எமது உள் விவகாரங்களில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது:சீனா

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான சர்வதேச அபய ஸ்தாபனம், தமது நாட்டில் நிலவும் மனித உரிமைகள் குறித்து வெளியிட்டிருக்கும் விமர்சனத்தை சீனா நிராகரித்துள்ளது.

சீனா குறித்து அறிந்தவர்கள் யாரும் அந்த விமர்சனத்துடன் உடன்பட மாட்டார்கள் எனக் கூறியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், சீனாவின் உள் விவகாரங்களில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது என்று மீண்டும் கூறியுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னமும் பத்து நாட்களே உள்ள நிலையில், சீனாவில் மனித உரிமைகள் நிலவரங்களில் எந்த முன்னேற்றத்தையும் காணக் கூடியதாக இல்லை என்று சர்வதேச அபய ஸ்தாபனம் கூறியிருந்தது.

One thought on “எமது உள் விவகாரங்களில் யாருடைய தலையீடும் இருக்கக் கூடாது:சீனா”

  1. ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கும் அரசியலுக்கும் இடையே உள்ள தொடர்பு. பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதில் ஊடகங்களின் பங்கு. மனித உரிமை மீறல்கள் பிரச்சினையை தமது எதிரிகளுக்கு எதிராக மட்டுமே பயன்படுத்தும் மேலைத்தேய அரசியல்வாதிகளின் சாமர்த்தியம். இது போன்ற விடயங்களை பொது மக்கள் கவனிக்க தவறுகின்றனர்.
    http://kalaiy.blogspot.com/2008/04/blog-post_05.html

Comments are closed.