ஐ.நா.வின் நடுநிலைக்கு வல்லரசுகளால் கறை

02 – July – 2008
ஐ.நா.வின் நடுநிலைத்தன்மைக்கு வல்லரசுகள் கறையை ஏற்படுத்தியிருப்பதாக அந்த அமைப்பின் உயரதிகாரி ஒருவர் திங்கட்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவரும் தருணத்தில் வல்லரசுகள் ஐ.நா.வின் நடுநிலைத்தன்மை என்ற பிரதிமைக்கு வடுவை ஏற்படுத்தியிருப்பதாக முன்னாள் அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சரும் ஐ.நா.வின் சிரேஷ்ட இராஜதந்திரியுமான லக்தார் பிராகிமி சாடியுள்ளார்.
ஈராக், ஆப்கானிஸ்தானில் அரசாங்கங்களை அமைப்பதற்கு உதவியிருந்த பிராகிமி உலகிலுள்ள ஐ.நா.வின் 20 நிலையங்களின் பாதுகாப்புத் தொடர்பான மதிப்பீட்டு ஆய்வைத் தற்போது பூர்த்தி செய்திருக்கிறார்.
ஐ.நா.வை பக்கச்சார்பற்றதென நீண்டகாலத்துக்குப் பார்க்க முடியாத நிலைமை உள்ளதாக ஐ.நா. அலுவல்கள் தமது குழுவுக்குக் கூறியதாக நிருபர்களிடம் பிராகிமி கூறியுள்ளார்.
ஐ.நா. குழு எங்கு சென்றாலும் பணியாளர்கள் இது தொடர்பாக திரும்பத்திரும்ப கூறியிருப்பதாகவும் அரபு மற்றும் முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாது ஜெனீவா, ரோம் , நைரோபி, இலங்கை போன்ற நாடுகளிலும் கடந்த சில வருடங்களாக இந்தத் தன்மை காணப்படுகிறது.
அதாவது ஐ.நா. பக்கச்சார்பற்றதாகவும் சுயாதீனமானதாகவும் இருக்கின்ற நிலைப்பாட்டில் அதிகளவிலானோர் இல்லை . மத்திய கிழக்கில் என்ன நடக்கின்றது . அங்கு அதிகளவில் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், பலம் வாய்ந்தவர்கள் (வல்லரசுகள்) ஐ.நா.வில் செல்வாக்குச் செலுத்த தமது பலத்தைப் பயன்படுத்துகின்றனர். அதனால், சர்வதேச அமைப்பானது தனது 192 உறுப்பினர்களுக்குப் பதிலாக பேசமுடிவதில்லை என்றும் பிராகிமி விசனம் தெரிவித்திருக்கிறார்.
பிராகிமியின் 103 பக்க அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
அல்ஜீரியாவிலுள்ள ஐ.நா.அலுவலகத்தில் டிசம்பரில் அல்ஹய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய குழுவொன்று தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே ஐ.நா. ஊழியரின் பாதுகாப்புத் தொடர்பான மதிப்பீட்டறிக்கையை தயாரிக்கும் பணி ஆரம்பமானது.
ஐ.நா.வின் பாதுகாப்பு கட்டமைப்பு கலாசாரம் , ஐ.நா.வின் மதிப்பு துரிதமாக வீழ்ச்சியடைந்து வருகின்றமை, ஐ.நா. அமைப்பிற்கான அச்சுறுத்தல்கள் தொடர்பாக உறுப்பு நாடுகள் தொடர்பாடலை மேற்கொள்ளாமை, பாதுகாப்பு வழங்காமை .
தமது நடவடிக்கைகளால் களத்திலுள்ள அலுவலரின் ஆபத்தான நிலைமை எவ்வளவுக்கு உள்ளது என்பது குறித்து ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையும் அதன் இதர அமைப்புகளும் அடையாளம் கண்டு கொள்வதிலுள்ள போதாத தன்மை என்பன பற்றி விரிவாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.