‘ஏக்கோனுக்கு’ த் தடை – சக்தி – சிரசவிற்கு குண்டர் தாக்குதல் : சுதந்திரத்திற்கான அரங்கின் அழைப்பாளர் குழு

உலகத்தில் பிரசித்தி பெற்ற பாடகரும் பாடலாசிரியருமான ‘ஏக்கோனின்’ இசைக் கச்சேரியை இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஊடக அனுசரணை வழங்க ஒப்புக்கொண்டிருந்தமையால் ‘சக்தி’ – ‘சிரச’ ஊடக நிலையம் குண்டர்களால் தாக்கப்பட்டது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகத்திற்கு மற்றுமோர் பாரிய சவால் விடுக்கப்பட்டுள்ளது.

குண்டர்களின் தாக்குதல் இடம் பெற்ற போது சிரஸ – சக்தி ஊழியர்கள் உடனடியாகப் பொலிசாருக்கு முறையிட்டனர். ஆனால். பொலிசார் உடனடியாகத் தலையிட்டு பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டனர்.

இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு பின்னர் உடனடியாகப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

சிரஸ – சக்தி கைவசமுள்ள வீடியோ நாடாக்கள் மூலம் இத்தாக்குதல்களோடு தொடர்பு கொண்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்யக் கூடிய சந்தர்ப்பம் இருந்தும் அவ்வாறு செய்யவில்லை. உடனடியாகக் குற்றமிழைத்த சந்தேக நபர்களைக் கைது செய்யக் கட்டளை பிறப்பிக்காமல், வெறுமனே இச் சம்பவம் தொடர்பாக ‘முழுமையான விசாரணை’ நடத்துமாறு பொலிசாருக்குக் கட்டளையிடுவதன் மூலம், துரித நடவடி;ககைக்குப் பதிலாக ஏனைய சந்தர்ப்பங்களைப் போலவே விசாரணையை இழுத்தடித்து பிரச்சினையை மறக்கச் செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தாக்குதலை நடத்தியவர்கள் வருகை தந்த பஸ் வண்டியிலேயே தாக்குதல் முடிவுற்றதும் குண்டர்கள் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பஸ் வண்டியைப் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டாலும் இந்த பஸ் வண்டிக்குப் பொறுப்பானவர்கள் இது வரை கைது செய்யப்படவில்லை.

ஏக்கோன் இசைக் கச்சேரி ஏன் இலங்கையில் தடை செய்யப்பட்டது? அதற்கான காரணங்கள் யாவை? அவரது ஒரு பாடலுக்குப் பின்னணியில் சில நடனமாதுகள் குளிக்கும் தடாகத்தில் நடனமாடுவதை சித்தரிக்கும் காட்சி ஒரு சீடி (ஊனு) நாடாவில் பதிவு செய்யப்பட்டுள்ளமையை யாவரும் அறிவர். இந்நீர்;த்தடாகத்தின், கரையில் (மொங்கோலிய மரபைச் சேர்ந்த சிற்பம் ஒன்று) புத்தர் சிலை அமைந்துள்ளது. இதனைத் தான் சிருஷ;டிக்கவில்லை என்பதை ஏக்கோன் ஏற்கனவே கூறியிருந்தார். இலாப நோக்கோடு இத்தகைய புத்தர் சிலையைப் பயன்படுத்த ஏக்கோன் அல்லது அதன் தயாரிப்பாளர் ஈடுபட்டிருக்கலாம்..அது எப்படியிருப்பினும் புத்தர் சிலைகளைப் பயன்படுத்தி காணிகள், பணம், அரசியல் மோசடிகள் இலங்கையைப் போல வேறு எந்த நாட்டிலும் இடம்பெறுவதில்லை என்பது பகிரங்க இரகசியமாகும். இருப்பினும் இந்த சீடி (ஊனு) மூலம் இலங்கையின் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் பாரிய தீமை ஏற்படுவதால் இப்பாடகரை இலங்கைக்கு வரவழைப்பதை அரசியல் மயப்படுத்தப்பட்ட சில பௌத்த துறவிகளும் பௌத்த அடிப்படை வாதிகளும் எதிர்ப்புத் தெரிவித்து கூக்குரலிட்டிருருந்தனர். பாரிய சிங்கள பௌத்த அரசியல் அதிகாரம் இருக்கின்றமையால் ஏக்கோனின் உத்தேச இசைக் கச்சேரியை இரத்து செய்வது இப்பௌத்த துறவிகளுக்கு சிறு விடயம். அது அவ்வாறு இருக்க சிரஸ – சக்தி நிறுவனம் ஏன் தாக்கப்பட்டது? அதன் குறிக்கோள் வேறு ஒன்றல்லவா?

