ஒரு இனக்கொலையாளி தேசத்தின் தலைவனான கதை : சபா நாவலன்

gandhionjewஒரு அப்பாவியை, ஒரு கோமாளியை, ஒரு மனநோயாளியை.. கண்டுபிடித்து தனது எதிரியாகவும் மக்கள் தலைவனாகவும் மாற்றி ஏகாதிபத்தியங்கள் சமூகத்தை அழிப்பதை நாங்கள் கண்முன்னால் காண்கிறோம். இவ்வாறான நடைமுறைகள் நூற்றாண்டுகளுக்கு முன்னமே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. மோகன் தாஸ் கரம்சாண்ட் காந்தி என்ற குஜராத்தில் பிறந்த குரூரம் மிக்க மனநோயாளியை பிரித்தானிய காலனியாத்திக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பி இந்திய மக்களின் விடுதலை வீரனாக்கிய அவமானம் இன்று வரை இந்தியாவைத் தின்று தொலைக்கிறது.

நிறவாதி, ஆதிக்க சாதி வெறியன், நாசிகளின் ஆதரவளான், பாலியல் நோயாளி போன்ற குரூரமான மனோவியாதி படைத்த காந்தி மகாத்மா காந்தியான கதை தென்னாபிரிக்காவில் ஆரம்பிக்கிறது. தேசிய அரசியல் என்ற அடிப்படையில் கூட குறைந்தபட்ச அரசியலைக்கூட புரிந்துகொள்ள முடியாத கடைந்தெடுத்த முட்டாளான காந்தியை பிரித்தானிய அரசு அடையாளம் கண்டுகொண்டது தென்னாபிரிக்காவில் தான்.

நள்ளிரவில் இங்கிலாந்து அதிகாரவர்க்கம் இந்தியாவின் சுதந்திரத்தை தனது ஏஜண்ட்டும் பிரித்தானியாவின் இனப்படுகொலையில் பங்கெடுத்தவருமான காந்தியிடன் ஒப்படைத்தது. இன்றுவரை மகாத்மா காந்தியின் இருண்ட பக்கங்கள் மறைக்கப்பட்டு இந்தியாவின் ஏகோபித்த தேசியத் தலைவனாகக் கருதப்படுகிறார். குஜராத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த மோடி என்ற அருவருக்கத்தக்க கோமாளிக்கு எந்தவகையிலும் குறைவற்ற ‘தகுதிகளைக்’ கொண்டவர் காந்தி. இந்திய அதிகாரவர்க்கமும் பிரித்தானிய ஏகாதிபத்தியமும் காந்தியைச் சுற்றி ஒளிவட்டம் ஒன்றைத் திட்டமிட்டு உருவாக்கியது.

தேசப்பற்றாளர்கள், ஜனநாயகவாதிகள், மனிதாபிமானிகள் சில வேளைகளில் இடதுசாரிகள் கூட காந்தியை மகாத்மாவாக மாற்றுவதில் பங்களித்துள்ளனர். குழந்தைகளைப் பாலியல் வதைக்கு உட்படுத்திய காந்தியின் ‘சத்தியசோதனை’ என்ற நூல் இந்தியச் சிந்தனை மரபாகக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சிறையிலிருந்திருக்க வேண்டிய குற்றவாளி அரை நிர்வாணமாக நாட்டை ஆண்ட அவலம் இந்திய மண்ணின் ஜனநாயகம் என அரங்கேற்றப்பட்டது. காந்தி என்ற நோயாளியை நிராகரித்து இந்தியாவில் காக்கை கூட கரைவதற்குச் சுதந்திரமில்லாத நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இவ்வாறான நம்பிக்கை இந்தியாவில் மக்கள் போராட்டங்களையும் புரட்சிகளையும் நீண்டகாலத்திற்குப் பின் தள்ளியது. காந்தீயம் கண்ணீரோடு வாசிக்கப்படும் தியாகத்தின் தத்துவமாக்கப்பட்டு அதிகாரவர்க்கம் நெருப்பெரித்தது.

இந்தியாவை நோயாளியாக்கிய காந்தி என்ற நோயாளியின் ஆரம்பம்

young_gandhi22ம் திகதி அக்டோபர் மாதம் 1869 ஆம் ஆண்டு மோகன்தாஸ் கரம்சண்ட் காந்தி குஜராத்தின் கத்திவார் என்ற குடாநாட்டில் பிறந்தார். காந்தியின் தந்தை கரம்சண்ட் தனது பகுதியின் திவான் என்று அழைக்கப்பட்ட முதன்மை அதிகாரி. தனது 13 வது வயதில் கஸ்தூர்பாய் என்ற பெண்ணைக் காந்தி திருமணம் செய்கிறார். காந்தி திருமணமான ஒரு வருடத்திற்கு உள்ளாகவே மனைவி கர்ப்பமாகிறார்.

பள்ளிப் படிப்பில் காந்திக்கு அதிக நாட்டமிருக்கவில்லை எனினும் தனது சமூகச் சிறப்புரிமையைப் பயன்படுத்தி சடம் படிப்பதற்காக லண்டன் பயணமாகிறார். லண்டனிலிருந்து இந்தியா திரும்பிய காந்தி 1891 ஆம் ஆண்டு பம்பாயில் சட்டத்துறையில் செயற்பட ஆரம்பிக்கிறார். உளவியல் சிக்கல் காரணமாக தனது வேலையில் கவனம் செலுத்த இயலாமையால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே திரும்பிவிடுகிறார். அங்கு சிலகாலம் சட்ட ஆலோசனை போன்ற தொழிலில் ஈடுபட்டவர். வெளிநாட்டு வேலைகளுக்கான முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக தென்னாபிரிக்காவில் இஸ்லாமிய இந்திய வியாபாரிகளுக்கான சட்டப் பிரதிநிதியாக வேலைபெற்று தென்னாபிரிக்கா செல்கிறார்.

தனது 24 ஆவது வயதில் குடும்பத்தைப் பிரிந்து தென்னாபிரிக்கா செல்லும் காந்தி அங்கு 21 வருடங்கள் வாழ்கிறார். காந்தியின் தென்னாபிரிக்க வாழ்வு அவரின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.

நிறவெறியன், சாதி வெறியன் காந்தி

gandhi_british1906 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை பெற்றுக்கொள்ள வேண்டுமானால் பிரித்தானிய காலனி அதிகாரத்தை ஆதரிக்க வேண்டும் என்று காந்தி கூறினார். அதற்காக இந்திய மருத்துவச் சேவை ஒன்றை 300 இந்தியர்களைக் கொண்டு நிறுவினார். பிரித்தானிய நிறவெறி அரசு தென்னாபிரிக்க மக்களுக்கு எதிராக நடத்திய யுத்ததில் வெள்ளையர்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்குடனேயே இச்சேவையைக் காந்தி ஆரம்பித்தார். காலனி அரசு குடியுரிமை வழங்குவதற்குப் பதிலாக இந்தியர்கள் அனைவரையும் சட்டரீதியாகப் பதிவுசெய்யுமாறு கோரியது. இதற்கு எதிராக இந்தியர்கள் போராட முற்பட்ட போது குறுக்கிட்ட காந்தி சத்தியாக்கிரகம் நடத்துமாறு அறிவித்தார். அதனைக் கூட அனுமதிக்காத பிரித்தானிய நிறவெறி அரசு காந்தியைக் கைது செய்து சிறையிலடைத்தது.

கொடுமைகளைக் கண்டு கொதித்தெழ மறுத்த காந்தி கொடுமைக்காரர்களோடு சமரசம் செய்துகொண்ட சத்தியாயக்கிரகம் முதல்தடவையாக தென்னாபிரிக்காவிலேயே அரங்கேறியது.

