ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் உயிரிழப்பு!

motherஉலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் வீணாக உயிரிழந்துவரும் அவலத்தைத் தடுப்பதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் சர்வதேச நாடுகள் பலவற்றின் சுகாதார அமைச்சர்கள் கூட்டம் ஒன்றை நடத்துகின்றனர்.

2015ஆம் ஆண்டுக்குள் தாய்மார்களின் கர்ப்பகால மற்றும் பேறுகால உயிரிழப்புகளை மூன்றில் இரண்டு பங்கால் குறைத்துவிடுவது என்ற மில்லேனியம் முன்னேற்ற இலக்கை அடைவதற்குத் தேவையான அரசியல் உறுதிப்பாட்டையும் நிதியையும் திரட்டுவது என்பதை ஐ.நா.மன்ற மக்கள் நல நிதியத்தின் ஏற்பாட்டில் நடக்கும் இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலகில் ஆண்-பெண் இடையே சம உரிமை இல்லாதிருப்பது இப்பிரச்சினையின் மூல காரணம் என ஐ.நா. தாய் நல நிதியத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் யீவ்ஸ் பெர்ஜெவின் கூறினார்.

2 thoughts on “ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பெண்கள் கர்ப்பகாலத்திலும் பிரசவத்தின்போதும் உயிரிழப்பு!”

  1. பெருகால இழப்பு வருத்தமான விசயம். goverment neccissary step to public aware of pregnant animic infection and pregnant hyper tension.

  2. பெறுகால் இழப்பு பற்றி விழிப்புண்ர்வு அவசியம் தெவை. அரசு இதற்க்கானநடவ்டிக்கைகளை உடனெ எடுப்பதுநன்மை ப்யக்கும். இழ்ப்பின் வலி பாதிக்கப்பட்டவர்க்ளுக்குதான் தெரியும்.

Comments are closed.