ஒசாமா பின் லேடனின் மகன் சாத் பின் லேடன் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தானில் அமெரிக்க படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் மகன் சாத் பின் லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க தேசிய வானொலி தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் சாத் பலியாகியிருப்பதாகவும் அந்த வானொலிச் செய்தி தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள அமெரிக்க ரேடியோ. சாத் பின் லேடன் இறந்து விட்டது 85 சதவீதம் உண்மை என்றும் அந்த செய்தி கூறுகிறது.

சாத் பின் லேடன், ஒசாமாவின் இளைய மகன் ஆவார். அல் கொய்தா அமைப்பில் இவரும் ஒரு உறுப்பினராக இருந்தார். தனது தந்தையுடனேயே இருந்து வந்தார். இருப்பினும் அல் கொய்தா அமைப்பில் இவர் முக்கியப் பங்காற்றவில்லை என்று தெரிகிறது.