சிறைக்குச் சென்ற காந்தி அங்கு ஸுலூ கறுப்பினப் போராளிகளுடன் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இரண்டு வருடங்கள் சிறையிலிருந்து நமது மகாத்மா, சிறையில் உதிர்த்த பொன்மொழிகள் தாங்க முடியாதவை. கடைந்தெடுத்த நிறவாத வன்முறை!

‘உள்ளூர் சிறைவாசிகள் மிருகங்களைவிட ஒரு படி அகற்றப்பட்டவர்கள், அழுக்கானவர்கள், காட்டுமிராண்டித் தனமாவர்கள்’ என்கிறார். இந்தியர்களை கறுப்பினத்தவர்களுடன் சிறையிலடைக்க வேண்டாம் என்று வெள்ளை நிறவெறி அரசுக்குக் கோரிக்கை விடுத்தார். கறுப்பினத்தவர்களுன் இந்தியாவில் தீண்டப்படாதவர்களும் ஒரே வகையான மிருகக் குணம்படைத்தவர்கள் என்றார்.

சிறையிலிருந்து விடுதலையான காந்தி, பிரித்தானிய அதிகாரத்துடன் முழுமையாக சமரசம் செய்துகொள்கிறார்.

‘நாங்கள் இருவருமே இணைக் காலனிகள். ஆயினும் கறுப்பினக் காட்டுமிராண்டிகள் காலனி அதிகாரத்தின் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்றவர்கள். தவிர, தென்னாபிரிக்காவில் கூலித் தொழிலில் ஈடுபட்ட தாழ்த்தப்பட்ட இந்தியர்களும் அரசியலில் பங்கெடுக்கத் தகுதியற்ற சபிக்கப்பட்டவர்கள் என்றார். தலித் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டவர்கள் தொடர்பாக காந்தி தொடர்கிறார் ‘அவர்கள் இஸ்லாமியர்களாகட்டும் இந்துக்களாகட்டும் அவர்களுக்கு எந்தவகையான மத ஒழுக்கங்களும் தெரியாது. அவர்களின் வாழ்க்கையோடு பொய் ஒன்றிணைந்துள்ளது. காரணமின்றிப் பொய் சொல்வார்கள்.

காந்தியைப் பொறுத்தவரை தாழ்த்தப்பட்டவர்களும் தலித்துக்களும் முழு மனிதர்கள் அல்ல. இதுவே பின்னாளில் ஹரிஜன் என்று தாழ்தப்பட்டவர்களை மிகவும் தந்திரமாக மொத்த மக்களிலிருந்து ஒதுக்கிவைத்து சாதியமைப்பை நிரந்தமாக்க வழிசெய்வதற்கான ஆரம்பச் சிந்தனை.

பெண்கள் தொடர்பாக காந்தீயம்

காந்தியின் அதிகாரத்தின் முன்னால் அடிமைகளான குழந்தைகள்
காந்தியின் அதிகாரத்தின் முன்னால் அடிமைகளான குழந்தைகள்

பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட எந்தப் பெண்ணும் மனிதத் தன்மையை இழந்தவளாகிறாள் என்பது இந்தியக் கோமாளி காந்தியின் பொன்மொழிகளில் ஒன்று. பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகும் குழந்தைகளைக் கொலை செய்யும் தந்தையர்களின் செயல் நியாயமானது என வாதிடும் காந்தி சமூகத்தின் நன்மதிப்பிற்காகவும் குடும்பத்தின் புனிதத்திற்காகவும் அது தவறல்ல என்கிறார்.

கருத்தடைக்கும் கருக்கலைப்பிற்கும் எதிராக நாசிகளின் கருத்தைக் கொண்டிருந்த காந்தி கருத்தடை அல்லது கருக்கலைப்புச் செய்து கொள்பவர்கள் விபச்சாரிகள் என்கிறார்.

மனித குலத்தை வெட்கித் தலைகுனியவைக்கும் காந்தியின் பாலியல் தொடர்பான சமூகக்கருத்துக்கள் ஆபத்தானவையும் அருவருக்கத்தக்கவையும் 38 வயதில் தான் பிரமச்சாரி என அறிவிக்கும் காந்தி தனது பிரம்ச்சாரியத்தை நிறுவுவதாகக் கூறி பல்வேறு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. திருமணம் செய்துகொண்ட கணவன் மனைவியுடன் தனிமையில் இருப்பது தவறானது என்றும் பாலுணர்ச்சி ஏற்படும் போது குளிர் தண்ணீரில் குளித்து அதனை நீக்க வேண்டும் என்றும் கூறும் காந்தி குழந்தை பெற்றுக்கொள்ள மட்டும் பாலுறவு வைத்துக்கொண்டால் போதுமானது என்கிறார். எது எவ்வாறாயினும் காந்தியின் இக் கட்டுப்பாடு அவருக்கு மட்டும் விதிவிலக்கு.

காந்தியின் செயலாளரான சுஷீலா நாயரின் அழகான தங்கை காந்தியுடன் நிர்வாணக் குளியலில் ஈடுபட்டது மட்டுமல்ல நிர்வாணமாக உறங்குயதும் கூட அண்மையில் வெளியான ஆதாரங்கள். மகாத்மா சொல்கிறார் ‘அவள் குளிக்கும் போது உள்ளாடையை அணிந்திருக்கிறாளா இல்லையா என்பதை சோப் போடும் சத்தத்திலிருந்தே கண்டுபிடித்துவிடுவேன்’.

gandhi_dancingகாந்தியின் பேரப்பிள்ளை மனு தனது பதினெட்டாவது வயதில் காந்தியின் ஆச்சிரமத்திற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். ‘நாங்கள் இருவரும் இஸ்லாமியர்களால் கொல்லப்படலாம், அதனால் இருவரும் நிர்வாணமாக உறங்கி எமது புனிதத்தை சோதித்துக்கொள்ள வேண்டும்’ என்று அவருடன் நிர்வாணமாக உறங்குகிறார்.

இதே போல காந்தியின் மற்றொரு பேரப்பிள்ளையான அபாவுடனும் நிர்வணப் பரிசோதனை நடத்தப்படுகிறது. இருவருமே காந்தியின் ஆணாதிக்கத்தின் முன்பு அபலைகளாயினர். காந்தியின் பெண்கள் தொடர்பான பாலியல் வன்முறை உட்பட பெண்கள் தொடர்பான கருத்துக்கள் இன்றைய இந்தியச் சிந்தனையின் ஊற்றுமூலம். வருடம் தோறும் ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொன்றுபோடப்படும் போது இந்தியாவின் பெரும்பான்மை முச்சுவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கும் ஆதிக்க சாதியினரின் மனோநிலை இந்திய தேசத்தின் தந்தையின் கோட்பாடு.

நாஸிகளும் காந்தியும்

இந்தியா ஆங்கிலேயக் காலனியாதிக்கத்திற்கு உட்படிருந்த இறுதிக் காலங்களில் ஐரோப்பாவில் நாஸிகளின் ஆதிக்கம் தோன்றியிருந்தது. ஹிட்லர் முசோலீனி ஆகியோர் உருவாகினர். ஐரோப்பாவில் நாஸிகளின் கோரம் அரங்கேறிக்கொண்டிருந்தது. காந்தி என்ற இந்தியாவின் சாபக்கேடு முசோலினியைப் பற்றிக் கூறுவது:

‘முசோலீனி வறியமக்களின் மீது அதிக கவனம் செலுத்துகிறார். நகரமயமாக்கலுக்கு எதிரான முசோலீனியின் கொள்கை, தொழிலாளர்களுக்கும் மூலதனத்திற்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிக்கும் அவரது நிலைப்பாடு என்பன என்னைக் கவர்ந்தது என்கிறார்.

