ஐரோப்பாவில் தஸ்லிமா தஞ்சம்.

31.08.2008

தில்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வங்கதேச பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின், ஐரோப்பாவில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளார்.

இந்தியாவில் தஞ்சம் அடைந்திருந்த தஸ்லிமாவுக்குக் கொல்கத்தாவில் தங்கியிருந்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு அவர் தில்லியில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் இந்தியாவிலிருந்து வெளியேறி ஐரோப்பாவில் தஞ்சமடைய தஸ்லிமா முடிவு செய்திருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.