேர்தலில் பங்காற்றுவதும், அதற்கு ஆதரவு வழங்குவதும் தவறானது” எண்டு சொல்ல. மற்றவர் “புதிய ஜனநாயக் கட்சியை ஆதரிக்க வேண்டும்” எண்டும் சொல்றார். எனக்குதான் வேலையால வந்து நித்திரை காணாமல் குழப்பமோ? வாசிக்கிற உங்களுக்கும் குழப்பமேண்டால், யாரும் விளன்கிரவை விளங்கப்படுத்துங்கோ. புண்ணியம் கிடைக்கும். அங்கை நிலைமை ஏதொ. இங்கை வெளிநாட்டில அகதி அந்தஸ்தோட அறிக்கைகள், கூட்டங்கள். ஒருபக்கம் மகிந்தவுக்கு காவடி, மற்ற பக்கம் உருதிரகுமருக்கு. இதுக்கை புளிஎண்டை பெயரில சொத்து வியாபாரம் வசிருக்கிரவை எப்ப ஆப்பு எண்டு பயந்துகொண்டு. k .p தன்ரை பாடு.

Comments are closed.