பிரித்தானியா ஹிட்லரின் படைகளால் தாக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் காந்தி பிரித்தானிய அரசிற்கு எழுதிய கடிதத்தில் ஹிட்லர் மோசமான மனிதன் அல்ல, நீங்கள் தொடர்ந்தால் அதிக ரத்தம் சிந்தப்படும் என்றார்.

உங்ககளின் அழிகிய தீவையும் அழகிய கட்டங்களையும் ஹிட்லருக்குக் கொடுத்துவிடுங்கள், உங்களது ஆத்மாவையும் மனதையும் கொடுக்கத் தேவையில்லை என்று பிரித்தானியாவிடம் கோரினார் காந்தி என்ற இந்தியக் கோமாளி.

இனக்கொலையாளி காந்தி பிரித்தானியாவின் முகவர்

காந்தி:பிரித்தானியக் கொலைப்படையில்
காந்தி:பிரித்தானியக் கொலைப்படையில்

தென்னாபிரிக்கச் சிறையிலிருந்து பிரித்தனிய நிறவெறி அரசுடன் சமரசம் செய்துகொண்டு வெளியேறிய காந்தியை தென்னாபிரிக்க இந்திய சமூகம் சந்தேகத்துடன் நோக்கியது. இந்தியர்கள் சிலரால் தாக்கப்பட்ட காந்தி படுகாயங்களுக்கு உள்ளானார்.

1906 ஆம் ஆண்டு ஸுலு இனக்குழுவினர் பிரித்தானியக் காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர். ஸுலூ கறுப்பின மக்களின் வீரம் செறிந்த போராட்டம் பிரித்தானிய காலனிய அதிகாரத்தால் மூர்க்கத்தனமாக ஒடுக்கப்பட்டது. நான்காயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மேற்பட்ட மக்கள் தெருத்தெருவாகக் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார்கள். பலர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்கள். பலர் பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார்கள். காந்தி வெள்ளை நிறவெறி அரசை ஆதரித்தார். உலகம் முழுவதையும் நாகரீகப்படுத்தும் வெள்ளை நிறத்தவர்கள் கறுப்பினக் காட்டுமிராண்டிகளின் வன்முறைக்கு எதிராகப் போராடுவதாக ‘மகாத்மா’ வெளிப்படையாகச் சொன்னார்.

ஸுலு மக்களுக்கு எதிராகப் போராடும் வெள்ளை அதிகாரத்திற்கு உடை உணவு போன்றவற்றையும் ஏனைய உதவிகளையும் வழங்குமாறு தென்னாபிரிக்க இந்திய சமூகத்தை காந்தி வேண்டிக்கொண்டார். இந்தியர்களை கறுப்பின மக்களை அழிப்பதற்குப் பயிற்றுவிக்குமாறு பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை வேண்டிக்கொண்டார். இந்தியர்களை இராணுவத்திற்குப் பயிற்சியளித்துப் போரில் ஈடுபடுத்தாமல் அவர்களின் சக்தியை வீணடிப்பதாக பிரித்தானியாவிற்குக் கடிதமெழுதினார்.

இறுதியில் ‘அகிம்சாவாதி’ காந்தி தனது எஜமானர்களுக்குச் சேவை செய்யும் அடிமை வேலைக்கு பிரித்தானியர்களால் அமர்த்தப்பட்டார். பிரித்தானிய இராணுவத்தில் ஸுலு இன மக்களைக் கொலை செய்வதற்காக சார்ஜன்ட் மேஜர் என்ற பதவி காந்திக்கு வழங்கப்பட்டது. போர்க்களத்திற்குப் போவதற்கு முன்னர் மகாத்மா ‘இந்தியர்கள் பிரித்தானியர்களுக்கு உதவ வேண்டுமா இல்லையா’ என்ற கட்டுரை ஒன்றை எழுதினார். ‘கறுப்பர்களுக்கு எதிராகப் போராடுவது இந்தியர்களுக்கு இலகுவான பணி, அவர்கள் ஆண்டவனில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள்’ என்று இந்தியர்களை கறுப்பின மக்களை அழிப்பதற்கு அழைத்தார்.

அழிப்பதற்கான அடிமைச் சேவகத்தில் காந்திக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பிரித்தானிய அரசின் கறுப்பின மக்களுக்கு எதிரான இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றிய காந்திக்கு வழங்கப்பட்ட உயர் விருது அது! இந்தச் சந்தர்ப்பத்தில் பிரித்தானிய காலனி ஆதிக்க நிறவெறி அரசின் முழுமையான முகவராகக் காந்தி மாறியிருந்தார்.

காந்தி பிரித்தானியாவின் அடியாளாகத் தென்னாபிரிக்காவில் செயற்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவில் காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பிக்கின்றன. சுவதேசி இயக்கம் உட்பட பல இஸ்லாமியத் தலைவர்களின் எழுச்சி போன்றவை பிரித்தானிய காலனியாதிக்கத்தை கதிகலங்கச் செய்தது. முரண்பாடுகளை மறந்து முழு இந்தியாவும் காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தது.

சுபாஸ் சந்திரபோஸ் உடன் காந்தி
சுபாஸ் சந்திரபோஸ் உடன் காந்தி

அதே வேளை சோவியத் ரஷ்யாவில் கம்யூனிஸ்டுக்களின் எழுச்சி ஒடுக்கப்பட்ட தேசங்களுக்கும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர்ச்சியை வழங்கியது. இந்தியாவில் கம்யூனிஸ்டுக்கள் காலனியதிகாரத்திற்கு எதிரான எழுச்சியில் பங்காற்ற ஆரம்பித்தனர். இவற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள பொருத்தமான ஆளாக இங்கிலாந்து அரசால் தெரிவுசெய்யப்பட்டவர் தான் காந்தி.
இவ்வேளையில் 1915 ஆம் ஆண்டு காந்தி என்ற பிரித்தானிய இராணுவ மேஜர் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்படுகிறார். 1885 ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் பிரித்தானிய நிதி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தியக் காங்கிரஸ் கட்சியில் ‘மகாத்மா’ என்ற பட்டத்துடன் வந்திறங்கிய இனக்கொலையாளி காந்தி உறுப்பினராகிறார். இலங்கையில் சிங்கள பௌத்த மேலாதிக்கவாதத்தையும் அதன் கர்த்தாவான அனகாரிக்க தர்மபாலவையை உருவாக்கிய தெயோசோபிகல் சொசைட்டி என்ற அமைப்பைச் சேர்ந்த வெள்ளையரான அலன் ஒக்டாவியன் ஹூயும் என்பவரால் காங்கிரஸ் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

இனப்படுகொலையில் ஈடுபட்ட போர்க்குற்றவாளி காந்தி இந்தியாவிற்கு வந்தத்தும் அகிம்சா வாதியாகவும், வன்முறைக்கு எதிரானவராகவும், அமைதிவழிப் போராட்டம் என்ற போலித்தனத்தின் நாயகனாகவும் தன்னைக் காட்டிக்கொள்கிறார். இவரது போராட்டங்களை முகம்கொடுக்க இயலாமல் பிரித்தானியா பின்வாங்குவது போன்ற நாடகம் அரங்கேறியது. ஆயுதம் தாங்கிப் போராடி பிரித்தானிய இராணுவத்தைப் பின்வாங்கச் செய்த நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் போன்றவர்களைத் தீவிரவாதிகள் என காந்தி பிரச்சாரம் செய்தார். மத முரண்பாடுகளின் தோற்றத்திற்கு காந்தி ஆரம்பப் புள்ளியாக அமைந்தார். தாழ்த்தப்பட்ட்ட தலித்துக்களை முழு இந்தியாவிலும் அன்னியமானவர்களாக்கினார்.

