ஓவியர் நிகொலஸ் போஸின் புதிய ஓவியம் கண்டுபிடிப்பு!

பழைமையான ஓவியம் ஒன்றின் அடியில் மறைக்கப்பட்ட நிலையில் பிறிதொரு ஓவியம் இருப்பதை பிரேஸில் நாட்டு ஓவிய நிபுணர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

பிரபல பிரான்ஸ் ஓவியர் நிகொலஸ் போஸினால் 1634 -1638 ஆண்டு காலப்பகுதியில் வரையப்பட்ட இனவிருத்திக்கான கிரேக்க கடவுளின் ஓவியத்துக்கு பின்னால் இந்த புதிய ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது.

றெஜினா பின்தோ மொரேய்ரா என்ற நிபுணரே இந்த மறைந்திருந்த ஓவியத்தை கண்டுபிடித்துள்ளார்.

மேற்படி நிர்வாண ஓவியத்தை 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் பழைமை வாதிகளிடமிருந்து பாதுகாக்கும் முகமாக, அது இவ்வாறு பிறிதொரு ஓவியத்துக்கு பின் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த ஓவியம் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிரேஸிலின் சாயோ போலோவிலுள்ள முஸெடோ ஆர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.