ஒட்டுசுட்டான்;விஸ்வமடு ஆகிய பகுதிகள் யுத்தசூனியப் பிரதேசங்களாகப் பிரகடனம்.

04.09.2008.

கிளிநொச்சி நகரிலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் அரசாங்கப் படைகள் நிலைகொண்டிருப்பதாகவும், இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்பாகத் தங்குவதற்காக விஸ்வமடு மற்றும் ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளை யுத்தசூனியப் பிரதேசங்களாகப் பிரகடனப்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைமையக் கட்டடங்கள் மீது நடத்தப்பட்டுவரும் விமானத் தாக்குதல்களைத் தொடர்ந்து கிளிநொச்சியிலிருந்து கிழக்கு நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து வருவதாகத் தெரியவருகிறது.
இடம்பெயர்ந்த மக்களுக்காக 51 லொறிகளில் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 22 லொறி உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமில்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இந்த உணவுப் பொருள்கள் இரண்டு வாரங்களுக்குப் போதுமானவையென அவர் தெரிவித்துள்ளார்.