உலகின் மிக மோசமான விபத்து போபால் துயரம் – 25 ஆண்டுகள் நிறைவு : இன்னமும் கூட உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை!

bopalபோபாலில் நச்சு வாயு கசிந்து ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த கோரச் சம்பவம் நிகழ்ந்து டிசம்பர் 3ம்தேதியுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்னமும் கூட இந்த கோர நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை நீடிக்கிறது.

மத்தியப்பிரதேச தலைநகரான போபாலில் பன்னாட்டு நிறுவனமான யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து விஷ வாயுவான மிதைல் ஐசோ சயனைட் எனும் வாயு கசிந்தது. இதில், சுமார் 15 ஆயிரத்து 274 பேர் மடிந்தனர். விஷவாயுவை சுவாசித்ததால் 5 லட்சத்து 74 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இன்னமும் கூட உடல் ஊனமுற்றவர்களாக பிறக்கின்றனர்.

இந்த வழக்கு இன்னமும் கூட முதன்மை ஜுடிசியல் மேஜிஸ்ட்ரேட் அளவில் தான் நடந்து வருகிறது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவரான வாரன் ஆண்டர்சனை இந்தியா வுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவில்லை. இதற்கு மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசுமே காரணம் என்று தன்னார் வத் தொண்டு அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

விஷவாயு கசிந்த ஆலையிலிருந்து இன்னமும் கூட நச்சுப் பொருட்கள் முழுமை யாக அகற்றப்படாத நிலை உள்ளது. 67 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த ஆலையில் இன்னமும் கூட நச்சுப் பொருட் கள் உள்ளன.

விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலை வராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது. ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். பல ஆயிரம் பேர் சாவுக்கு காரணமான இந்தவழக்கில் ஆண்டர்சன் ஒருமுறை கூட விசாரிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல உலகின் மிக மோசமான தொழிற்சாலை விபத்துகளில் ஒன் றாக கருதப்படும் போபால் விஷவாயு கசிவு தொடர்பாக, இதுவரை ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை.

யூனியன் கார்பைடு ஆலையை டோவ் கெமிக்கல் என்ற நிறுவனம் வாங்கி நடத்தி வருகிறது. மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேசும், போபால் விஷவாயு கசிவு நிவாரணத் துறை அமைச்சர் பாபுலால் கவுரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுகின்றனர் என்றும், நச்சுக் கழிவு எதுவும் ஆலைக்குள் இல்லை என்று சாதிக்கின்றனர் என்றும் தன்னார்வ அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

நச்சுக் கழிவை அகற்று மாறு வலியுறுத்தி டிசம்பர் 3ம்தேதி முதல் போராட்டம் நடத்தப்போவதாகவும் சில தன்னார்வத் தொண்டு அமைப்புகள் அறிவித்துள்ளன.

1989ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி உச்சநீதிமன்றத் தின் தலையீடு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டின் படி யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடி வழங்க வகை செய்தது. அரசுக் கணக்குப்படி 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை எந்த வகை யிலும் போதுமானது அல்ல என்பது ஒருபுறமிருக்க, இதுவும் கூட முறையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போபால் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் அப்துல் ஜப் பார் கூறியுள்ளார்.

இதனால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மட்டும்தான் 1992ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது என் றும் அவர் கூறினார். போபால் விஷவாயுவால் இறந்தோர் நினைவாக ரூ.114 கோடி செலவில் நினைவகம் அமைக் கப்போவதாக மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் அறிவித்துள்ளன. இறந்த வர்களுக்கு நினைவ கம் அமைப்பதை விட இன்னமும் உயிரோடு இருந்து சித்ரவதைப் பட்டுக் கொண் டிருக்கும் மக்களுக்கு இந்த தொகையை தரலாம் என்று தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன.

போபால் விஷவாயு விபத்து மாநிலங்களவையில் புதனன்று எதிரொலித்தது. மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் பாதிக்கப்பட்டோர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டுமென்று மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி வலியுறுத்தினார். இந்திய மக்களை என்றென்றைக்கும் உறுத்திக் கொண் டிருக்கும் ஒரு நிகழ்வாக போபால் பயங்கரம் உள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு இன்னமும் கூட உரிய நிவாரணம் கிடைக்கா மல் இருப்பது அதை விட உறுத்தலாக உள்ளது என்று அன்சாரி கூறினார்.

4 thoughts on “உலகின் மிக மோசமான விபத்து போபால் துயரம் – 25 ஆண்டுகள் நிறைவு : இன்னமும் கூட உரிய நிவாரணம் கிடைக்காத கொடுமை!”

  1. மத்தவர்கல் போல் அல்லாமல் என்னால் இன்ரு அல்ல ஒருநால் சொல்ல வேன்டாம் செயலில் கட்டுகிரேன் வெரும் செய்தியாக அல்லாமல் பாதிப்புக்கு உல்லானாவன் போல்

  2.  போபால் இறந்தவர்கள் குடுபத்தகு அரசு என்ன செய்தது 

Comments are closed.