உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலம் : சிறுபான்மையினரின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சாவுமணி

உள்ளுராட்சித் திருத்தச் சட்ட மூலத்தை அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்ப்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக அறியமுடிகிறது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தில் அடுத்த மாதம் இச்சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்ப்பட்டுள்ளது.
இச்சட்டமூலத்தில் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இச்சட்ட மூலத்தின் மூலம், உள்ளுராட்சி மன்றங்களிற்கு சிறுபான்மையின மக்களின் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படாத நிலை தோன்றலாம் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாவது திருத்தச் சட்டம் சிறுபான்மையினரின் அரசியல் பங்களிப்பை நிர்மூலமாக்கும் அதேவேளை தமிழ்ப் பேசும் மக்களை அரசியலிலிருந்து அன்னியமாக்கும் திட்டங்கள் பல் வேறு மட்டத்திலும் இடம் பெறுகின்றன.

இதே வேளை,யாழ்.மாநகரடி சபைத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் மேயர் வேட்பாளராகப் போட்டியிட்ட எஸ். சத்தியேந்திரா “ஐனநாயக மக்கள் கட்சி”எனும் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருக்கிறார். எஸ். சத்தியேந்திரா ஐ.தே.க.யின் அமைப்பாளர்களில் ஒருவராகவும் பதிவிவகித்தவர்.

-விஜய்