ஐ… லவ்… பிரெசிடென்ட் புஷ்: தலாய்லாமா

dalai

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தலாய்லாமா என்பவர் இந்தியாவிலுள்ள ஹிமாச்சல் மாநிலத்திலுள்ள‌ தரம்ஷாலாவில் உல்லாச‌ விடுதி நடத்தும் ஒரு தொழிலதிபர். இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அவ்வப்போது இங்கு வந்து ஓய்வு எடுக்கிறார்களாம். மேலும் இவர் பகட்டான வாழ்க்கையின் சிகரம். பொழுதுபோக்கு நச்சத்திரங்கள் எல்லாம் இவருடை விசிறிகள். மேற்கத்திய அரசியல் சிந்தனையில் ஊறித்திளைக்கும் பல சிந்தனையாளர்களின் வாயில் மெல்லப்படும் அவல் இவர். சில சமயங்களில் விளம்பரங்களிலும் நடிக்கும் ஸ்டார். ‘வோக்எனப்படும் ஃபாஷன் பத்திரிக்கையின் கெளவரவ ஆசிரியராகவும் உள்ளவர் இவர் இந்தியாவுக்கு தஞ்சம் தேடுவதற்கு முன் 1960 களிலேயே 14 மாடிவரைக் கட்டப்பட்ட 1000 (ஆயிரம்) அறைகள் கொண்டபொட்டாலாஅரண்மனையில் வாழ்ந்தவர். சகதிபெத்தியர்கள் வறுமையில் வாடும்போது இவருக்கு மட்டும் இந்த வாழ்க்கை அவருக்கு தேவையானதாக இருந்தது ஏனெனில், இவர் புனிதம் மிகுந்தவர். மேட்டுக்குடியினைச் சார்ந்தவர். எனவே அதில் ஒன்றும் தவறு கிடையாது போலும் ! மேலும் இவர் உலக வாழ்க்கையைத் துறந்த துறவியல்லவா !! அவர் ஒருமான்க்‘.உலகில் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் போர்களைப் பற்றி எவ்வித மூச்சும் விடாதவர். இருப்பினும் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இவர் ஆஃப்கான் மற்றும் ஈராக் போர்களைப் பற்றி எந்த எதிர்ப்பும் சொல்லாதவர். இஸ்ரேல் அனுதினமும் பாலஸ்தீனர்களைக் கொன்று குவித்தாலும், இஸ்ரேலுக்கு சென்று பாலஸ்தீனர்களிடம் அறிவுரைக் கூறியவர். வன்முறை வேண்டாம்என்பது தான் பாலஸ்தீனர்களை நோக்கி அவர்கூறிய அந்த அறிவுரை. அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றவரல்லவா ? அதனால் தான் அந்த அறிவுரை. இவர் சீனாவிடமிருந்து தப்பி வருவதற்கு முன்பு, இவர் ஏதோ சீனாவினை எதிர்த்து வன்முறையில் ஈடுபடாதவர் போல, இவரிடமிருந்து இந்த அறிவுரை.
பிரெசிடெண்ட் புஷ்ஷை நேசிக்கின்றேன் என பறைசாற்றியவர். இப்போது, ஈராக் போரைப் பற்றியும் ஆஃப்கான் போரைப்பற்றியும் ஏதோ மூச்சு விட்டுள்ளாராம். அப்போர்கள் எந்த வகையைச் சேர்ந்தது என சொல்வது கடினம்என அருள் பாலித்துள்ளார்.நன்றி- http://vilambi.blogspot.com/2009/10/blog-post.html