ஒபாமா : துணை அதிபருக்கான வேட்பாளர் தெரிவு

வாஷிங்டன், ஆக. 23: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா, தன்னுடைய துணை அதிபர் வேட்பாளரை தேர்வு செய்துள்ளார்.
.
அமெரிக்காவில் நடைபெறவுள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு பாரக் ஒபாமா போட்டியிடுகிறார். அமெரிக்க தேர்தல் வழக்கப்படி தேர்தலுக்கு முன்பாக துணை அதிபருக்கான வேட்பாளரும் தேர்வு செய்யப்படுவார்.  அதிபர் வேட்பாளர் இதனை அறிவிப்பார்.

இந்நிலையில் பாரக் ஒபாமா, தன்னோடு தேர்தல் களத்தில் நிற்கும் துணை அதிபர் வேட்பாளராக அமெரிக்க எம்பி ஜோசப் பைடனை தேர்வு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.