இந்தியாவின் தேச பிதாவாகவும், தேசியத் தலைவராகவும் போற்றப்படும் காந்தி பிரித்தானியக் காலனியாதிக்கத்தின் அடியாள். காந்தி என்ற சாதி, நிற வெறியன் இந்தியாவை பிரித்தானியர்கள் விரும்பியவாறு மாற்றினார். இரண்டாவது உலகப்போரின் பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னர் காலனி நாடுகளிலிருந்து பிரித்தானியா வெளியேறியது. அவ்வாறு வெளியேறும் போது தனது நம்பிக்கைக்குரிய அடியாட்களையும் கோமாளிகளையும் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தியது. காந்தியின் இந்தியாவிலிருந்து பிரித்தானியா நிம்மதிப் பெருமூச்சுடன் தனது படைகளை திரும்பப்பெற்றுக்கொண்டு இன்று வரை தனது சுரண்டலை தனது முகவர்கள் ஊடாக நடத்தி வருகிறது.

ஒரு மனநோயாளியை, இனக்கொலையாளியை, பெண்களை அடிமைகளாக எண்ணிய ஆணாதிக்க வாதியை, போர்க்குற்றவாளியை, சமூகவிரோதியை, நிற வெறியனை, ஆதிக்கசாதியின் வக்கீலை தேசத்தின் தந்தையாகவும், தேசியத் தலைவனாகவும், மகாத்மாவாகவும் பிரித்தானிய அரசு மாற்றிய வரலாறு அருவருக்கத்தக்கது. இன்று வரை காந்தியை விமர்சிப்பவர்கள் கூடத் துரோகியாகக் கருதப்பட்டார்கள். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியாமுழுவதும் பொய்யில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆகஸ்ட் 15ம் திகதி இந்தியாவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சுதந்திரதினம் சிதைக்கப்பட்ட இந்தியாவின் கறுப்பு நாள்.

தொடர்பான நூல்களும் ஆதாரங்களும்:

http://www.ibtimes.com/mussolini-gandhi-strange-bedfellows-214200

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/germany/6140002/Mahatma-Gandhi-was-one-of-Nazis-greatest-friends-German-historian-claims.html
http://www.thecrimson.com/article/1983/3/7/the-truth-about-gandhi-pbtbhe-movie/
http://ofmi.org/gandhis-goes-to-war-against-black-africans/
http://www.sikhsundesh.net/gandhi.htm
http://www.vijayvaani.com/ArticleDisplay.aspx?aid=2657
http://www.archive.india.gov.in/knowindia/culture_heritage.php?id=5
Gandhi: Naked Ambition by Jad Adams : ISBN-10: 085738161X

 

50 thoughts on “ஒரு இனக்கொலையாளி தேசத்தின் தலைவனான கதை : சபா நாவலன்”

 1. உலகம் போற்றம் உத்தமர் காந்தியை இழிவாக எழுதுவது ஒருவகை மனநோய். அதைத்தான் இந்தக் கட்டுரை தெளிவுபடுத்துகிறது. எழுதியவர் மன நோயாளி.

  1. இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டது அனைத்தும் உண்மையே.நான் வரலாற்று மாணவன்.இதுபற்றி முன்னரே தெரிந்திருந்தேன். டில்லி நூல் காப்பகம்,மற்றும் ஆய்வுக் குறிப்புகள் இன்றும் அங்கே இருக்கின்றன. சந்தேகம் உள்ளவர்கள் அனைத்து ஆதாரங்களையும் கண்டு கொள்ளலாம். சுபாஸ் சந்திரபோசின் கொலைக்கும் காந்தியும் நேருவும் காரணமாக இருந்தனர். அந்த ஆதாரங்கள் மறைக்கப்பட்டன. சமிபத்தில் சுபாசின் குடும்பத்தினர் சுபாசை கௌரவப்படுத்தி கொடுக்க இருந்த உயர்ந்த விருதை நிராகரித்து அந்த ஆதாரங்களைத் தரும்படி கோரி உள்ளனர்.
   உண்மைகளை பலரும் அறிந்திருந்தனர். இருப்பினும் இங்கே கட்டுரையாகத் தந்த சபா விற்கு நன்றிகள். உண்மைகள் ஒரு நாள் வரவே செய்யும்.

  2. Yes, still some people say Thiruvenkadam Velluppillai Pirabhaharan was a national leader…
   All are each & individuals wish…

   Some people praise Osama…
   Some people praise Obama…

   You just read the outlines of Ghandhi & praise him…
   That’s ur wish…

   1. //You just read the outlines of Ghandhi & praise him…
    That’s ur wish…//

    இப்படி ஒருவர் எழுதுவார் என்று தெரிந்ததால் தான்,முழுவதையும் படித்து தெரிந்து கொள்ளும்படி டில்லி நூலக தகவலை சொல்லி இருந்தேன்.
    யாரும் எந்த நேரமும் சென்று படித்துக் கொள்ளலாம். தெரிந்து கொள்ளாமல் சொல்வது தவறு.
    ஆதாரங்களுடன் வாதிடத் தயார் என டில்லி பலகலைக்கழக மாணவி சமீபத்தில் சவால் விட்டாரே.ஏன் யாரும் அந்தச் சவாலை இன்னமும் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

   2. சட்ட்டியிலிருப்பதுதான் அகப்பையில் வரும்.பாற்கடலை கடையென்றாலும் நஞ்சு கக்குவது தவிர்க்கவியலாதது.எத்தனை முரண்களுனூடேயும், இந்தியா,ஒரு நாடாக நிமிர்ந்து நிற்கிறது;சோவியத்தாகவல்ல.உலகம் பூராவும், கடவுள்கள்,கதாநாயகர்கள் மூலமே சுழன்றாடுகின்றது.காந்தியென்பது ‘பாகிஸ்தானை’க் கழித்த இந்தியாவை,இதுவரை உடையாது பிடித்திருப்பது.எழுதியிருக்கிற உனது ஆதாரமோ,உனது பூதாகாரமோ,உன் வயிற்றை நிரப்புமென்றால்,அதிலும் நீ காந்திக்குத்தான் நன்றி சொல்வாய்.

 2. காந்தியைப்பற்ரி  யார் எவ்வாறு எழுதினாலும் காந்தி  காந்திதான். அவரின்
  கொள்கைகள்  உலக மக்களால் ஏற்கப்பட்டது. போற்ரப்படுகின்றது.
  தனிமனிதனின் வாழ்விற்கும்  அவரின் பொதுவாழ்விற்கும்  இடைவெளிகளதிகமாகவும் இருக்கலாம்.

  இயேசுநாதரையும்,புத்தரையும் ,முஸ்லிம் தலைவரைகளைப் பற்ரியும்
  எழுதியிருந்தால்  என்ன  நிலமை ஏற்படும் என்பது  காந்தியைப்பற்ரி
  இழிவாக எழுதியவரிற்கு   புரிந்திருக்கும்.

  இவ்வாறன  சமயத்தலைவர்கழுடன்  ஒப்பிடும்போது  காந்தி
  பயங்கரவாததை  தனது  அகிம்சையால்  தடுத்திருந்தார்.
  இன்றும்  காந்தியின்  பக்தர்களைவிட   அவரை  பின்பறி
  வாழ்வோரே அதிகம்.  எனவே  காந்தி காட்டிய வழிக்குநிகராக
  உலகில் யாருமே இல்லை.  அவ்ரின் பெயரால்  போருமில்லை.

