ஐ.நா குழு – சவால்களை முறியடிப்போம் : இலங்கை

ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. உரிய வகையில் எமது எதிர்ப்பை நாம் தெரி வித்துள்ளோம். எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை முகம்கொடுக்க தயாராக இருப்பதாக அமை ச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஆலோசனைக் குழுவுக்கு உதவியாக 8 பேர் கொண்ட மற்றொரு குழுவை ஐ.நா. செயலாளர் நியமித்திருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன. கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம். இதே போன்று வேறு நாடுகளுக்கு எதிராகவும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. அடுத்து என்ன நடக்கிறது என நாம் காத்திருக்கிறோம் என்றார். ஐ.நா. செயலாளர் நியமித்துள்ள குழு தொடர்பாக ஏனைய நாடுகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். ஐ.நா. செயலாளர் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுத்தால் நாமும் அதற்கேற்ப செயற்படுவோம்.

One thought on “ஐ.நா குழு – சவால்களை முறியடிப்போம் : இலங்கை”

  1. இலங்கை ஒரு நாடகம் இதில் அய்.நா. ஒரு நாடகம் இடையில் அகப்பட்ட் தமிழ்ர் நிலைதான் அந்தோ பரிதாபம்.

Comments are closed.