உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர். தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. திராவிடக் கொள்கையின் மறு முகம் தமிழ்த் தேசியமாக அமைந்திருந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியாகக் கூடச் செயற்பட்டது. திராவிடக் கொள்கையின் தலித்தியக் கூறுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த பொதுத் தளமும் இருந்ததில்லை. ஆனால் எம்மைப் பொதுவாக அவர்கள் சமூகப் போராளிகளாகவே கருதினர். பல திராவிட இயக்கத் தொண்டர்கள் எம்மோடு இணைந்துகொள்ள விரும்பினர்.
 
எமது உறுப்பினர்கள் தங்கியிருந்தது செஞ்சி ராமச்சந்திரனின் விடுதி என்பதால் அங்கு அனைவரும் தங்கியிருக்க வசதியீனம் காணப்பட்டதால் தண்டையார்பேட்டையில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். பூபதி என்ற சேலத்தைச் சேர்ந்த எமது ஆதரவாளர் மூலம் அந்தவீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் எம்.எல்.ஏ விடுதியிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்க ஆரம்பித்தனர்.

1979 இன் ஆரம்பக் காலப்பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பெரும்பாலும் இலங்கையிலிருந்த எனக்கு கடித மூலமும் நேரடிச்சந்திப்புகள் மூலமும் தெரிவித்துக்கொள்வார்கள். அப்போது தமிழ் மன்னன் என்ற சென்னைத் தமிழர் ஒருவர் எமக்கு நிறைய உதவிகள் செய்வார்.தவிர மேகநாதன் என்ற தமிழ் உணர்வாளரும், தி.கவின் உறுப்பினருமான ஒருவர் முழு நேர ஊழியராக எமது இயக்கத்தில் இணைந்து கொண்டார் சில காலங்களில் வீரமணி என்ற ஒருவரும் இந்தியாவிலிருந்து பகுதி நேரமாக எம்மோடு இணைந்துகொண்டார்.

உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவும் ,தேடப்படுபவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி வரவும் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தஞ்சாவூரிலும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். ஈழத்திற்கு தேவையான தளபாடங்களைச் சேர்த்து அனுப்பவும், அங்கிருந்து வருகின்றவர்களை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காகவும் இந்த வீடு பயன்படுத்தப்படுகிறது.

இலங்கையிலிருந்து பிரபாகரனும் அவரோடு புறப்பட்ட மூவரும் சென்னையிலிருந்த தண்டையார்பேட்டை வீட்டிற்கே வந்து சேர்கின்றனர்.

அவ்வேளையில் இங்கிலாந்திலிருந்து அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேல் பாலசிங்கத்துடன் சென்னையில் எம்மைச் சந்திப்பதற்காக வந்து சேர்கிறார். அவர் வந்ததுமே புலிகளின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருடனும் பேசுகிறார். மார்க்சிய அரசியல் வகுப்புகளும், வெளியீடுகளும் அவசியமானவை என்று கூறுகிறார்.

பாலசிங்கம் தமிழ் நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே துண்டுப்பிரசுரம் ஒன்றைப் புலிகளின் பேரில் நாடு முழுவதும் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி…’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப்பிரசுரம் பாலசிங்கத்தால் எழுதப்பட்டு இந்தியாவில் அச்சிடப்படுகிறது. அதன் பிரதிகள் இலங்கையில் வினியோகம் செய்யப்படுவதற்காக எனக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. துண்டுப் பிரசுரம் எமக்குக் கிடைத்ததும் நாம் வேறுபாடுகளை மறந்து புதிய உற்சாகத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறோம்.

இதே காலப் பகுதியில் இலங்கையில் இனவாதத்தை வெளிப்படையாகவே பேசிய சிங்கள அரசியல் வாதிகளில் இலங்கை அமைச்சர் சிறில் மத்தியூ மிகப்பிரதானமானவர்.

சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மேலும் நஞ்சூட்டிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் சிறில் மத்தியூவும் ஒருவர். இவர் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுச்சி கொள்ளுங்கள்’ என்ற நூலை எழுதியவர். ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசில் அரசவை அமைச்சராகப் பணிபுரிந்தவர். ‘யார் புலிகள்’ என்ற துண்டுப் பிரசுரம்  1979 இல் இவர் தபால் தலைப்புடன் அனைத்து பொது அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ‘தமிழர்கள் இலங்கையை அழிக்க வந்தவர்கள்’ என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர். இவரது மகன் நத்தா மத்தியூவும் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் என்பதோடல்லாமல், மகிந்த ராஜபக்ச அரசில் ஊவா மாகாணத்தின் ஆளுனராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குமணன் மனோமாஸ்டர் போன்ற ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாமும் சிறில்மத்தியூவின் அதே தபால் தலைப்பைப் பயன்படுத்தி துண்டுப்பிரசுரத்தை அரச திணைக்களங்களுக்கும் அதன் மையங்களுக்கும் அனுப்பிவைப்பதாகத் தீர்மானித்து அவரின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் உறையை பிரசுரித்துக் கொள்கிறோம். இது அரச திணைக்களங்களுக்கு கிடைக்கும் அதே வேளை குறித்த நேரத்தின் அனைத்து வாசிக சாலைகள் பொது மையங்கள் பாடசாலைகள் போன்ற இடங்களுக்கு இருவர் கொண்ட அணிகளாகப் பிரிந்து தமிழ்ப் பகுதிகளில் வினியோகம் செய்வதற்காக பண்ணையிலிருந்தவர்களைத் தயார் செய்கிறோம்.
 
