ஒரு இந்திய எம்பியின் சம்பளம் 1.50 லட்சம் இது போதாது என்கிறார்கள்.

உலகத்திலேயே ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும் கோடீஸ்வர முதலாளிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள் வந்து செல்லும் காபி ஷாப் என்றுதான் கிண்டலாக இந்திய நாடாளுமன்றத்தை அழைக்கிறார்கள். முற்போக்கு ஜனநாயகச் சக்திகள். மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பது, சொத்துக்களை வாங்கி குவிப்பது, குடும்பத் தொழிலை பாதுகாத்துக் கொள்வதற்காக எம்பியாவது என்று இந்திய பாராளுமன்றமே இந்திய மக்களிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் நிலையில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில் எம்பிக்களின் ஊதியம் இதுவரை இல்லாத அளவு உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பி.க்களின் ஊதியத்தை 3 மடங்காக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களுக்கு மாதம்தோறும் இப்போது | 16 ஆயிரம் அடிப்படை ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. எம்.பி.க்களின் ஊதிய உயர்வு கோரிக்கை நீண்ட நாள்களாக பரிசீலிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் ஊதிய உயர்வு மசோதா தயாரிக்கப்பட்டது. இதில் எம்.பி.க்களின் அடிப்படை ஊதியத்தை | 16 ஆயிரத்திலிருந்து | 50 ஆயிரமாக உயர்த்த வழிவகை செய்யப்பட்டது. மத்திய அரசு துறை செயலர்களை விட கூடுதலாக எம்.பி.க்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும் என்று நாடாளுமன்றக் கமிட்டி பரிந்துரை செய்திருந்தது. இப்போது அரசுதுறை செயலர்கள் ரூ.80 ஆயிரம் ஊதியம் பெறுகின்றனர். ஆனால் எம்.பி.க்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்.பி.க்களின் அலுவலகச் செலவுக்காக வழங்கப்பட்டு வந்த தொகை 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொகுதிப் படி 20 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டிருப்பதற்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. எம்.பி.க்கள் தனிப்பட்ட முறையில் வாகனம் வாங்குவதற்கு 1 லட்சம் வரையில் வட்டியில்லாத கடன் வழங்கப்பட்டு வந்தது. இது 4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலை வழியாக எம்.பி.க்கள் வாகனங்களில் செல்லும் ஒரு கிலோமீட்டருக்கு |13 வழங்கப்பட்டு வந்தது. இது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.