ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்

பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக ஐரோப்பா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடிப் பெற்றுக்கொண்ட உரிமைகளான ஓய்வூதியத் திட்டம், வேலையற்றோருகான உதவித்தொகை, குழந்தைகளுக்கான உதவித்தொகை, வதிவிட உதவித்தொகை போன்றவற்றை சிறுகச் சிறுக நீக்கும் முயற்சியில் உலக முதலாளித்துவம் முனைப்புக்காட்டி வருகிறது. மக்கள் அரசுகளுக்கு எதிரான போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். பிரித்தானியாவில் அதன் தொழிற்சங்கங்களின் பலம் குன்றியிருப்பதால் உடனடியான போராட்டங்கள் எதுவும் உருவாகவில்லை. ஆனால் அதற்கான சூழல் காணப்படுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 2ம் திகதி நடந்த ஆர்ப்பாட்டங்களில் பிரான்ஸ் முழுவதும் 2 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். எதிர்வரும் 12ம் திகதி தொழிற்சங்கங்கள் புதிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளன. பிரஞ்சு அரசும் அதன் தலைவருமான நிக்கோலா சார்க்கோசி எந்த குறைந்த பட்ச உடன்பாடிற்கும் முன்வரத் தயாராகவில்லை. அதே வேளை பிழைப்புவாதத் தொழிற்சங்கங்கள் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தக்கூடாது என அழைப்புவிடுக்கின்றனர். உழைக்கும் மக்கள் அதற்குத் தயாராக இல்லாத நிலையில் போராட்டங்கள் தொடரும் என தெரிவிக்க்கப்படுகிறது.

2 thoughts on “ஐரோப்பாவில் தொடரும் உரிமைப் போராட்டங்கள்”

  1. பிரான்சில் மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட இனமான தமிழர்கள் வாழும் நாடுகளில் இப்படி எத்தனை போராட்டங்கள் நடக்கின்றன! பிரான்சில் சமூக பாதுகாப்பு இயக்கம் நடத்திய சில நிகழ்வுகளையும் ஜேர்மனியில் சிலர் பங்குபற்றிய சம்பவங்களையும் தவிர நாம் எதையும் காணவில்லை. மார்க்சியம் கதைக்கும் நம்மவர்கள் வெற்று வேட்டுக்கள் தான்….
    இனம் காண்போம்….

    1. பம்பலுக்கு கதைக்கிற விசயங்கள எல்லாம் இப்படி நீங்க எக்ஸ் fபாக்டர் பார்க்கிற நேரத்தில கதைக்கிறதே.மாவே சீனாவில முப்பது மில்லியன் சனத்தக் கொண்டவராம்,சாப்பாட்டு கிடைக்காமலே சனம் செத்துப் போட்டுது.இதை ஆராய்ந்து எழுதி சென் நோபல் வாங்கியது உங்கலுக்கு தெரியுமே/

Comments are closed.