திட்டமிட்டபடி பிரசுரம் பெரியளவில் அனைத்து மட்டங்களையும் சென்றடைகிறது. ஒரு ‘அதிரடி’ நடவடிக்கை போன்று அமைந்த இந்த நிகழ்வின் பின்னர் புலிகள் குறித்து தமிழ் மக்கள் பரவலாகப் பேசிக் கொள்வதையும் அவர்களிடம் புதிய நம்பிக்கை துளிர்விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

பிரசுரம் பரவலாகக்ச் சென்றடைந்த சில நாட்களில் அது குறித்து இலங்கை உளவுப் பிரிவு மிகுந்த அச்சம் கொள்கிறது. குறைந்தது ஆயிரம் பேர் இணைந்து திட்டமிட்டுத் தான் இப் பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணிப்பிட்ட இலங்கை இரகசியப் பொலீசாரின் அறிக்கையை இலங்கையின் அனைத்து நாளிதழ்களும் பிரசுரிக்கின்றன.

சிறி லங்கா அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன அடக்கு முறையும் இராணுவ வடிவங்களாக உருவாகிக்கொண்டிருந்த வேளையில் பிரசுரம் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.

அவ்வேளையில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா போன்றோர் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்குவதற்காக மட்டுமே தங்குமிடங்களுக்கு வருகின்ற அளவிற்கு மிகவும் தீவிர இயங்கு சக்திகளாகத் தொழிற்பட்டனர். உமாமகேஸ்வரன், நாகராஜா ஆகிய இருவருமே மிகுந்த அர்ப்பண உணர்வோடு செயலாற்றுபவர்கள். இவர்கள் சென்னையில் ஆரம்பித்து தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் இயக்கத்தின் தேவைகளுக்கான பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த வேளையில் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு உமாமகேஸ்வரனிடம் இருந்ததது.

பிரபாகரன் சென்னைக்கு வந்த பின்னர் தளத்தில் பண்ணைகளை நிர்வகிப்பதிலிருந்து அனைத்து இயக்க வேலைகளும் நான் மட்டுமே கவனிக்க வேண்டிய சுமை எனது தோளகளில் விழுகிறது. எனக்கு உதவியாக ஏனைய போராளிகளும், குறிப்பாக குமணன் மனோ மாஸ்டர் போன்றோர் ஒத்துழைக்கின்றனர். மத்திய குழு உறுப்பினர்களும் பிரபாகரனும் களத்தில் இருந்து வெளியேறியதன் சுமையை உணரக் கூடியதாக இருந்தது. தனியே முடிபுகளை மேற்கொண்டு வேலைகளைச் செய்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் முன்னைய சந்தர்ப்பங்களைப் போல இலகுவானதாக இருக்கவில்லை. போராளிகளதும் பண்ணைகளதும் தொகை அதிகரித்திருந்தது. அத்தோடு கூடவே புதிய பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வுகாணவேண்டிய பழுவும் அதிகமானது.

இலங்கையில் பிரபாகரன் பயிற்சி முகாமில் இருந்தவர்கள் மீது தன்மீதான அதிர்ப்தியை விட்டுச்சென்றிருந்தார். பிரபாகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து பல உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரலெழுப்பினர். வீரவாகு ரகு தொடர்பான பிரசனைகளை தொடர்ந்தும் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. இவற்றையெல்லாம் சமாதானப் படுத்தி உறுப்பினர்களை ஒழுங்கிற்குக் கொண்டுவரவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கதினுள் புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்குகிறது. பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை. அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள். அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் தங்கியிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த பின்னர் மொட்டை மாடியில் சென்று உறங்குவார். முகுந்தனும் (உமாமகேஸ்வரன்) பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் வேளையில் அவரும் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

பலருக்கும் உமாமகேஸ்வரன் – ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப்பயிற்சிகுச் செல்கின்ற வேளையில் விமான நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்துகொண்டதாக அவ்வேளையில் விமான நிலையத்திலிருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார். நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் சுபாவம் உடையவராதலால், பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார். தவிர அவர்களுடைய உடல் மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் கொள்ளவில்லை.

இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்ப்ட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒரு நாள் அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறு நாள் காலை இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்துக் முறையிட்டிருக்கிறார்கள்.

பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்கள். உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்திருக்கிரேனா என அவர்களைக் கேட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

உமாமகேஸ்வரனின் நடவடிக்கையும் அதற்கான பதிலும் உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் அனைவருமே அரசியலைத் தனிமனிதத் தூய்மைவாததிலிருந்து தன் புரிந்துகொண்டவர்கள். அதிலும் தலைமைப் பொறுப்பிலிருந்த உமாமகேஸ்வரனின் இந்தப் பதில் அவரின் உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகள் தூய்மையான, கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கான கனவில் ஈடுபட்டிருந்த எம்மவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர். அதுவும் தலைமைப் பதவியிலிருக்கின்ற ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை மிகுந்த கோபம்கலந்த வெறுப்புடனேயே நோக்கினர்.

