ஒபாமாவின் முடிவு : எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்

obamaஆப்கானுக்கு கூடுதலாக 30 ஆயிரம் படையினரை அனுப்புவது என்ற அமெரிக்க அதிபர் ஒபாமாவின் முடிவு, தங்களின் எதிர்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று ஆப்கானில் உள்ள தாலிபான்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்காவின் போர் உக்திகள் வெற்றி பெறாது என்றும், இது வெளிநாட்டுத் துருப்புக்கள் மத்தியில் அதிக அளவில் உயிர் இழப்பைத்தான் ஏற்படுத்தும் என்றும் தாலிபான்கள் ஒரு அறிக்கையில் கூறியுள்ளனர்.

தாலிபான்களால் வெல்ல முடியாது என்ற செய்தியை வலுவாக எடுத்துக் கூறவும், கிளர்சியை விட்டு கௌரவமான வழியில் வெளியேற அவர்களுக்கு ஒரு பாதையை அமைக்கவும் தான் கூடுதலாக கொடுக்கப்படும் வளங்களை பயன்படுத்த விரும்புவதாக ஆப்கானில் உள்ள அமெரிக்க மற்றும் நெட்டோ நேசப் படைகளின் தளபதியான ஜெனரல் ஸ்டான்லி மெக்கிரிஸ்டல் தெரிவித்துள்ளார்.