  1. ##  காந்தி
   பயங்கரவாததை  தனது  அகிம்சையால்  தடுத்திருந்தார்.##

      அப்படிப்பட்ட அகிம்சாவாதி உலக  மக்களால் இனப்படுகொலையளிகளாக பார்க்கபடும்   முசோலினி , இட்லர் போன்றவர்கள் பால் ஈர்க்கப்பட்டதும் , அவர்களின் கொள்கைகளை சிலாகித்ததுக்குமான  மர்மம்தான் என்ன ?

   1. தமிழரசுக் கட்சியின்  தலைவர்  திரு.செல்வநாயக்த்திற்கு   ஈழத்துக்காந்தியென்று   பெயரிட்டார்களே.  பிரபாகரனை அவர்
    உருவாக்கிவிடுவார் என்று   தமிழர்களின்  தீர்க்கதரிசனமா?

    தமிழர்களின்  அகிம்சை போராட்டமென்பதும்  பயங்கரவாதத்தை
    உள்ளடக்கியிருந்ததா?

    1. தமிழர்கள் கம்யூனிஸத்துக்கும் , போலி வர்க்கப்போராளிகளுக்கும்  டாட்டா  காட்டி  துரத்தியடித்து விட்டார்கள் என் கிற கோபம் போலும்.

     காந்தி  பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தால்  திட்டமிட்டு உருவாக்கப்பட்ட போலித்தலைவர் .அதனால் காந்தியின் அகிம்சை போராட்டங்களுக்கு பயந்து பிரிட்டிஷ் அரசு பின் வாங்குவது போலவும்  , விட்டு கொடுப்பது போலவும் பாசாங்கு செய்து  இந்திய மக்களை தாம் உருவாக்கிய போலித்தலைவருக்கு பின்னால்  அணி திரள வைப்பதில்  பிரிட்டிஷ் அரசு வெற்றி கண்டிருந்தது.
     ஆனால் இலங்கையில் செல்வாவின்நிலை அப்படியல்ல .
     அவரை சிங்கள அரசு  அவரை போலிதலைவராக உருவாக்கவில்லை .
     அதனால் தமிழரசு கட்சியினது  அகிமசை போராட்டங்கள்  காந்தியின் அகிம்சை போராட்டங்கள் போல் வெற்றியளிக்கவில்லை .
     அந்த தோல்விகள்தான்  ஆய்தபோராட்டத்துக்கு வழி கோலியது..

     1. //அதனால் தமிழரசு கட்சியினது  அகிமசை போராட்டங்கள்  காந்தியின் அகிம்சை போராட்டங்கள் போல் வெற்றியளிக்கவில்லை .
      அந்த தோல்விகள்தான்  ஆய்தபோராட்டத்துக்கு வழி கோலியது//

      இங்கு காந்தி வெற்ரி கண்டாரா அல்லது  தோல்வி கண்டாரா? இலங்கைத்தமிழர்கள்  அகிம்சைபோராட்டத்திலும் தோல்வி,ஆயுதபோராட்டத்திலும் தோல்வி கண்டுவிடார்களா?
      இவர்களிற்கு  என்ன பிரச்சினை?   சாதரண  இனமில்லையப்பா இவர்கள்.
      தமிழ் இனத்தின் பெயரால்  உலகினை ஏமாற்ரி சுகவாழ்வு வாழ்வோரா இவர்கள்.?

  2.   ##காந்தி காட்டிய வழிக்குநிகராக
   உலகில் யாருமே இல்லை.  அவ்ரின் பெயரால்  போருமில்லை.##

   அவரின் பெயரால் போர் இல்லைதான் . ஆனால் இந்த  புண்ணியவானால் கிடைத்ததாக  கருதப்படும் சுதந்திரத்துக்கு பின்னர் நடந்த இந்து – முஸ்லிம் கலவரம் , இரு தரப்பிலும் இலட்சக்கணக்கில்  மக்கள் பலியாகியது மில்லியன் கணக்கில் மக்கள் அகதிகளாகியது , லட்சக்கணக்கான பாலியல் வல்லுறவுக்குள்ளாகியது  போன்ற அனர்த்தங்களுக்கு இந்த  சுதந்திரம் கிடைக்க  காரணமாக இருந்த  புண்ணியவானும்தான் காரணம் ..

   இதுக்கு போரே பரவாயில்லை …

   1. லாலா  ஜேசுநாதரிலும் குற்ரங்கள் காணலாம். அவரைப்பற்ரியும்
    இங்கு எழுதலாம்.  இலங்கைத் தமிழரை  பொறுத்தவரை  பலர்
    தன் பக்கத்துவீட்டுக் காரரையே   மதிக்கப்பழ்காமல்  வெளிநாட்டிற்கு
    வந்து   சுகபோக வாழ்வு வாழ்பவர்கள்.

    சிங்களவரிடமிருந்து மட்டும் தப்பி வாழவில்லை. கிறிஸ்தவ்ர்,முஸ்லிம்கள்   பெளவுத்தர்கள், யாவரிடமிருந்தும்
    உங்களிற்கு   பாதுகாப்பு இருக்கின்றது.   எழுதக்கூடியவகைகளை
    எழுதுங்கள்.     சொந்தநாடென்பது   ஒவ்வொரு மனிதனையும்
    அவனின்  நிறம், மதம், மொழி பேதமின்றி  மதிக்கத்தெரிந்தவ்னிற்கே
    உரியதாகும்.

    மற்ரவ்ர்களிற்கெல்லாம்  நாடோடிகள்வாழ்க்கைதான்.  விடுதலை சுதந்திரம் என்பதெல்லாம்   சினிமா  பேச்சுக்கள்தான்.

    1. இங்கு தெரிவித்த கருத்துக்கள்  ஈழத்தமழர்களால் தெரிவிக்கப்பட்டவையல்ல.
     அவை காந்தியினாலேயே தெரிவிக்கப்பட்டவை . அவற்றை  மறுக்க முடியாத  ஆதாரங்களாக   கொண்டு தொகுத்தவர்கள் இந்தியர்களே .
     அருந்ததி ராய்  ஈழத்தமிழர் அல்ல இந்தியர்..

 3. யாரையும் விமா்சிக்கலாம் என்னைப்பொறுத்தவரை இறைவனைக்கூட நான் விமா்சிப்பேன், ஆனால் காந்தி போராடிய மக்களையெல்லாம் தடுக்க அனுப்பப்பட்டாா் என்பதன் மூலம் எதைக்கூற முற்படுகிறீா்கள்? 
  கம்யூனிஸ நாடாக மாறவிருந்த இந்தியாவை தடுத்துவிட்டாா் என்றா? அல்லது ஆங்கிலேயா் அகிம்சையை மதிப்பதுபோல் நாடகம் ஆடி சுதந்திரத்தை கொடுக்காமல் ஒரு இரத்த ஆறை ஓட வைத்து சுதந்திரம் பெற்றிருக்கலாம் என்றா? சாி இவரால் சுதந்திரம் கிடைக்கவில்லை சுபாஸ் சந்திரபோஸ்தான் காரணம் என்று வைத்துக்கொள்வோம் அவா்  யாருடய உதவியுடன் போராடினாா்?
  இரண்டாம் உலக யுத்தம் முடியும்போது பிாித்தானிய சாம்ராச்சியத்தின் பிடி யை தளா்த்தவேண்டிய சூழ்லை உருவானதே முக்கிய காரணம் என்பதில் சந்தேகம் கிடையாது. மேலே காந்தியைப்பற்றி கூறப்பட்ட கருத்துக்கள் புதியவை ஒருபோதும் அறியாதவை இவைகள் உண்மையானவைதான் என்று நிறுவப்பட்டால் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் அதன் பின்பு மகாத்மா என்று அழைப்பதில் அா்த்தமே கிடையாது.

  நாவலனுடய துணிவை மெச்சுகிறேன்.