சில மணி நேரங்களில், ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன், அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று கூறுகிறார். உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்த போது அது மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர்.

இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி, இவர்களிடையேயான தொடர்பு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் என்று சொல்கிறார். தவிர, கொழும்பில் ஊர்மிளா – முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம் தான் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனைத் தலைமைப்பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோருகின்றனர்.
சாதாரண உறுப்பினர்களுக்குப் பாலியல் தொடர்புகளிருப்பதைப் பலதடவைகள் நாங்கள் கண்டுகொள்வதில்லை. செல்லக்கிளிக்கு பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாக அவர் பண்ணைகளில் எம்மிடம் பல தடைவைகள் கூற முனைந்த வேளைகளில் நானும் ஏனையோரும் அதுபற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம் என்று தடுத்திருக்கிறோம்.

பிரபாகரனுக்குக் கூட இது தொடர்பாகத் தெரியும். தவிர,செல்லக்கிளி மீது யாரும் கோபப்படுவதில்லை. அவரை துடிப்பான குறும்புக்கார இளைஞனாகவே அனைவரும் கருதினர். ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உமாமகேஸ்வரனை தலைமைப்பதவியிலிருந்து இறங்கி சாதாரண உறுப்பினராகச் செயற்படுமாறு கோருகின்றனர்.

அதே வேளை ஊர்மிளாவை பெருஞ்சித்தனார் வீட்டிற்கு மாற்றிவிடுகிறார்கள். உமாமகேஸ்வரன் தண்டையார்பேட்டை வீட்டிலிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு மாறுகிறார். கூடவே ஏனைய உறுப்பினர்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார்.
இந்த வேளைகளில் அன்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் சென்னையில்தான் இருக்கின்றனர். அவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே இயக்கத்தின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

பாலசிங்கமும் இந்தப்பிரச்சனை தொடர்பாக ஏனையோரிடம் பேசுகிறார். இந்தப் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பாலசிங்கத்தின் கருத்தாக அமைந்திருந்தது. . இவையெல்லாம் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் நாட்டில் உமாமகேஸ்வரனின் முரண்பாடு கூர்மையடைகிறது. தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரிக்கிறார்.

உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார். இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்றும், மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.

மத்திய குழு உறுப்பினர்களில் நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். உமாமகேஸ்வரன் என்னையும் இணைத்துத் தான் மத்தியகுழு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, என்னை இலங்கையிலிருந்து வரவழைத்து அதன் மத்திய குழு ஒன்று கூடலை நிகழ்த்திய பின்பே இறுதி முடிவிற்கு வருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

இன்னும் வரும்..

பாகம் பதின்நான்கை வாசிக்க..

பாகம் பதின்மூன்றை வாசிக்க..

பாகம் பன்னிரண்டை வாசிக்க..

பாகம் பதினொன்றை வாசிக்க..

பாகம் பத்தை  வாசிக்க..

பாகம்  ஒன்பதை வாசிக்க..

பாகம் எட்டை வாசிக்க..

பாகம்  ஏழை வாசிக்க..

பகுதி  ஆறை  வாசிக்க…

பகுதி ஐந்தை  வாசிக்க…

பகுதி நான்கை வாசிக்க..

பகுதி மூன்றை வாசிக்க..

பகுதி இரண்டை வாசிக்க..

பகுதி ஒன்றை வாசிக்க..

20 thoughts on “உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்”

 1. அவரது தவறுகளுக்கு ஒத்தூதினோம்.
  இவரது தவறுக்கு தவில் அடித்தோம்.

 2. சில வியாபார இணையத் தளங்கள் இந்தத் தொடரை மூலப் பதிவின் தொடுப்பு இல்லாமல் வெளியிடுகிறார்கள். இவர்கள் நேர்மை என்னவென்பது? உழைப்பை மதிக்காத திருட்டுத் தனம் தானே இது? இனொயொரு கட்டுரைகளுக்குக் கொப்பிரைட் போட்டால் இவர்களை நிறுத்தலாமே?

 3. வெளியேற்றம் உமாவிற்கு …………
  காயம் ஆறுமுன் களம் சீலனுக்கு ………….
  களத்தில் முடிவு செல்லகிளிக்கு ………….
  …….
  திருமணத்திற்கு பின் 5 மாதத்தில் வாரிசு. புரிகாரம் தேட மகனிற்கு சீலனின் பெயர்.
  பொருத்தமான தேர்வாய் திருமணத் தோழர்கழாக கேபியும் குண்டனும்.

 4. தோழர் உமாமகேஸ்வரன் மீது திட்டமிட்டு சேறடிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் அவரை ஊர்மிளாவைக் காட்டி விரட்டிவிட்டு தலைமையைக் கப்பற்றினான். ஐயர் இன்னும் ஏன் பிரபாகரன் பக்கம் சாய்கிறார்?

 5. உமா- ஊர்மிளா விடயம் முழுக்க சோடிக்கப்பட்டதல்ல. அந்த பலவீனம் உமாவிடமிருந்த படியால்தான் இந்த சோணங்கி தலைவனாக வந்தான்.

