ஒரினச் சேர்க்கையாளரை ஆயராக தேர்ந்தெடுத்திருப்பதற்கு காண்டர்பரி பேராயர் எச்சரிக்கை!

bbcஅமெரிக்காவில் உள்ள எபிஸ்கோபல் திருச்சபை, ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரை இரண்டாவது தடவையாக ஆயராகத் தேர்ந்தெடுத்திருப்பது அந்த திருச்சபைக்குள்ளும், உலகெங்கிலும் உள்ள ஆங்கிலிக்கன் திருச்சபை மக்கள் மத்தியிலும் கடுமையான பின்விளைவுகளை தோற்றுவிக்கும் என காண்டர்பரி பேராயர் எச்சரித்துள்ளார்.

ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களை திருச்சபையில் முக்கிய பதவிகளில் நியமிப்பதில் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிப்பது என்று அங்கிலிக்கன் திருச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க திருச்சபைக்கு பேராயர் டாக்டர். ரோவன் வில்லியம்ஸ் நினைவூட்டியுள்ளார்.

தற்போதைய ஓரினச் சேர்க்கையாளர் தெரிவுக்கு இன்னும் ஒப்புதல் கிடைத்துவிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கேனன் மேரி கிளாஸ்பூல் லாஸ் எஞ்செலிஸ் நகரின் துணை ஆயராக தேர்வு செய்யப்பட்டுள்ள முடிவை எபிஸ்கோபல் திருச்சபை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்கான வேண்டுகோள்தான் பேராயர் ரோவன் வில்லியம்ஸின் இந்த எச்சரிக்கை என்று செய்தியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

BBC.