  1. குமார்,
   இங்கு எழுதப்பட்ட எதுவும் எனது தனிப்பட்ட கருத்துக்கள் இல்லை. காந்தியின் கருத்துக்கள், அவரது கடிதங்கள், கட்டுரைகள் சொற்பொழிவுகள் போன்றவற்றிலுள்ள ஆதாரங்கள். அவற்றிற்கான தொடுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 4. ##  இங்கு காந்தி வெற்ரி கண்டாரா அல்லது  தோல்வி கண்டாரா? இலங்கைத்தமிழர்கள்  அகிம்சைபோராட்டத்திலும் தோல்வி,ஆயுதபோராட்டத்திலும் தோல்வி கண்டுவிடார்களா?
  இவர்களிற்கு  என்ன பிரச்சினை? ##

  இதே போல் இந்தியாவின் பல ஊடகங்களும் , ஊடகவியலாளர்களும்  ஈழப்பிரச்சனையை அரைகுறையாக புரிந்து கொண்டு அல்லது வஞ்ஞக உள்நோக்கங்களை வைத்துக்கொண்டு  அவதூறுகள் சொல்லும்போது இவர்களுக்கு என்ன பிரச்சனை எனக்கேட் க   வாய் வரவில்லை , இன்னும் சொல்லப்போனால் அவர்களோடு சேர்ந்து கொண்டு ஜால்ரா அடிக்க மட்டும் தெரிந்திருந்தது .  இப்போது இந்திய சுதந்திரம் , காந்தி பற்றி நாம் பேசினால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதா ?

  ##    இங்கு காந்தி வெற்ரி கண்டாரா அல்லது  தோல்வி கண்டாரா? இலங்கைத்தமிழர்கள்  அகிம்சைபோராட்டத்திலும் தோல்வி,ஆயுதபோராட்டத்திலும் தோல்வி கண்டுவிடார்களா ##

    காந்தி கண்ட அரைகுறை வெற்றி இந்தியாவின் காலனி ஆட்சியாளர்களினால்  ஏற்கனவே  தீர்மானிக்கப்பட்ட அரை குறை வெற்றி .
  ஒரு போராட்டத்தின் உண்மையான தோல்வியை விட , எதிரிகளால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அரை குறை வெற்றி ஆபத்தானது .

  புலம்பெயர் தமிழ்கர்கள் பன்னாட்டு கம்பனி ஆரம்பித்து வெற்றி கண்டால் உடனேயே சொறிய ஆரம்பித்து விடுவீர்கள் .  இந்தியாவில் பன்னாட்டு கம்பனிகளின் சுரண்டலைப்பற்றி பேசினால் பம்மிக்கொண்டு அதே பன்னாட்டு கம்பனிகளுக்கு  கூச்சநாச்சைல்லமல் வக்கலத்து வாங்க ஆரம்பித்து விடுவீர்கள் .

  ##  தமிழ் இனத்தின் பெயரால்  உலகினை ஏமாற்ரி சுகவாழ்வு வாழ்வோரா இவர்கள்.##

  அப்படியா  ? சரி நீங்கள் சிலாகிக்கும் காந்தியின் யோக்யதை என்னவென்று பார்ப்போம் .

  சில வருடங்களின் முன் இந்திய காங்கிரஸ் கட்சியின் உலகப்புகழ் பெற்ற ஊழல்கள் ஒன்றன் பின்  ஒன்றாக வெளியாகிபோது காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார் . ”  காந்தி கூடநாடு சுதந்திரமடைந்த பின் பஜாஜ் முதலாளியிடமிருந்து 50 லட்ச ரூமாயைநன் கொடையாக பெற்றார் ”

  இன்றுவரை அதற்கான மறுப்பு காந்தி வாரிசுகளிடமிருந்தோ அல்லது இன்றுள்ள காந்திய அமைப்பிலிருந்தோ வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ..

 5. காந்தி..இந்திய நோட்டுக்களில் மட்டுமே வாழ்கிறார்.

  மோடி, இரண்டு நாட்களுக்கு முன் பெரிய போர்க்கப்பல் ஒன்றினை வெள்ளோட்டம் விட்டுள்ளார். 
  விதேசிகள் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்யலாம் என்கிறார்.
  சிறு வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வேண்டுமென்கிறார்.
  மலைவாழ் மக்களின் மண், கார்போறேட்டுக்களுக்குச் சொந்தமாகிறது.
  சமஸ்கிரதம் தெய்வ பாஷையிலிருந்து , தேசிய மொழியாகிறது.
  மொழிவழித் தேசிய இனங்களின் மீது ஹிந்தி திணிக்கப்படுகிறது.

  இது வந்தேமாதரமா? அல்லது வந்து ஏமாத்திரமா?.

 6. நான் காந்தியை  ஒரு வகையில் ஒரு மாகான் போல தான்  நினைத்திருந்தேன். குழந்தைகளுடன் பாலியல் தொடர்பைக்கூட ஏதாவது அவதூறு என்று விடலாம். தென்னாபிரிக்காவில் காந்தி நிறவெறி பேசியதும், பின் ராணுவத்தில் சேர்ந்து மேஜராக பணியாற்றியதும், பிரிடீஷ் உடன் சேர்ந்து கொலை செய்ததும் ஆதாரபூர்வமானவையாக எழுதப்பட்டுள்ளது. நெட்டில் வேறு இடங்களிலும் இது கிடைக்கிறது. அப்பேர் பட்ட ஒரு பொறுக்கியை எப்படி ஏற்றுகொள்வது? யாரைத் தான் நம்புவது என்று தெரியவில்லை. பணம் கிடைத்த பிறகு தான் எல்லோரும் மாறுவார்கள் இப்படியான பொறுக்கிகள் பணத்துக்காகவே மாறி உள்ளார்கள். இனியும் இவனை நம்புபுகிறவன் இந்தியனாக இருக்க முடியாது.

 7. please publish the article in english. its superb! very good revelation with great evidences

 8. I criticize not only Ghandhi, also Bharathiyar…

  If I said this, some people here try to ask proofs…
  Here Navalan wrote all with sources…

  Like Ghandhi, like our hand two sides… Hard & soft side… everyone have two sides in their life…

  Me too… I’m not a perfect person, then how I can I expect others…
  But everyone do mistakes… But, they have to accept those..

  If you check Ghandhi’s whole life… there were so many hidden stories to know…
  Also Eddaiyapuram Subramaniya Bharsthiyaar…

  1. Here Navalan wrote all with sources….

   It is important Sir. You can’t write what you want. That is quality from author.

   If I said this, some people here try to ask proofs: Yes we will ask proof otherwise how can we trust and speak with others. 

   1. Yes Sir,
    But sometime difficult to proof all. 
    It’s come from our own judgement & experience…

    For an example, the path of our liberation struggle…

    1. You can’t bring example other than Our struggle and attacking LTTE leader. Sir Tamil Nationalism is different from Puli Nationalism. Come out and give some progressive comments which is worthwhile.

 9. I think this is a very important article. Some of the points are very disturbing to the image many has.

  Even though parts have been written already by many, I think this is the first article, that connects everything and draws to the conclusion.
  I like this article to be written in English.
  I also like a few improvements:
  1.  The citation to be given. Instead of it this article has just given the references only at the end.
  2.  This article has many points: about his mental disorder on sexual issues, his support to Hitler, his support to British, How he joined Congress etc.  But instead of handling them one by one, the article has mixed them together.  By this each point will be proved and them the summery could be drawn. 
  If it is written this way this article could be considered as a master piece from Saba Navalan and his contribution for historical research.
   