 6. உமா மகேஸ்வரனைப் பற்றி ஐயர் அவதூறாகப் பொய் எதையும் சொல்லியிருந்தால் அதைச் சுட்டிக் காட்டுவது தகும். சேறடிக்கிறார் என்று மொட்டையாக மறுப்பது பயனற்றது.

  உமா மகேஸ்வரன் விடயம் அவ்வாறு தான் கையாளப் பட்டிருக்க வேண்டுமா என்பது இன்னொரு விடயம். அது எப்படிக் காணப்பட்டது, எப்படிக் கையாளப்பட்டது என்பதற்கு மேலாக ஐயரிடம் எதை இங்கு எதிர்பர்க்க இயலும்?

  உமாமகேஸ்வரன் – ஊர்மிளா உறவு என்ன நடக்கக் கூடாத ஒன்றா? நடக்க இயலாத ஒன்றா?
  இயக்கக் கட்டுப்பாடு என்று ஒன்று ஒன்று உண்டு தான். — ஆனால் அது மனித இயல்பைப் புறக்கணித்து இயந்திரப் போக்கில் நடைமுறையாகும் போது விபரீதங்கள் விளையலாம்.
  நிகழ்வுகளை விளங்கிக் கொள்ள முயலுவோம்.

 7. TAMIL WEAKNESS IS A STRENGTH OF OUR ENEMIES! TAMIL LEADERS SHD BE GENUINE AND DEDICATED! BUT UNFORTUNATELY MOST OF THEM WERE SELFISH!ARROGANT!SHORTSIGHTED! UNITED WE STAND! DIVIDED WE FALL! NO DOUBT ABOUT THAT! WE MUST BE CAREFUL IF THE FUTURE!

 8. தமிழீழத்திலிருந்து கண்மணி’s Photos – வாழ்க தமிழீழ தாயகம்
  Photo 1 of 1 Back to Album · தமிழீழத்திலிர’s Photos · தமிழீழத்திலிர’s Profile.
  Click on people’s faces in the photo to tag them.

  .வாழ்க தமிழீழ தாயகம்

  உலகெங்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உரிமை காக்கும் சமர் தொடர்ந்து ஆதிக்கவாதிகளால் முறியடிக்கப்படுவதும், சிறிது காலம் அவை அமைதி காப்பதும் மீண்டும் அடக்கமுடியாத பேரிரிரைச்சலோடு தமது விடுதலையை நோக்கி பயணிப்பதுமான நிகழ்வுகள் சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கிறது. இச்சமர்களுக்கு இதுவரை தோல்வி ஏற்பட்டது கிடையாது. நடைபெற்று முடிந்த எவ்வித விடுதலை போர்களானாலும்சரி, எதிர்காலத்தில் நடைபெற இருக்கின்ற போராட்டங்களானாலும் சரி, இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் போராட்டங்களானாலும் சரி, அவை வெற்றியை அடையாளப்படும்வரை ஓய்வு பெற போவது கிடையாது. போராட்டங்களை பொறுத்தமட்டில் எப்போதுமே இரண்டு அணி களத்தில் இருக்கும். ஒன்று, அடக்குமுறை அணி, மற்றொன்று அந்த அடக்குமுறையை விரும்பாத அணி.

  அடக்குமுறை அணியில் அதிகாரவர்க்கத்தினராக தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் விழித்து சிலிர்த்து எழும் அணிகள் எப்போதுமே பாட்டாளி வர்க்கமாகவே இருக்கிறார்கள். ஆனால் இந்த உலகத்தின் நிலைப்படி தொடர்ந்து வெற்றி பெறுவதென்னவோ பாட்டாளி வர்க்கமாகவே இருக்கிறது. இதை இதுவரை வரலாறு மாற்றி அமைத்தது கிடையாது. இயற்கை அடக்குமுறையாளர்களுக்கு துணைபோனதை இதுவரை நாம் அறிந்திருக்க வில்லை. ஒருவேளை ஆதிக்க ஆற்றல்கள் தங்களிடம் குவிந்து கிடக்கும் கருவிகளையும், கூலிக்கு களத்தில் இருக்கும் இயந்திரங்களையும், தமக்கு ஆதரவாக இனவிடுதலை போராளிகள் மீது அடக்குமுறை தொடுக்க ஏவி விடலாம். வெறும் கரங்களோடு களத்தில் இருக்கும் போராளிகள் வீழ்த்தப்படுவதாக ஒரு பொய் தோற்றத்தை இந்த அடக்குமுறையாளர்கள் சித்தரித்து, அதையே பரப்புரையாக்கலாம். ஆனால் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு ஆற்றல்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் மிகப்பெரிய வேற்றுமைகள் இருக்கின்றது.

