ஒரிசாவில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுகொலை?

ஒரிசா மாநிலம் சோராபுட் மாவட்டம் பாலூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 3 பேர் காயம் அடைந்தனர் என பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை இனப்படுகொலைகளின் பின்னர் இந்திய அரசாங்கம் ஆரம்பித்திருக்கும் ஒப்பரேசன் கிரீன் ஹண்ட் பல அப்பவிப் பொது மக்களைப் பலி கொண்டுள்ளது. கனிமங்களையும் மினரல் நீரையும் பெரும் நிறுவனங்களுக்காக அபகரிக்க முனையும் இந்திய அரசின் இராணுவ நடவடிக்கைகள் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருப்பது தெருந்ததே.