ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடத்திற்காக சீனாவின் உதவியைக் கோரியுள்ளது இந்தியா.

சீனாவுக்கும் இந்தியாவுக்குமிடையிலான தூதரக உறவு ஏற்பட்டு அறுபது ஆண்டுகள் நிரைவடைந்ததை ஒட்டி இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் சீனாவுக்கு அரசு முறைப் பயணமாகச் சென்றுள்ளார். சீன அதிபர் ஹூ ஜிண்டோவுடன் மூன்று ஒப்பந்தங்களைச் செய்து கொண்ட பிரதீபா பாட்டீல் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்த உறுப்பினர் பதவி கிடைக்க சீனா உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கடந்த மாதம் சீனாவில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தபோது இதே கோரிக்கையை முன்வைத்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக சீனா உள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் “வீட்டோ’ அதிகாரம் பெற்ற உறுப்பினர் நாடுகளாக உள்ளன. இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர அனைத்து நாடுகளும் விரும்பினாலும், ஒட்டுமொத்தமாக பாதுகாப்புக் கவுன்சிலையே சீரமைக்க விரும்புகின்றன. ஆனால் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி கிடைக்கும் பட்சத்தில் அது ஆசியப் பிராந்தியத்தில் நடைபெறும் எல்லா மனித உரிமை மீறல்களையும் உலகின் கண்களில் இருந்து மறைத்து விடும் என்பதோடு பயங்கரவாத இலங்கை அரசை பாதுகாப்பதும் இந்தியாதான் என்பது குறிப்பிடத் தக்கது.