என் உயிர் இருக்கும் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பேன் – பேரா.ராமசாமி.

 

மலேஷியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரும், ஈழ விடுதலை ஆதர்வாளருமான பேராசிரியர் ராமசாமி தமிழகத்தில் நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு வரக்கூடாது என்று தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய உள்துறை அமைச்சக்த்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து அவரது பெயரும் எச்சரிக்கைப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கருணாநிதி உள்ளிட்ட இந்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசியதன் விளைவாய் ராமசாமிக்கு தன் எதிர்ப்பைக் கட்டியுள்ள கருணாநிக்கு தன் எதிர்ப்பைக் காட்டியுள்ளார் ராமசாமி,

” கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிலும் மே 18 ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் மாநாட்டிலும் நான் கலந்துகொண்டேன். இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது 40, 000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்தப் படுகொலைக்கு தமிழக அரசும், இந்தியாவை ஆட்சி புரியும் காங்கிரஸ் உடந்தையாக இருந்திருக்கிறது. இந்த துரோகத்தை மறைக்க முடியாது.என் உயிர் இருக்கும் வரை தமிழீழ மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன். இந்த மாதம் 23 ம் தேதி தொடங்கி 27 ம் தேதி வரை கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டில் நான் கலந்து கொள்ளமாட்டேன். கடந்த ஜனவரி மாதம் டெல்லி பிரவாசி மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வரும்படி இந்திய அரசாங்கமே எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தது. ஆனால், அந்த அழைப்பை நான் முற்றாக புறக்கணித்தவன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர். நான் பெரியார் பாசறையைச் சேர்த்தவன் என்றார் ராமசாமி.

3 thoughts on “என் உயிர் இருக்கும் ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பேன் – பேரா.ராமசாமி.”

 1. தமிழினத்தலைவர் என்று தன்னைக் கருதிக்கொண்டிருக்கும் தமிழகத்து கருணா கருணாநிதிக்கும் அவரது கும்பலுக்கு
  பேராசிரியர் இராமசாமியின் பதில் ஒரு சவுக்கடி.
  கருணாநிதி போன்ற சுயநல கிருமிகள், வேடதாரிகள் கைவிட்டாலும் பினாங் துணைமுதல்வர் மரியாதைக்குரிய இராமசாமிபோன்றவர்கள் ஈழத்தமிழர்களை என்றும் கைவிடப்போவதில்லை என்பது இன்றைய சூழலில் ஆறுதலளிக்கிறது. இன்னமும் தன்னைபெரியாரின் சீடன் என்று கதைவிட்டபடி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் கருணாநிதி,’நான் பெரியார்பாசறையைச் சார்ந்தவன்’ என்று மலேசிய நாட்டிலிருந்து சொல்லும் பேராசிரியர் இராமசாமியிடம் மானம்,நேர்மை,உண்மையான இனஉணர்வு போன்றவற்றை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும்.
  அதிலும் மலேசியாவில் பொறுப்பில் இருக்கும் பேராசிரியர் இராமசாமி ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மட்டுமே எனக்குத் தலைவர்’.என்று அறிவித்திருப்பது தலைவர் பிராபாகரனுக்கு வழங்கப்படும் முதல் சர்வதேச அங்கீகாரமாகும்.தமிழினப்போராளி பேராசிரியர் இராமசாமிக்கு நன்றி.

  செழியன்

  1. எனது தலைவன் பிரபாகரன் என்று சொன்னதன் மூலமே, கருணாநிதி சொன்னதில்
   தவ்றில்லை என்பதனை இந்திய அரசுக்கு சாட்சியாகி கூறிவிட்டார் திரு ராம்சாமி..
   துரை

 2. ராமாசாமி அய்யா அவ்ர்களே, சங்கத் தமிழ் தரணீக்கு தந்த அய்யா கருணானிதி காலடித்தட்ம் காணூம் பாக்கிய்ம் இழ்ந்து போனீர்க்ளே.தமிழை பினாங்கில் காப்பாற்றூங்கள்.

Comments are closed.