ஒருபால் உறவு கொண்ட பேராசிரியர் இந்தியாவில் பணிநீக்கம்.

வட இந்தியாவில் இருக்கும் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் ஸ்ரீரிநிவாஸ் ராமச்சந்திர சிரஸ், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்குள் ஒரு ஆணோடு ஒருபால் உறவில் ஈடுபட்டதை ஊடகவியலாளர் ஒருவர் தொலைக்காட்சி படமாக எடுத்து, பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்ததாகவும், அதனைத்தொடர்ந்து அந்த பேராசிரியர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வயதுக்கு வந்த இருவருக்கு இடையிலான பரஸ்பர சம்மதத்துடனான ஒருபால் உறவு, குற்றச்செயல் அல்ல என்று புது தில்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்திருந்த நிலையில், இவரது இந்த பணிநீக்கம் ஒருபால் உறவுக்காரர்கள் இந்திய சமூகத்தில் இன்னமும் சந்தித்துவரும் சிக்கல்களை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.

One thought on “ஒருபால் உறவு கொண்ட பேராசிரியர் இந்தியாவில் பணிநீக்கம்.”

  1. பேராசிரியரே இந்திய பண்பாட்டுக்கு மாறாக நடந்துகொள்கிறார் என்றால் இதனை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் பலர் பண்பாட்டுச் சீரழிவில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். கண்டிக்கத்தக்கது.

Comments are closed.