  போராளிகள் எப்போதுமே கூலிக்காக களத்தில் இருப்பவர்கள் கிடையாது. அவர்கள் தமது நாட்டுக்காக, நாட்டு மக்களுக்காக, நாட்டின் உரிமைக்காக, தமது மக்கள் எந்த நிலையிலும் தம்மை இழந்துவிடக் கூடாது என்பதற்காக தம்மையே அர்ப்பணிக்கும் ஈக விளக்குகளாக அவர்கள் களத்தில் இருக்கிறார்கள். இவர்கள் காயங்களைக் கண்டு துயர் கொள்வது கிடையாது. உறுதியான உள பக்குவமும், அடக்குமுறைகளை எதிர்த்தாளும் மனத்திறனும், எதனையும் தமது மக்களுக்காக செய்கிறோம் என்கின்ற உளவியல் பாகுபாடும் இவர்களுக்குள் ஆழமாக இருக்கின்ற காரணத்தினால், இவர்களை அடக்குவதென்பது எளிதாக இருப்பது கிடையாது. இவர்கள் வாழைக்குருத்துக்களைப் போல் வெட்ட வெட்ட முளைக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறார்கள்.

  இவர்களை அழிப்பதற்காக எடுக்கப்படும் கருவிகள் தாம் அழியுமே தவிர, இந்த வீர மறவர்களை தம் மக்களின் மானம் காக்கும் கண்மணிகளை அழித்ததில்லை, அழிக்கப்போவதில்லை என்பதை எதிரிகள் புரிந்து கொள்வதில்லை. ஆனால் ஆதிக்க ஆற்றல்களிடம் அடிபணிந்து, கைகட்டி, கூலிபெறும் அந்த மனித இயந்திரங்கள் மானத்தை இழந்தவை. அவைகளுக்கு சுயசிந்தனை கிடையாது. தமது மக்கள் குறித்த எவ்வித உயரிய கோட்பாடோ, அல்லது தமது மக்களின் வாழ்வியல் மற்றும் பொருளியல் சார்ந்த சிந்தனையோ இந்த கூலி அடிமைகளுக்கு இல்லாத காரணத்தினால், ஆதிக்க ஆற்றலின் நடுவமான திகழும் அந்த தீங்கு நிறைந்த ஆட்சியாளரின் கட்டளையை ஒரு இயந்திர கதியில் நின்று முடிக்கும் கீழ்நிலை கொண்டவர்களாகத்தான் இதுவரை இருந்து கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றி அமைத்ததாக இதுவரை வரலாற்றிலே எவ்வித ஆதாரமும் இல்லை.

  ஆக, போராட்டம் என்பதில் இருவேறு அணிகள் இருக்கின்றார்கள். இவர்கள் ஒரு அணி தாய் மண்ணை நேசிக்கும் அணி. வேறொரு அணி கூலிக்கு வேலை செய்யும் அணி. இந்த கூலிக்கு வேலை செய்யும் அணி, எப்போதுமே அச்சமுள்ள மனதுடன் ஓடி ஒலியும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நீதி, அறநெறி குறித்த எவ்வித பண்பும் ஒருதுளியும் இருப்பதில்லை. ஆகவேதான் இந்த அறநெறியற்ற கூட்டம் எப்போதுமே பாலியல் வக்கிரம் நிறைந்ததாக, பண்பாடற்ற மந்த புத்தியுள்ள கூட்டமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு கட்டுப்பாடில்லாத, மந்த புத்தியுடைய கூட்டத்தைக் கொண்டுதான் நாம் எமது மண்ணின், எமது மக்களின் மீது தொடுக்கப்பட்ட ஒரு அநீதியான சமரிலே அமைதி காக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டோம். சமருக்கான ஒரு நீதியோ, உலக அளவில் கடைபிடிக்கப்படும் சட்ட விதிகளோ, அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, எமது மக்கள் மீது வீசப்பட்ட அடக்குமுறைகளே எம்மை, எமது மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக, எமது மக்கள் எந்த நிலையிலும் துயர்படக்கூடாது என்பதற்காக அவர்கள் வாழ்வியல் காக்கப்பட வேண்டும் என்பதற்காக எமது தேசிய ராணுவம் சுடுவதை நிறுத்தியது. துப்பாக்கியை மடக்கியது.

  ஆனாலும்கூட, அது களத்திலே உறுதியாக எந்தவித அசைவும் இல்லாமல் ஆக்கப்பூர்வமான எமது நாட்டை கட்டி அமைப்பதற்கான உள்ளத்திடன் கொண்டு அதற்கான அடுத்தக்கட்ட நகர்வை அது திறனாய்வு செய்து கொண்டிருக்கிறது. வெற்றி என்பது இரண்டு நாடுகளுக்கும் ஏற்படும் போர் நிலையிலே ஒரு நியாயம் இருக்க வேண்டும். ஆனால் எமது மீது தொடுக்கப்பட்ட அந்த போர் அநீதியான போர். அக்கிரமம் நிறைந்ததாக எந்த காலத்திலும் மன்னிக்க முடியாத பேரவலம் கொண்டதாக இருந்தது. இந்த போரிலே நாம் இறுதி நிமிடம்வரை உள்ள உறுதியோடு களத்திலே இருந்தோம். எமது மக்களை காக்க வேண்டும் என்பதற்காக எமது உயிரை பணயம் வைத்தோம். யாரோடு சமர் என்பதிலே நாம் தெளிவாக இருந்தோம். ஒருவேளை எமது சமரின் நோக்கம் ஒரே ஒரு மயிரிழை அளவிற்கு மாறியிருந்தாலும் அது சிங்கள மக்களை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி இருக்கும். ஆனால் நாம் நீதியை கடைப்பிடிப்பவர்கள், எந்த நிலையிலும் நெறி மாறாதவர்கள், எமது தேசிய தலைவர் எந்த தன்மையிலும் தமது உள்ள திடனை மட்டுமல்ல, தமது நேர்மையையும் சிறிதும் தவற விட்டது கிடையாது.

