ஐக்கியநாடுகள் காரியாலயம் சுற்றிவளைப்பு – இலங்கை அரசின் நாடகம் : தொலைபேசி உரையாடல் இணைப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் விமல் வீரவன்ச தலைமையில் நடந்த சுற்றிவளைப்பும் ஆர்ப்பாட்டமும் இலங்கை அரச ஆதரவுடனேயே நடைபெற்றுள்ளது என்பதை லங்கா ருத் என்ற செய்த்திப் பத்திரிகை அம்ப்பலப்படுத்தியுள்ளது. சிங்களத்தில் இடம்பெறும் உரையாடலும் அதன் தமிழாக்கமும் கீழே தரப்பட்டுள்ளது. இந்த உரையாடலில் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோதாபய ராஜபக்சவிற்கும் விமல் வீரவன்சவிற்கும் இடையிலானதாகும்.
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, விமல் வீரவன்ஸ தனது கையடக்க தொலைபேசியில் பாதுகாப்புச் செயலாளரை தொடர்பு கொண்ட போது, குறித்த காவல்துறை அதிகாரி மற்றுமொரு அழைப்பை மேற்கொண்டிருந்தார்.

“சார் பாதுகாப்பு செயலாளர் பேசுவதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ கூறுகிறார்.”

இதன் பின்னர் விமல் வீரவன்ஸ தனது கையடக்க தொலைபேசியை காவற்துறை அதிகாரியிடம் வழங்குகிறார்.

அப்போது அந்த காவற்துறை அதிகாரி‐ சார்.

பாதுகாப்புச் செயலாளர்: அந்த பக்கத்திற்கு காவற்துறையை அனுப்ப வேண்டாம் என ஐ.ஜீயிடம் கூறினேன்.

காவற்துறை அதிகாரி: ஐ.ஜீ. கூறியதால்தான் வந்தோம்.

பாதுகாப்புச் செயலாளர்: உடனடியாக அந்த இடத்தில் இருந்து காவற்துறையினரை அப்புறப்படுத்துங்கள். அனைத்து காவற்துறையினரையும் அப்புறப்படுத்துங்கள்.

காவற்துறை அதிகாரி: சரி சார் சரி.

பாதுகாப்புச் செயலாளர்: தேவையில்லாத வேலைதானே, ஏன் அவர்களை தாக்கினீர்கள்.
காவற்துறை அதிகாரி: சரி சார் சரி.

பாதுகாப்புச் செயலாளர் : ஏன் அவர்களை தாக்கனீர்கள். நான் இன்றே ஐ.ஜீ பதவி நீக்கம் செய்கிறேன்.

காவற்துறை அதிகாரி. நல்லது சார்.

பாதுகாப்புச் செயலாளர் அங்கிருந்து காவற்துறையினர் அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள்.

காவற்துறை அதிகாரி : நல்லது சார்.

பாதுகாப்புச் செயலாளர்: ஒரு காவற்துறை அதிகாரியைக் கூட அந்த பகுதியில் நிறுத்த வேண்டாம்..

இதன் பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அந்த காவற்துறை அதிகாரியை தாக்குகின்றனர்.

இது இவ்வாறிருக்க ஆர்ப்பாட்டத்திற்கும் தமக்கும் தொடர்ப்பில்லை என இலங்கை அரசு ஐ. நாவிற்குத் தெரிவித்திருக்கிறது.
இவ்வாறான ஒரு நாடகத்தையே இந்திய அரசுடன் இலங்கை மேற்கொண்டதாக பின்னர் ஒப்புதல் வாக்குமூலம் மகிந்த கோதாபய ஆகியோரால் வழங்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

-சிங்களத்திலான உரையாடல்-