கருத்துச் சுதந்திரம் தகவல்களைப் பெறும் சுதந்திரம் ஜனநாயகச் சமூகத்தின் முன்னேற்றப்பாதைக்கும் சமூக நலனுக்கும் இன்றியமையாதது. அதே சமயம் ஏனைய மனித உரிமைகள் அடிப்படை உரிமைகள் என்பவற்றை மக்கள் அனுபவிப்பதும் ஜனநாயகச் சமூகத்திற்கு மிக மிக அவசியமாகும். தமது வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஏற்கனவே தம்முடன் செய்யப்பட்ட உடன்பாட்டிற்கு அமைய அமுலாக்கப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்க மக்களுக்கு உரிமையுண்டு. அரசியல் அறிவைப் பெறுவதற்கும், சமூகத்தின் பூரணப் பங்காளர்களாகத் திகழ்வதற்கும், தகவல்களைப் பெறுவது இன்றியமையாதது. இதனை அரசு அரசியலமைப்பின் மூலம் அங்கீகரித்துள்ளது. இவ்வங்கீகாரம் நடைமுறைப்படுத்தாத போதே பிரச்சினை ஏற்படுகின்றது.

சுயாதீனமாக செயற்படும் ஊடகங்களுக்கும் ஊடக வியலாளர்களுக்கும் எதிராக தாக்குதல்கள் இடம்பெற்ற போது அரசாங்கம் பாராமுகமாக இருக்கும் கொள்கையையே அனுசரித்து வந்தது. மக்களின் அடிப்படைச் சுதந்திரம் பறிமுதல் செய்யப்படுகையில் அவர்களைப் பாதுகாக்க பொலிசாருக்கும் நீதித்துறைக்கும் ஆற்றல் இல்லை என்பதையே அரசின் பாராமுகம் எடுத்துக் கூறுகிறது. இராணுவ நீதிமன்றங்களை அறிமுகப்படுத்தி, நீதித்துறையை திடீரென ஆக்கிரமித்து அரசு சகல எதிர்க்கட்சிகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதன் மூலம் இலங்கையில் ஜனநாயகமும் சுதந்திரமும் பாரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது.

இந்த துரதிர்ஷ;டவசமான நிலையிலிருந்து இலங்கையைக் காப்பாற்றி, ஜனநாயகத்தையும், பேச்சுச் சுதந்திரத்தையும், வெளியீட்டுச் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும், தகவல் அறியும் சுதந்திரத்தையும், பாதுகாக்கும் சவால் எம்முன் உள்ளது. இச் சவாலை ஏற்று ஜனநாயகத்தைக் காக்க செயற்பாட்டு ரீதியாக முன்வருமாறு, சகல தொழிலாள வர்க்க இயக்கங்களையும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துச் சக்திகளையும் வேண்டுகின்றோம்.

சட்டத்தரணி சுதர்சன குணவர்தன,

சட்டத்தரணி நிமல்கா பர்ணாந்து,

பிரிட்டோ பர்ணாந்து

சுதந்திரத்திற்கான அரங்கின் அழைப்பாளர் குழுவின் சார்பில்

2010 ஏப்ரல் 01

One thought on “‘ஏக்கோனுக்கு’ த் தடை – சக்தி – சிரசவிற்கு குண்டர் தாக்குதல் : சுதந்திரத்திற்கான அரங்கின் அழைப்பாளர் குழு”

  1. குதர்க்கமாய் பேசி முட்டாளாக்குவது அதுவும் முடியவிலை என்றால் கடைசி ஆயுதமாய் குண்டர்கள் ஏவுவது மூன்றாம் உலக நாடுகளீன் அரசியல் கலாச்சாரம்.இது ஒரு விதமான கருத்துத்திணீப்பு.இலங்கையில் இப்போது இது பொதுவான ஒன்றாகி விட்டமை கவலை தருகிறது.

Comments are closed.