  அந்த காரணத்தால்தான் தொடர்ந்து நாம் ஓரிடத்திற்கு குவிக்கப்பட்டு எம்மீது கொத்துக் குண்டுகளும், பல்குழல் பீரங்கிகளின் படு பயங்கரமான தாக்குதலும், வேதியியல் குண்டுகளும், பன்னாடுகளின் தடைசெய்யப்பட்ட அழிவு கருவிகளும், ஒரு மாபெரும் போரிலே பயன்படுத்தப்படும் பெரும் படையணிகளும் ஒருங்கிணைந்து களத்தில் இருந்தபோதுகூட அவர் கட்டுப்பாட்டை இழக்காமல், நாங்கள் ஒருநாட்டை கட்டியவர்கள், எமது நாட்டு வேறொரு நாடுடன் சமர் புரிகிறது, எமது நாட்டின் ராணுவம் பகை நாட்டு ராணுவத்துடன்தான் சண்டையிட வேண்டும். ஆகவே பகை படையுடன் மட்டுமே நாம் தொடர்ந்து மோதலை வலுக்கச் செய்வோமே தவிர, எந்த நிலையிலும் நாம் சிங்களர்கள் வாழும் பகுதிகளில் எமது தாக்குதலை நிகழ்த்தியது கிடையாது.

  கடும் சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலும்கூட, வான்புலிகள் நிகழ்த்திய சாகச தாக்குதல் எந்தநிலையிலும் அப்பாவி சிங்கள மக்களை நோக்கி நகர்த்தப்படவில்லை. நாம் சிங்கள பேரினவாதத்தை அழித்தொழிக்கும் வகையில், அதன் நடுவங்களை குறிவைத்து நமது படைபிரிவை நகர்த்தினோமே ஒழிய, சிங்கள மக்களை அப்பாவி ஆண் பெண்களை குறிவைக்க எமது தேசிய தலைவர் எப்போதுமே விரும்பியது கிடையாது. ஒருவேளை எமது தேசிய நடுவம் விரும்பியிருந்தால், எமது மண்ணிலிருந்து புறப்பட்ட வான்புலிகள் பெருங்கூட்டமாக வசிக்கும் சிங்கள மக்கள் வாழும் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நிகழ்த்தியிருந்தால், அது ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்றொழித்த அவ செயலாகி இருக்கும். ஆனால், வீரர்கள் எப்போதும் நெறி தவறுவது கிடையாது.

  எமது தேசிய தலைமை இதிலே ஒரே ஒரு புள்ளிக்கூட தடம் புரளவில்லை. இறுதிவரை எமது மக்களை காக்கும் தடுப்பு நிலைப்பாட்டில் மட்டுமே கையாண்டார்களே தவிர, சிங்களர்களை எதிரியாக அவர்கள் கருதவில்லை. ஆகவேதான் நாம் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டோம். ஆனால் நம்மை ராசபக்சேவால் தோற்கடிக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக செயவர்த்தனா, பிரேமதாசா, சந்திரிகா என அடுத்தடுத்து வந்த எந்த ஆட்சியாளனும் நம்முடைய ஒரு சிறு அசைவைக் கூட ஏற்படுத்த முடியாமல் திணறிதான் நின்று கொண்டிருந்தான். ஆனால் கேவலமான உலக வரலாற்றில் நிகழக்கூடாத ஒரு பேடித்தனமான செயலை செய்துதான் ராசபக்சே இந்த சமரில் வெற்றி கண்டதாக கொக்கரிக்கிறான். காரணம், தனியாக நின்று வெற்றி பெற முடியாத ராசபக்சே, பார்ப்பனிய-பனியா பேரினவாத இந்திய அரசை துணைக்கு அழைத்தான். பாகிஸ்தானின் உள்நாட்டு சமரிலே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பதை அறிந்து கொண்டு, அதனிடம் கப்பல் கப்பலாக கருவிகளை வாங்கி குவித்தான்.

  ஆஸ்திரேலியாவின் ராணுவ உதவியை கெஞ்சி கூத்தாடி பெற்றான். சீனத்தின் பல்வேறு படை கருவிகளை பதுக்கி வைத்து தாக்கினான். இத்தனையும் செய்த பின்னர்தான் அவன் வெற்றி பெற்றதாக அறித்தார். சிறு குழந்தையிடம் சொன்னால்கூட, ராசபக்சேவின் முகத்தில் காரி உமிழும். காரணம் நாம் களத்தில் இருந்த இறுதி நிமிடம் வரை எந்த நாட்டிடம் இருந்தும் ஒரு குண்டூசியைக்கூட கெஞ்சி பெறவில்லை. காரணம், எமது புலிகள் அணுகுண்டுகளாக தமது உடலை வெடிக்கச் செய்து களம் அமைத்தார்கள். எதிரியை நடுங்க செய்தார்கள். அவன் குலைநடுங்கி ஒலிந்து கொண்டிருந்தான். கூட்டுச் சேர்ந்து ஒரு சிறிய நாட்டை அழித்ததை வீரம் என்று கருதிக் கொண்டு இன்று விழா கொண்டாடுவதாக செய்திகள் வருகிறது.

