ஒபாமா மும்பாயில்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தன் மனைவி மிச்செலுடன்  மும்பை சத்திரபதி விமாந்ன நிலையத்தில் வந்திறங்கினார்.

சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட ஒபாமா மற்றும் அவரது மனைவியை மகாராஷ்டிரா முதல்வர் அசோக் சவான் வரவேற்றார். அவருடன் சல்மான் குர்ஷேத் இருந்தார்.

இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் டிமதி ரோமர் அதிபர் ஒபாமாவை கட்டித் தழுவி வரவேற்றார்.

விமானநிலையத்திலிருந்து ஒபாமாவும் அவரது மனைவியும் ஹெலிகாப்டரில் மரைன் ஒன் புறப்பட்டுச் சென்றனர். அங்கிருந்து அவர்கள் தங்கும் விடுதியான டாஜ் விடுதிக்கு வருகின்றனர்.

ஒபாமாவின் வருகையை முன்னிட்டு மும்பை நகரமே இன்று பெரும் பாதுகாப்பு கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபராக பதவியேற்று தன் முதல் பதவிக்காலத்திலேயே இந்தியாவுக்கு வருகை தரும் முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் ஒன்றரை நாட்களுக்கு இருந்து பிறகு தலைநகர் புது டெல்லி செல்கிறார். இங்கு பிரதமர் மன்மோகன் சிங்கை அவர் சந்திக்கிறார்.

மகாத்மா காந்தி சமாதியையும் ஒபாமா பார்வையிடுகிறார்.