 10. இது  வரலாற்று  முக்கியத்துவம்மிக்க ஆக்கம்.  எழுதப்பட்டிருக்கும்  எல்லாமே  தெரிந்த்தவை  தான்.   ஆனால்  அவற்றில்  இருந்து   எடுக்கப்பட்ட  முடிவுகளே  முக்கியமனவை. பெயர் தெரியாத  ஒருவர்  எழுதியிருப்பதால்  மக்களிடம்  போய் சேர்வது  குறைச்சலாகத்தான்   இருக்கும்.  இதே  வைகைப்பட்ட  கட்டுரைகளை  ஆலோசனைகளை  வழங்கி  பெரிய  எழுத்தாளர்களிடம்  எழுதி  வாங்கினால்  சிறந்ததாக இருக்கும்.  இனியொரு  கவனத்தில்  கொள்க.

  1. What is the meaning of  ‘unnamed writer ‘ &  ‘big writer’
   Or what is the difference…?

  2. அருந்ததி ராய் என்ற ஒரு பெண் எழுதிய ஒரு புத்தகத்தின் மூலம் உலகம் அறியும் அளவிற்கு பிரபல்யமானாா், அவரை யாராவது, நீங்கள் பிரபலம் இல்லாதவா் ஆகையால் உங்கள் கதையை பிரபல்யமான ஒருவாிடம் கொடுத்து அவா் பெயரை பயன்படுத்தி வெளியிடுங்கள் என்று கேட்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உங்கள் கருத்து இருக்கின்றது.

   பெருசும் சிறிசும் என்ன பித்தலாட்டம் பாருங்கள்.

  3. பெரிய எழுத்தாளர்கள் மற்றவர்களின் ஆலோசனைப்படி தான் கட்டுரைகளை எழுதுகிறார்களா?
   முதலில் இதனைச் சொல்லும் நீங்கள் யார்?

 11. அருமையன கட்டுரை, இங்கு இருந்த பவுதம் & சமனம் ஆகியவட்ரின் அகிம்சை கொல்கைகலை தன் கொல்கையாக காந்தி பயன்படுதிகொன்டார்.

 12. உயிருடன் இல்லாத  ஒருவரைப்பற்ரி  அவதூறாக  ஒருவர் ஆதரம் காட்ட
  அதனை  ஆதரிப்பது  ஓர்  நாகரீகமான  செயலா?  காந்தியின் பெயரிற்கு
  களங்கம் ஏற்படுத்துவதில்  தமிழர்களிற்கு  என்ன  பலன்?

  ஈழத்தமிழரின்  போராட்டத்தை  துர்ப்பிரயோகம்  செய்தோர்  உலகம்
  முழுவதும்    உத்தமர் போல் வாழ்கின்றார்கள். இவர்களைப்ப்ர்ரி
  ஆதர்ம் காட்டவோ  அவர்களிர்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதற்கோ
  துணிவுள்ள தமிழர்கள்  யாரையும் காணோம்.

  மறைந்த  காந்திமீதும், பாதுகாப்புடன் வாழும் கோத்த்பாயா,இராஜ்பக்சா
  மீதுமே  கவனங்களை  திருப்பி விட்டு   தமிழர்களிடையே வாழும்
  குற்ரவாளிகளை  அவர்களின்  ஆயுட்காலம்  முடியும்வரை  பாதுகாப்போம்.

  1. ##   கோத்த்பாயா,இராஜ்பக்சா
   மீதுமே  கவனங்களை  திருப்பி விட்டு   தமிழர்களிடையே வாழும் #

   அதானே !  என்னதான்  மூடி மறைத்து வெளி வேஷம்  போட்டாலும் சிலநேரங்களில் அவர்களையுமறியாமல்   எசமான பாசம் வெளிப்பட்டு விடும்.

   1. எசமான் பாசம்   இலங்கை  அரசுடன்  புலம்பெயர்  தேசங்களில்
    சுருட்டியதை கொண்டு போய் கொடுப்பர்களிற்கே  உள்ளது.
    பெற்றாரிற்கு  உதவி செய்யும்  பிள்ளைகள் போல் இலங்கை
    அரசிற்கு  கொடுத்துதவும் தமிழர்களை  பார்த்து கேட்கலாமே.

  2. ##  உயிருடன் இல்லாத  ஒருவரைப்பற்ரி  அவதூறாக  ஒருவர் ஆதரம் காட்ட
   அதனை  ஆதரிப்பது  ஓர்  நாகரீகமான  செயலா? ##

   உயிருடன்  இல்லாத ஒருவரைப்பற்றி   அவதூறு எதுவும் இங்கு சொல்லப்படவில்லை . உண்மைகள் ஆதாரங்களுடன் எடுத்து வைக்கப்பட்டுள்ளது . இவையனைத்தும் இந்தியர்களே செய்துள்ளார்கள் . 
   இனி ஒரு இணையம் அதனை வெளியிட்டுள்ளது .அவ்வளவுதான் . 
   இதனை வைத்து  ஈழத்தமிழர்கள் மீது அவதூறும்  சேறும் வாரியிறைக்க முனைந்துள்ளார் மன்னன்.

   உயிருடன் இல்லாத ஒருவரைப்பற்றி எதுவும் சொல்லக்கூடாதென்றால் உலகில் வரலாறு என்ற ஒன்றே இருக்காது ..
   இப்போது பதில் சொல்வதற்கு காந்தி இல்லாவிட்டாலும் அவரது வாரிசுகளும் , காந்திய அமைப்பும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன . அவர்கள்  தாராளமாக பதில் சொல்லலாம்.
   60 வருடங்களாக மக்களுக்கு தெரியாத உண்மையினை அண்மையில் காங்கிரஸ் முக்யஸ்தர்  போட்டுடைத்துள்ளார் . அதாவது காந்தி இந்திய முதலாளியான பஜாஜிடம் 50 லடச ரூபாய்  நன் கொடை பெற்றுள்ளார் என்பதுதான் அது.

   இன்று வரை காந்தி வாரிசுகள் தரப்பிலிருந்தோ , காந்திய அமைப்பிடமிருந்தோ எந்த மறுப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்படத்தக்கது..

   1. ரஜீவ்  காந்தியை  கொலைசெய்துவிட்டு   அவர்   ஈழ்த்தமிழர்களிற்கு
    எதிராகச் சதிகள் செய்தார்  என்று  குற்ரச்சாட்டுவோம்.
    மகாத்மா  காந்தியின்  குற்ரங்களை  ஆதாரத்தோடு  பிரசுரம் செய்து
    அவர்  உலகினை  ஏமாற்ரினார் என  குற்ரம் சாட்டுவோம்.

    இவ்வாறு  உலகில் யார் யார்  மற்ரவ்ர்களால்  மதிக்கப்படுகின்றார்களோ
    அவ்ர்களையெல்லாம்  அவமான்ப்படுத்துவதன் மூலமே  தமிழர்
    உலகினில்  மேலான இனமாக  உலகமக்கள்  ஏற்றுக் கொள்ள
    வழிசெய்ய  முனைகின்றனரே  தவிர, தமிழரின்  குறை  நிறைவுகளை
    எடுத்து விவாதிக்க  முன்வருவோர் யாருமேயில்லை.

    1. எம்பா நீங்க அதத்தானே இங்க பண்றீங்க அது போதாதா என்ன ?

    2. ராஜிவ் காந்தி ஈழத்தமிழர்க்கு என்ன செய்தார் என்பதை  அவரது சகாக்கள் இன்று இன்று சொல்வதை விடவா ஈழத்தமிழர்கள் சொல்லி விட்டார்கள் ?

