ஐ.எம்.எப் அதிபர் ஸ்ரொஸ்கான் மீது செருப்பு வீச்சு : பல்கலைக் கழக மாணவன் கைது

Strauss-Kahnதுருக்கி, இஸ்தான்புல் பல்கலைக் கழகத்க்க்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) அதிபர் டொமினி ஸ்ரொஸ்கான் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த போது அவர் மீது செருப்பு வீசப்பட்டது. செருப்பு வீசிய மாணவனைப் பொலீசார் கைதுசெய்தனர். உலக வங்கியும், ஐ.எம்.எப் உம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத் தொடருக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிகழ்ந்த ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் பலர் கைது செய்யப்பட்டனர்.