உலகில் படிப்பறிவில்லாத வயது வந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில்!

 
உலகில் படிப்பறிவில்லாத வயது வந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று ஐ.நா. கல்வி ஆய்வறிக்கை கூறுகிறது.

இருப்பினும் பள்ளியை விட்டு விலகுவோர் எண்ணிக்கையை குறைப்பதில் இந்தியா தீவிர முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு, அனைவருக்கும் கல்வி – உலக கண்காணிப்பு அறிக்கை என்ற ஆய்வினை புதன்கிழமையன்று (ஜனவரி 20) வெளியிட்டது. உலகில் உள்ள 75.9 கோடி படிப்பறிவு இல்லாதவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் உள்ளனர் என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

உலகின் படிப்பறிவு இல்லாதவர்களில் பாதிக்கு மேற்பட்ட வயது வந்தவர்கள் வங்கதேசம், சீனா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நான்கு நாடுகளில் உள்ளனர். இவர்கள் மேம்பாடு அடைவதில் காணப்படும் மந்தம் வேதனை அளிப்பதாகவும், ஆயிரமாண்டு மேம் பாட்டு இலக்கினை அடைவதைத் தடுத்து நிற்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தற்போது 7.2 கோடி தொடக்கப்பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளும், 7.1 கோடி இளம் பருவத்தின ரும் பள்ளிக்குச் செல்வதில்லை.

இந்நிலை நீடித்தால் 2015ம் ஆண்டில் வளர்ச்சியையும் மீறி 5.6 கோடி சிறுவர்கள் பள்ளிக்கு செல்லமாட்டார்கள் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. அரசுகள் கல்விக்கு ஒதுக் கும் நிதியை குறைப்பதற்கு நிதி நெருக்கடியும் காரணமாக இருக்கலாம் என்று ஐ.நா. அமைப்பு அஞ்சுவதாக யுனெஸ்கோ உயர் அதிகாரி ஐரினா போகோவா கூறுகிறார்.

படிப்பறிவு இல்லாதவர்கள் ஏராளமானோர் இருந்தபோதும், இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. 1985 – 94ம் ஆண்டு காலகட்டத்தில் வயது வந்தவர்களில் சுமார் 50 சதவீதத்தினர் படிப்பறிவு உடையவர்களாக இருந்தனர்.

இது தற்போது மூன்றில் இரு பங்காக உயர்ந்துள்ளது. வயது வந்தவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதி கரித்துள்ள சூழலில் இது குறிப்பிடத்தக்கதாகும் என்று அறிக்கை கூறுகிறது.

பாலின வேறுபாடு புரையோடியுள்ளது. வளரும் நாடுகளைச் சேர்ந்த 28 நாடுகளில் ஒவ்வொரு 10 சிறுவர்களுக்கும் 9க்கும் குறைவான சிறுமிகளே பள்ளிக்குச் செல்கின்றனர். மொத்த படிப்பறிவில்லாத மக்களில் மூன்றில் இரு பங்கு பெண்களாகும் என்றும் அறிக்கை சுட்டுகிறது.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி கல்வியிலும் பிரதிபலிக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் பள்ளியை விட்டு விலகும் குழந்தைகளின் எண்ணிக்கையில் 80 லட்சம் குறைந்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டம் தொடங்கப்பட்ட 2001ம் ஆண்டு முதல் பள்ளி செல்லா சிறார்களின் எண் ணிக்கையில் 1.5 கோடி குறைந்துள்ளது என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.

சர்வதேச நிதி நெருக்கடி கல்விக்கென்று அரசு ஒதுக்கும் நிதியை குறைக்கும் நிலையை ஏற்படுத்தும். அத்துடன் பள்ளிகளிலிருந்து குழந்தைகளை விலக்கிக் கொள்ளும் நிலைக்கு அல்லது பள்ளிக்கு அனுப்பாம லேயே இருக்கும் நிலைக்கு பெற்றோர்களை சர்வதேச நிதி நெருக்கடி தள்ளக் கூடும் என்று யுனெஸ்கோ நிர்வாக இயக்குநர் ஐரினா போகாவா அறிக்கையை வெளியிட்ட போது குறிப்பிட்டார்.

3 thoughts on “உலகில் படிப்பறிவில்லாத வயது வந்தவர்கள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில்!”

  1. தென் கிழக்கு ஆசியாவில் முழுமையான இலவச கல்வி பெறூம் பேற்டை பெற்றோர் இலங்கையர்களே இத்னால் இலங்கையில் தரப்படுத்தல் அரசாங்கத்தால்நடைமுரைப்படுத்தப் படுவது வேதனையான் ஒன்றூ.கடந்த கால்ங்களீல் வந்தவர்கள் தம்மை வளப்படுத்தியவர்களாகவே இருந்துள்ளனர்.இனி வருபவராவதுநாட்டை சிந்திப்பவராக இருக்க வேண்டும்.மகிந்த வருவது ஆபத்து, அவர் வந்ததே ஒரு விபத்து மருபடி வந்தாரானால்,வருவாரானால் அது இலங்கைக்கு என்ரும் மீழ முடியாத வலிகளாய் அமைந்து விடும்.இலங்கைக்கு மகிந்த மாதிரிநடிகர்கள் வேண்டாம் வேண்டவே வேண்டாம்.

  2. இந்த கணக்கெடுப்பே ஒரு பெரிய தவறு. உலக அளவில் மக்கள் தொகையில் அதிக அளவு மக்களை கொண்ட (ஜ்னநாயக) நாடுதான் இந்தியா. ஐ.நா கணக்கெடுப்பாளர்கள் சீனாவில் சென்று பார்த்தார்களா யார் யார் படிக்காதவர்கள் என்று? இந்த கணக்கெடுப்பை மொத்த எண்ணிக்கை என்கிற முறையை தவிர்த்து, விகிதாச்சார்ப்படி கண்க்கெடுத்து பார்க்க வேண்டும்.

    இப்போது, இந்த கண்க்கெடுப்பை ஐ.நா அறிவிக்க வேண்டிய அவசியத்தின் பின்புலம் என்ன்வாக இருக்கலாம்? இந்தியாவின் மீது உள்ள அக்கறையா? இல்லை இல்லை. இது போன்ற குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஊதி பெரிதாக்கி பின் இவைகளிலிருந்து நிவாரணம் பெற வேண்டுமானால் பல புதிய கல்வி சாலைகள் கட்ட உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று இந்தியாவை மேலும் மேலும் கடனாளியாக்கி கடைசியில் முழு இந்தியாவையும் திவாலாக்க முயற்சிக்கும் ஆரம்பமே.

  3. தொடர்ச்சியாய் இந்தியாவின் பன்ச்சத்தை சனல் 4 படம் பிடித்து காட்டுவதும் சூதுநிரைந்ததோ?வேற்ருக்கிரகவாசிகளாய் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அரசியல்வாதிகள் மட்டும் வசந்த மாளீகையில் வாழ்வதுநம்நாடுகளீல் வாழ்வதுநாம் அறீயாத்த என்ன?

Comments are closed.