ஐ.நா. அலுவலகம் முற்றுகையிடப்படும்: விமல் வீரவன்ச எச்சரிக்கை

இலங்கையின் இறைமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவை கலைக்காவிட்டால் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலத்தை முற்றுகையிடப்போவதாக இலங்கையின் அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான விமல் வீரவன்ச அரசாங்கத்தின் அமைச்சராக செயற்படுகிறார். இந்தநிலையில் இலங்கை தொடர்பாக ஆராய்வதற்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவை தாம் வன்மையாக கண்டிப்பதாக அவர் கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார் ஏற்கனவே அரசாங்கத்தின் அங்கமான ஜாதிக ஹெல உறுமய கட்சியும் நிபுணர் குழு நியமனத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.