  இதுவரை உலக வரலாற்றில் தேசிய விடுதலைக்கான ஒரு போராளிக்குழு, கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளை வைத்துக் கொண்டு சமர் புரிந்ததாக நாம் அறியவில்லை. ஆனால் இதை இந்த பூமிப்பந்தில் முதன் முதல் நிரூபித்துக் காட்டியது எமது தேசிய தலைவரின் தலைமைதான். மேதகு தேசிய தலைவர் அவர்கள் நமது நாட்டின் பாதுகாப்பை தம்முடைய உளமார்ந்த நேசிப்புக்குள் அடைகாத்தார். அவர் தமது மக்களின் வாழ்வு, மகிழ்வு இவைகளில் முழு அக்கறை செலுத்தினார். நமது பண்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் பணிகளை உந்தித் தள்ளினார். ஆகவேதான் நாம் இந்த வினாடிவரை நாம் மனநிலை மாறாமல் உறுதியோடு களத்திலே இருக்கிறோம். இந்த மே 16, 17, 18 தேதிகள் நம்மை அச்சுறுத்துவதற்கு பதிலாக, ஆத்திரமூட்டுவதற்கு பதிலாக, நம்மை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் காரணியாகத்தான் இருக்கிறது.

  வாருங்கள் எமது இனிய உறவுகளே! வளம் கொழிக்கும் நமது தாய்நாட்டின் நலன் காப்போம். நமது தாய் நாட்டின் நலத்திற்காக குருதி சிந்திய, உயிர்கொடை தந்த அந்த உத்தமர்களை நன்றியோடு நினைப்போம். நமது தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ அரசை கட்டியமைப்போம். இதில் எவ்வித மாற்றமும் நிகழப்போவது கிடையாது. நமக்கான அரசு விரைவில் நமது மேதகு தேசிய தலைவரின் தலைமையில் உதிக்கப்போகிறது. அப்போது நாம் கரம் அசைத்து, மகிழ்ந்து பண்பாடுவோம். வாழ்க தமிழீழம் என..!!!

  1. //எமது மக்களை காக்க வேண்டும் என்பதற்காக எமது உயிரை பணயம் வைத்தோம்//.

   யாழ்ந்கரை இராணுவம் கைப்பற்ரும் போது, யாழ்மக்களைக் காக்கவா அல்லது புலிகளைக் காக்கவா வன்னிக்குப் போனீர்கள்? புலிகளின் ஆதிக்கம் வன்னியில் இருக்கும் போது
   புலிகளை
   ந்ம்பியா அல்ல்து இராணுவத்தை நம்பியா மக்கள் வாழ்ந்தார்கள்? போர் உச்சக்கட்டத்தில் மக்களை வன்னியை விட்டு போகாமல் இராணுவத்திற்கு பலி கொடுத்து அதனை விளம்பரமாக்கி உலக்மெங்கும் புலிகளைக் காப்பாற்ர எடுத்த் முயற்சிகள் உலகம்றியும்.

   விடுதலைப்போர்ராட்டத்தை நம்பி மக்களிற்காக் உயிரை விட்ட போராளிகளையும்
   ,
   போரை ந்டத்தி
   பொருளையும் புக்ழையும் தேடும் கயவர் கூட்டத்தையும் ஒன்றாக்க வேண்டாம்.
   புலிகள்
   ஈழத்தமிழரின் பிரச்சினையை மூலதனமாக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட வர்த்தக் நிறுவன்ம்.

   விடுதலையென்பது ஆயுதத்தால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. புலிகள் விரும்புவது
   ஆயுத்த்தாலும் ப்யமுத்தலாலும் ஈழ்த்திலும், புலம்பெயர்நாடுகளிலும் தமிழரை ஆழ்வதேயாகும்.

   இதுவே 30 வருடகாலமாக் புலிகள் செய்தவதை. இப்போதான் மக்கள் புலிகளிடமிருந்து

   விடுதல்யடைந்துள்ளார்கள். அவ்ர்களே தஙகளிற்கு என்ன விடுதலை வேண்டுமென தீர்மானிப்பார்கள்.
   விடுதலை என்னும் பெயரில் ஏழைகளின் உயிர்கழுடன் விளையாடியது போதும் இனியாவது நிம்மதியாக் வாழவிடுங்கள். துரை

   1. “இனியாவது நிம்மதியாக் வாழவிடுங்கள்” என்கிறீர்களே!
    இப்போது நிம்மதியாக வழ விடாமல் தடுப்பது யார் என்பதைக் கவனிக்க வேன்டும்.
    இன்றும் விடுதலையின் பேரால் நடக்கும் வணிகம் விமர்சிக்கப்பட வேண்டியது.
    ஆனால் பேரினவாத அரசு பற்றி மறந்து விடுகிறீர்கள்.
    புலி எதிர்ப்பு பேரினவாத அரசுக்கு ஆதரவாகி விடுவது நல்லதல்ல.

