எம்.ஆர்.ராதாவிற்குப் பிறகு முற்போக்கு நாடகங்களை நடத்தியவர் எஸ்.வி.சேகராம்- கருணாநிதி சொல்கிறார்.

ஆரம்பகாலத்தில் சபாக்களில் பார்ப்பன மொழி நடையில் பேசி நடந்து வந்த நாடகங்களை வீதிகளுக்கும் எளிய மக்களிடமும் கொண்டு சேர்த்தவர்களுள் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கும், அண்ணாதுரைக்கும், எம்.ஆர். ராதாவிற்கும் பெரும்பங்குண்டு. பல இடங்களில் ஆரம்பகாலத்தில் இவர்கள் எதிர்ப்புகளைச் சந்தித்ததும் உண்டு. நாடகத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்ட சுதந்திர போராட்ட காலத்தில் ஒடுக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. ஆனால் இங்கே ஒரு கசப்பான உண்மை என்னவென்றால் வெள்ளைக்காரர்கள் கொண்டு அதே நாடகத் தடைச் சட்டம் இன்னமும் நீக்கப்படாமல் இருக்கிறது. தங்களுக்கு வேண்டாத நாடகங்கள் அரங்கேறும் போது இச்சட்டத்தைக் கொண்டே நாடகம் நடத்துகிறவர்களைக் கைது செய்கிறது ஆளும் வர்க்கங்கள். இடது சாரிகள், புரட்சிகர அமைப்புகள், முற்போக்காளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் என பல கொள்கைகளுக்காக நாடகங்களால் போராடிய்வர்கள் வரலாற்றுப் பாத்திரத்தை இழிவு படுத்தும் விதமாக கிசு, கிசு பாணியிலான நகைச்சுவை நாடகங்களை பார்ப்பன மொழியில் நடத்திவரும் எஸ்.வீ.சேகர் என்னும் கோமாளியை நடிகவேள் எம்.ஆர்., ராதாவுக்குப் பிறகு முற்போக்கானவர் என்றூ வர்ணித்துள்ளார். இன்னமும் சென்னை நகரத்தின் பூர்வகுடிகளான உழைக்கும் மக்களை கபாலி என்றும் பெயர்களில் திருடர்களாகவும், கொலை காரர்களாகவும் சித்தரித்து ஜோக் எழுதும் பார்ப்பன எழுத்தாளர்கள் வரிசையில் வரக்கூடிய எஸ்.வி.சேகரின் நாடகப்பிரியா குழுவின் விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு. கருணாநிதி எஸ். வி.சேகர் குறித்து பேசியதாவது”

இப்படிப்பட்ட மிக எளிமையான, மிகச் சுருங்கிய அளவில், விரைவில் ஒரு நாடகத்தைத் தொடங்கி, அதனை நிறைவு செய்து அதிலே வருகின்ற நூற்றுக்கணக்கான காட்சிகள் அல்ல. பத்து, பதினைந்து காட்சிகளாயினும் அதிலே நூற்றுக்கணக்கான காட்சிகளிலே ரசிக்கின்ற கருத்துக்களை மருந்து கேப்சூல் போல வைத்துக் கொடுக்கின்ற அந்த திறமையை நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு பிறகு இன்றைக்கு எஸ்.வி.சேகரிடம்தான் காண்கின்றேன்.” என்றார். விஸ்தரிப்பு நொக்கம் கொண்டு இந்திய தேசிய அரசியல் ஒன்று கலந்து விட்ட கருணாநிதியின் உண்மையான முகம் ஒவ்வொன்றாக அவிழ்ந்து கொண்டிருக்கிறது.

2 thoughts on “எம்.ஆர்.ராதாவிற்குப் பிறகு முற்போக்கு நாடகங்களை நடத்தியவர் எஸ்.வி.சேகராம்- கருணாநிதி சொல்கிறார்.”

  1. பிரிதொரு சந்தர்ப்பத்தில் என்னுடைய மூதாதையர் பிராமணர்கள் என்று சொன்னாலும் சொல்வார்.அவர் எதற்கும் கூச்சபடபோவதில்லை.

Comments are closed.