ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- டி.கே.ரங்கராஜன் கொழும்பில் பேச்சு.

கொழும்பு நகரில் இலங்கை கம்யூ னிஸ்ட் கட்சியின் 19வது தேசிய மாநாடு ஆகஸ்ட் 27 வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்க ராஜன் பங்கேற்றுள்ளார். மாநாட்டில் உரையாற்றிய அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சனை குறித்து பேசியது வருமாறு:-இலங்கை நிகழ்வுகளை, குறிப் பாக நாட்டில் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மை தொடர்பான நிகழ்வுகளை, தொடர்ந்து கவனித்து வருகிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விரைந்து எடுக்க வேண்டிய அரசியல் தீர்வுக்கான தேவை உள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொள்கிறது. ஒன்றுபட்ட இலங்கை அமைப்புக் குள்ளேயே தமிழ் பேசும் பகுதிகளுக்கு அதிகார மாற்றங்களோடு தன்னாட்சி உரிமையினையும் வழங்குவதை உள்ள டக்கியதாக அது இருக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம். அத்தகைய தீர்வு இலங்கையின் ஒற்றுமையினை யும், ஒருமைப்பாட்டினையும் வலுப்ப டுத்தும் என நாங்கள் உணர்கிறோம். அப்படியொரு தீர்வுக்கு பாடுபடும் போதே உடனடியாக மூன்று பிரதான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண் டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவா ரணம் வழங்குதல், மறுவாழ்வு மற்றும் மறுகுடியேற்றத்திற்கான நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எங்கள் கருத்து. இலங்கைத் தமிழ் குடிமக்களையும், விடுதலைப் புலிகளையும் (எல்டிடிஇ) மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாகப் பார்ப்பதில்லை, வேறுபடுத்தித்தான் பார்க்கிறது. தமிழ் மக்களின் நியாய மான தேவைகளையும், உணர்வு களையும் புரிந்து கொள்ளும் அதே நேரத்தில் விடுதலைப்புலிகளின் அதி தீவிர நடவடிக்கைகளுக்கு எங்களின் எதிர்ப்பினை காட்டியிருக்கிறோம். நீண்ட யுத்தம் முடிவுக்கு வந்திருக்கும் இந்த வேளையில் யுத்தத்தினால் இடம் பெயர்ந்து நிவாரண முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் மறுகுடியேற்றம் பற்றி பிரதானமாக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

6 thoughts on “ஒன்று பட்ட இலங்கைக்குள் அரசியல் தீர்வு- டி.கே.ரங்கராஜன் கொழும்பில் பேச்சு.”

 1. சமயவாதிகள பழமைவாதிகளாக்கி இந்தக் கம்யூனிஸ்காரர் செய்யும் கூத்துக்கள் எல்லாம் கரே ராமா, க்ரே கிருஸ்னா கோசம்.சுற்றீச் சுற்றீக் கொல்லப் பக்கத்திலேயே நின்றூ கொண்டிருக்கிறார்கள்.எதையுமே உருப்பட செய்யத்தேரியாத முண்டங்கள்.முதலில் தொழிலாளர்களயாவது ஒன்றாக்குங்கள் அல்லது முதலாளீகளூக்கு முதுகு சொறீவத நிறூத்துங்கள்.தோட்டத் தொழிலாளர், ஈழத்தொழிலாளர் எனும் தோடம்பழக்கதை பேசாது இலங்கைத் தொழிலாளர் என வந்து இலங்கையை ஒன்றாக்குங்கள்.

  1. அங்கே இருந்து எல்லாக் கட்டுரைக்கும் இடுகை போட்டுக் காலத்தை வீணக்காமல் நீங்களே இங்கு வந்து வழியைக் காட்டுங்களேன்!

   1. நான் கவலைப்படுவதெல்லாம் நமக்குப் பிடிக்காத விசயங்கள நாம் புறந்தள்ளூவது.இப்படி இருந்தால் எவ்வாறூ ஜனநாயகத்தை நாம் கற்றூக் கொள்வது.

 2. இலங்கை அரசானது, தமிழ் குடிமக்கள் அனைவரையும், விடுதலைப் புலிகளாகவே பார்ப்பது உலகறிந்த உண்மை.

  மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றாகப் பார்ப்பதில்லை, வேறுபடுத்தித்தான் பார்க்கிறது. இது எங்கோ உதைக்கிறது. விடுதலைப் புலிகள் (எல்டிடிஇ)யை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ருஸ்சியாவிலிருந்து இறக்குமதி செய்ததா?.

 3. டி.கெ. ரங்கராஜன் புதிதாக ஒன்றையும் சொல்லிவிடவுமில்லை, அவருக்கு அந்த அளவுக்கப்பால் தமிழரின் வரலாறும்,, வலியும்,,, குறிப்பாக ஜதார்த்தமும்,,,, புரியவுமில்லை,, புரியப்போவதுமில்லை,
  சிங்கள் அரசாங்கத்தின் குரலாக, இந்தியாவின் குரலாக, அரைத்த விடயத்தை திரும்ப அரைக்கிறார், புலிகளையும் தமிழர்களையும் வேறுபடுத்திபார்க்கிறாராம், அவையெல்லாம் அவரதும் அவரது கை காலில்லாத கட்சியினதும் தனிப்பட்டகருத்து, எவரும் பொருட்படுத்தப்போவதுமில்லை ஆனாலும் அவர் தனது பொழுதுபோக்கிற்கு பயித்தியக்காரத்தனமாக பேசிவைக்க , வாசிப்பவர்கள் சிலர் இதுவும் ஒரு பெரிய பொறுப்பான கட்சியோ என்று நம்பிவிடவுங்க்கூடும்,
  அவரும் அவரது கும்பல்லை கோவிந்தா என்ற பேச்சும் எரிச்சலைத்தூண்டுகிறது

 4. LPG என்கிற Libaralitation, Privatation, Globalaitation-அதாவது தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கோட்பாட்டிற்கு எல்லா நாடுகளும் தள்ளப்பட்ட 90களுக்கு பிறகான மாற்றங்களே பல இயக்க நடவடிக்கைகளில் தடை ஏற்படக்காரணமானது. இதை மாற்றத்திற்கு முயற்சி மேற்கொண்ட அந்நாட்களிலேயே கடுமையாக எதிர்த்தவர்கள் மார்க்சிஸ்ட்கள். ஆனால் அப்போது வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்துகிறார்கள் என அவர்களின் விமர்சன பார்வை புறந்தள்ளப்பட்டது. ஆனால் சமீபத்தில் பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்தது.எனவே இப்பார்வை சரியானது என்பதே நினைக்கிறேன்.

Comments are closed.