கச்சத்தீவை இந்தியா மீளப்பெற தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு

கச்சத்தீவை இந்தியா மீண்டும் பெற்றுக்கொள்ளவேண்டும் என என்ற தமிழகத்தின் கோரிக்கைக்கு, தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் என் கே சிவாஜிலிங்கம் நேற்று சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த ஆதரவை வெளியிட்டார். இந்தியா கச்சத்தீவை மீளப்பெறுவதன் மூலமே இந்திய மீனவர்களை இலங்கைக்கடற்படையினர் தாக்குவதற்கு முடிவுக்காணமுடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியா, கச்சத்தீவை மீளப்பெறுமானால் இலங்கையில் உள்ள தமிழர்களும் மகிழ்ச்சியடைவர் என சிவாஜிங்கம் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரம் மீனவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் தடுத்து வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், தமிழர்களை முற்றாகத் தமிழ்பிரதேசங்களில் வெளியேற்றி அவர்களைப் படுகொலை செய்வதற்கு முயற்சித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

2 thoughts on “கச்சத்தீவை இந்தியா மீளப்பெற தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு”

 1. கச்சததீவு பிரச்சனை என்னொறைகும் இந்திய-இலங்கை உறவுகளில்
  பிரச்சனையாக இருந்ததில்லை. மீனவர்களின் சுகந்திரத்தையும் வாழ்வாதரங்களையும்
  கடந்த மூண்று சகாப்தமாக சூறையாடியவர்கள் இந்தியாவோ இலங்கைஇராணுமோ
  தமிழ்மக்களோ அல்ல மாறாக புலிகளும் அதன் மூலம் பயன் பெறும் புலிவிசுவாசிகளுமே

  சிவாஜிலிங்கமும் அவர்கூட்டத்தார்ராகிய கூட்டமைபபினரும் தமிழ்மக்களுக்கு எதுவுமே
  செய்யப்போவதில்லை.இனிஅவர்கள் செய்யவேண்டியபணி வன்னிக்குசென்று பிரபாகரனை பாதுகாக்க பங்கர்வெட்டுவதே.

 2. போதையில் உளறியிருந்தால் குடிகாரன்பேச்சு விடிஞ்சால் போச்சு என்று சொல்லி விட்டு போய்விடலாம். எனினும் அண்ணன் சிவாஜிலிங்கம் அவர்கள் சுயநினைவோடுதான் இதனை செல்லியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். தமிழீழத்துக்கு சொந்தமான கச்சதீவு நிலப்பரப்பை இந்தியா திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னதோடு விட்டுவிட்டார் ஏன் தமிழீழமும் இந்தியாவுக்குத்தான் சொந்தம் என்று சொன்னால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் எல்லாமே முத்திப்போய்விட்டது.

  வேண்டுகோள்:
  ஆசிரியர் செழியன் அவர்களால் எழுதப்பட்ட பிசியோபாத் என்ற மனநோயாளிகள் பற்றிய கட்டுரை ஒன்று இதே இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது அவற்றை வாசிக்க சந்தாப்பம் கிடைத்தால் அதனை வாசிப்பதன் மூலம் உங்களுக்கான பிரச்சனைகள் என்ன என்பதனை கண்டுகொள்ள முடியும் என்று நினைக்கின்றேன்
  ரவி

Comments are closed.