    1. பேரினவாதத்தை விட தமிழரிடம் உள்ள எதிரிகள் யார்
     என்பதே முக்கியம். தமிழனைத் தமிழனே நேசிக்கப் பழக் வேண்டும்.
     உல்லாச வாழ்விற்கு தென் இலங்கையும், அரசியல் வாழ்விற்கு
     வடக்கும் கிழக்கும் பேசுவது நிறுத்தப்பட வேண்டும். தமிழன
     தான் விட்ட தவறுகளை உண்ராமலும் திருத்தாமலும் சிங்களவ்ரையும்
     சிங்கள அரசையும் எதிர்ப்பது அறிவுள்ளவன் செயலல்ல். துரை

   2. தவறுகள் நடைமுறை மூலமே திருத்தப் படுகின்றன. திருத்துவதில்நமக்குக் கூட்டாகவும் தனிப்படவும் பங்குண்டு.
    சிங்களவரை எதிர்ப்பது எப்போதுமே தவறு. பேரினவாத அரசை எதிர்ப்பது எப்போதுமே தேவையானது. அதில் சிங்கள மக்களை இணைப்பதற்கான வழியை நாம் இதுவரை தேடவில்லை.

    1. //சிங்கள மக்களை இணைப்பட்கற்கான் வழியை நாம்
     இதுவரைதேடவில்லை//

     இதன் ஆயிரம் தடவை எழுதலாம்
     வாசிக்கலாம். இதுவே ஈழ்த்தமிழர் விட்ட பெரும் தவறு.
     இலங்கையின் பொது எதிரியாக இருப்பவர்கள் யார்?
     இவர்களிற்கெதிரான போராட்டத்தை தமிழ் சிங்கள மக்கள்
     கூட்டாக முன் எடுப்தன் மூலமே தமிழரின் உருமைகளை
     அழிவின்றி பெற்ருக் கொள்ள்லாம். துரை

 9. kanamne,
  “நமது தேசிய தலைவரின் தலைமையிலான தமிழீழ அரசை கட்டியமைப்போம்” என்கிறீர்கள்.

  உங்கள் தேசிய தலைவர் எங்கே என்று கேட்டால் “நாராயணன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்கிற மாதிரி டயலக் பேசாமலும் எங்கே அமைக்கப் போகிறீர்கள் என்று கேட்டால் கேட்டவனுக்குத் துரோகிப் பட்டம் சூட்டாமலும் பழங்கதை பேசி மயக்கதில் மூழ்காமலும் இருப்பீர்களானால் உங்களுக்க்கு உருப்படியாக ஒரு வழி தென்படலாம்.

 10. //இதுவரை உலக வரலாற்றில் தேசிய விடுதலைக்கான ஒரு போராளிக்குழு, கடற்படை, வான்படை, தரைப்படை என முப்படைகளை வைத்துக் கொண்டு சமர் புரிந்ததாக நாம் அறியவில்லை. ஆனால் இதை இந்த பூமிப்பந்தில் முதன் முதல் நிரூபித்துக் காட்டியது எமது தேசிய தலைவரின் தலைமைதான். மேதகு தேசிய தலைவர்//

  இந்த முப்படை

  புலம்பெயர் தமிழரிடம் விளம்பரத்திற்காக்வே. தென் அமெரிக்காவில் போதை வஸ்து கடத்துபவர்களிடமும் முப்படையுண்டு. இதற்காக அமெரிக்காவுடன் அவ்ர்க்ள் போரா தொடுத்தார்கள்? தற்பாதுகாப்பிற்கும் தாஙகள் ஓடித்தப்புவ்த்ற்குமேயாகும். ஒருநேர உண்விற்கு
  வ்ழியில்லாமல் வாடும் ஏழைகளின் பிள்ளைகளின் உயிரையும், புலம்பெயர் தமிழர்களின்
  பண்த்தினையும் கொண்டுநடந்த தமிழர் மீதான அடக்குமூறைக்கு பெயர் விடுதலையா?
  துரை

  1. ஏனப்பா துரை! இலங்கை அரசாங்கம் மாதச்சம்பளம் எவ்வளவப்பா தருகிறது?

   1. விறுமண்டி, ஈழத்துப் புலிகள் இலங்கை அரசாங்கத்திடமும், புலத்துப் புலிகள்
    புலம் பெயர் தமிழர்களிடமும் பெற்ர பண்த்திற்கு நிகராக் உலகில்
    எந்த

    அரசும் சம்பள்ம் கொடுக்க முடியாது. இன்னொன்று சில புலிகளேதான் இப்போ
    பூனைக்ளாகி அரசுடன் சேர்ந்துள்ளனர். இவர்க்ளை விட டபிள் துரோகிகள் வேறு யாருமுலகிலுண்டோ? துரை

 11. தரைப்படை, கடற்படை சரி அதென்ன விமானப்படை பூச்சி கொல்லி மருந்தடிக்கும் மினி கிளைடர் உங்களுக்கு போர் விமானமாக தெரிகிறதா? கண்மணி

 12. அன்பானவர்களே…! இன அழிப்புப்போரில் பலியாகிப்போன எம் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம்…!

Comments are closed.