     காந்தியைப்பற்றி காந்தி தேசத்தவர்கள்தான்  வண்டி வண்டியாக  புகார் கூறுகிறார்கள் . காந்தி  பஜாஜ் முதலாளியிடம் பணம்  வாங்கியதைப்பற்றி ஈழத்தமிழர்களா  கண்டு பிடித்து கூறினார்கள் . காங்கிரஸ்  மந்திரிதானே அவ்வாறு கூறினார் . இதற்கு ஈழத்தமிழர்கள் நொந்து கொள்வதில் என்ன பயன் ?
     ஈழத்தமிழர்கள் மேல் காழ்ப்புணர்வு கொண்டு புலம்புவதை  முதலில் நிறுத்துங்கள் .

    3. ஏன் மன்னன் நீங்கள் ஒரு விடயத்தையே சுற்றிச்சுற்றி வருகிறீா்கள்?
     காந்தியைப்பற்றி விவாதிக்கும் போது அதையே விவாதிக்காமல் 
     தமிழா்களைப்பற்றியே குறைகூறுகிறீா்கள். நீங்கள் மிகவும் பாதிக்கப்
     பட்டுள்ளீா்கள் என்பது புாிகிறது அதற்காக காலத்தின் ஒரு புள்ளியி
     லேயே நின்று கொண்டு புலம்புவது விவேகமாகாது.
     நடந்த தவறுகளில், அனியாயங்களிலிருந்தே நாம் கற்றுக்கொள்ள
     வேண்டும் அதனால் காந்தியான காந்தியே இப்படி என்றால் என்று நாம் 
     தொடங்கினாலே நீங்கள் கூறுபவா்களிடத்திற்கு வரலாம் ஆனால் 
     நீங்கள் எதற்காக ஆதங்கப்படுகிறீா்களோ அதையே உங்கள் கருத்து
     க்களால் மறுக்கவும் செய்கிறீா்கள் புாியமுடியாதுள்ளது.

     1. ஒவ்வொரு மனிதனிடமும்  நல்ல பக்கமும்
      கெட்ட பக்கமும் இருக்கும். உலகம்
      காந்தியிடமிருந்து  நல்ல பக்கங்களையே
      பார்த்து  ஏற்றுள்ளது.  

      100 மாணவ்ர்களிற்கு  ஆசியராக இருக்கும்
      ஒருவர்  குடும்பத்தலைவராகவும் இருப்பார்.
      மாலையில்   மதுபானச்சாலைக்கும் செல்வார்
      சந்தர்ப்ப வசத்தால் விபச்சார  விடுதிக்கும்
      போவார்.

      அவரைப்போல்  நல்ல ஆசியரோ  குடும்பத்தலைவரோ  காணமுடியாத  நிலையில் , ஒருவர் வந்துஅவரை மதுபானச் சாலையில் கண்டேன்,விபசார விடுதியில் கண்டேன் எனவே  அவர்   குடிகாரன், விபசாரிகளிடம்
      போறவன்  என்று   குற்ரம் சாட்டுவது   மாணவ்ர்களின்  நன்மைக்காகவா?
      அல்லது  குடும்பத்தின்  நன்மைக்காகவா?

      வள்ர்ந்த  நாடுகளில்  சில் உண்மைகளை  பொதுமக்களின் அமைதி
      குலைந்து விடுமென்பதற்காக  பிரசுரிப்பதை  கட்டுப்படுத்துகின்றார்கள்.
      ஆனால்  தமிழ் ஊடகங்களோ, இணயத்தள்ங்களோஎழுத்தாளர்களோ  இதனை  கட்டுபடுத்துவதில்லை.  பகைமையை வளர்ப்தன் மூலமே
      தமக்கு  விளம்பரம் தேடுகின்றார்கள்.  உலகில் இல்லாத  ஒரு விட்யத்தை
      கண்டுபிடித்து  எழுதவதைப்போல்   உணர்கின்றார்கள்.

 13. Navalan

  Most of your evidence are web based apart from one book. Please don’t mistake here I am defending Gandhi. Again only issue is he is a very good politician eventually delivered without a mullivaikal I think. You may have different view, and will ask me to look at the state of the India then and now. Also you throw a question which I only can surrender.  However even the left or Chinese communist like Mao type of person wouldn’t be different. ie: they would have done the same thing. As India got too much variety compared to China. Possibly Two India like south and north would have been replicated like China. However, I still have doubts and this article is an eye opener and need to research. Amazed for the guts you have to bring like these.

 14. இதெல்லாம் புதிய செய்திகள் அல்ல. சத்திய சோதனை என்ற் தன்நூலில் ஏற்கனவே காந்தி எழுதியவை தான்,தான் விட்ட தவறுகளை , அவர் எழுதியே உள்ளார், அதனால் தான் அவர் மகாத்மா என்றூ போற்றப்படுகின்றார், லெனினி, ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள் தாங்கள் செய்த எந்த தறையும் ஒத்துகொண்டதில்லை, அவரக்ளே உலகின் மிக பெரிய கொலையாளிகள்

  1. ##  சத்திய சோதனை என்ற் தன்நூலில் ஏற்கனவே காந்தி எழுதியவை தான்,தான் விட்ட தவறுகளை , அவர் எழுதியே உள்ளார், ##

   அப்பவும் கூட   பஜாஜ் முதலாளியிடம் 50 லட்சம் நந்ஙொடை பெற்றது பற்றிய  விடயத்தை பற்றி மூச்சு கூட விடவில்லை .

   ஒரு வேளை அது சத்திய சோதனைக்குள் வராதென நினைத்து விட்டாரோ என்னமோ ?

   1. தமிழீழ விடுதையின் பெயரால் தமிழரின் உயிரைப்பலிகொடுத்து
    விட்டு  அவ்ர்களின் பெயரால்  உலகின் மூலைக்கு மூலை
    உல்லாச  வாழ்வு வாழும்  ஒரு தமிழனாவ்து  ஒரு உண்மையை
    தான்  தமிழரின் பெயரால் செய்த  துரோகங்களை  துணிவுடன்
    சொல்வார்களா?  அவ்ர்களையெல்லாம்  சர்வதேச  புல்ழ்பெற்ர தமிழ்
    வர்த்தகர்கள்   என  புகழ்பாடிப்போற்ரவே   சிலர் முன்நிற்கின்றனர்.

    1. சும்மா  ஒன்றையே சொல்லி சொல்லி புலம்புவதை விடுத்து அத்தைகைய  வர்த்தகர்கள்  ஒரு சிலரின் பெயர்களையாவது  இங்கு வெளியிடலாமே ?

     1. They’ll never come out & identity them…
      If know them, please expose them…
      Please…

      Like Canadian TVI owners…  Australia – Malaysia based Tamilini products…

      Please….

 15. //ந்தி காட்டிய வழிக்குநிகராக
  உலகில் யாருமே இல்லை.  அவ்ரின் பெயரால்  போருமில்லை.//

  இந்தியா முழுவதும் அவரின் பெயரால் நல்ல விசுவாசமான அடிமைகள் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். 

 16. இப்படி ஒரு கேவலமானவனை மகாத்மா என்று அழைத்தற்கு வெட்கி தலை குனிகிறேன்.இனிமேல் எனக்கு தேசதந்தை நேதாஜி தான்… உண்மை செய்தி வெளியிட்ட ஆசிரியருக்கு நன்றி…

 17. காந்தியைப்பற்றி யார் எவ்வாறு எழுதினாலும் அவரின்
  கொள்கைகள் உலக மக்களால் ஏற்கப்பட்டது. போற்றப்படுகிறது.

  தனிமனிதனின் வாழ்விற்கும் அவரின் பொதுவாழ்விற்கும் இடைவெளிகளதிகமாகவும் இருக்கலாம்.

  இந்தியா என்ற நாடு காந்தியால் அறியப்படுகிறது.
  காந்தியை உளமாற ஏற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் இந்த விடயங்கள் தெரியாமலா என்ன. தெரிந்திருக்கிறது.

Comments are closed.