ஏற்கனவே அமரிக்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்ட கோதாபாய ரஜபக்ச

gothaஇந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள்,அமர்வுக்காக சென்றிருந்த இலங்கைக் குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவும் உள்ளடங்கியிருந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

இந்தநிலையில்,அமெரிக்காவுக்கு சென்ற பின்னர் அமரிக்க குடிவரவு அதிகாரிகள் கோத்தபாயவை சுமார் ஒரு மணித்தியாலமாக விசாரணை செய்துள்ளனர்.

எனினும், இந்த விடயம் அந்த வேளையில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை என விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்

கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குறித்து விசாரணை செய்ய அமெரிக்காவுக்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தெரிவித்துள்ள விமல் வீரவன்ச,

வெளிநாட்டு சக்திகள், இலங்கையின் இராணுவ வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றன என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.