உமாசங்கர் ஐ.ஏ.எஸ் நேர்காணல்.

ஒரு

..எஸ். அதிகாரி மீது நடவ டிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட் டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது. சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்றுஉமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது?ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது. முதல்வருக்கு நன்றி!” – தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ..எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ..எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த .தி.மு.. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்கநான் நீதிமன்றப் படியேறபணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்.”

உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே?”

இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர்தீவிரவாதிஎன்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும்? என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது.”

உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே?”

பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், ‘உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. ‘வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்றஅவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ‘பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது!”

கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்க ளுக்குள் பிணக்கு வர என்ன காரணம்?

நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டா லின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்.”

.தி.மு.. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.. ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன?”

தி.மு.. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், ‘எங்கேய்யா போறே?’ என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால்எல்காட்என்றேன். .கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமானஎல்நெட்‘, டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம்.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது. இதற் காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணா மல் போய்விட்டதாகச் சொன் னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயேஉங்களை மாற்றி விட்டார்கள்என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத் தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை!”

லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா?”

வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன். அப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். .ஆர். ஃபைல் செய்வார்கள்? இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கை யின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா? மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அர சுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சிக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.”

கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?”

ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோஇந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், ‘நேர் நேர் தேமாநிறை நேர் புளிமாஎன்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்.”

அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?”

நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கை கள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ..எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன். இதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். ‘நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதேஎன்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்!”

நன்றி-ஆனந்தவிகடன்.

4 thoughts on “உமாசங்கர் ஐ.ஏ.எஸ் நேர்காணல்.”

 1. கருணாநிதி ஆட்சியில்தான் இவையெல்லாம் சாத்தியம்.அம்மா வந்தார் என் வைத்துக்கொள்ளூங்கள் இவை எல்லாம் அசாத்தியம்.அனுசரித்துப் போகத்தேரியாத இவருக்கு எதற்கு அரச உத்யோகம்.மண்ணாங்கட்டி.தன்ர தலையிலேயே யாராவது மண்ண அள்ளீப் போடுவார்களா?

 2. நல்லாத்தான் தமிழ்மாறன் ,கலைஞர்மீது பக்தி வைத்திருக்கிறார், அதேபோல கருணாநிதியை கொலைஞர் என்று கூறி வெறுப்பவர்களும் நிறையவே இருக்கின்றனர், அது அவரவர் விருப்பம், நான் கொலைஞரை கொலைஞராகவே பார்க்கிறேன்,

  தமிழ்மாறன் உறுதியான ஆள்தான் கருணாநிதி விடயத்தில் ,ஓல் த பெஸ்ற், கீப் இற் அப்,

 3. இந்திய அரசியல் சாசனத்தை
  மீறியது ஜனாதிபதியா?…

  சாதியை மாற்றியது
  டாக்டர் கலைஞரா? உமாசங்கரா?

  தமிழர்களின்
  வாழ்வுரிமை யார் கையில்?….

  கவிமாமணி வன்னியக்குடும்பன்
  (கதிரவன் ஒளியில் கலைஞரேறு
  என்று டாக்டர் கலைஞர் மீது கவிதை நூல் வடித்தவர்)

  இந்திய அரசியல் சாசனத்தை
  மீறியது ஜனாதிபதியா?
  சாதியை மாற்றியது கலைஞரா?
  உமாசங்கரா?
  தமிழர்களின் வாழ்வுரிமை யார் கையில்? ……………………..
  1. இந்திய அரசியல்சாசன வரம்பை மீறி ஆதிக்க சாதியினரின் அரசாட்சியில், மேதகு ஜனாதிபதி அவர்களால் மதத்தின் பெயரால் சட்டம் ஃ ஆணை இயற்றப்பட்டு, கிறித்தவ மதம் மாறிய பட்டியல் சாதியினரின் (எஸ்.சி) சலுகைகளைப் பறிக்கவும், அவர்களைத் தீய நோக்கமுடன் அலைக்கழிக்கவும், கிறித்தவ தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர் (பி.சி) என்று வேண்டுமென்றே வைத்தது, இந்திய அரசியல் சாசனத்தையே பங்கப்படுத்திய குற்றமல்லவா?.
  2. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடுகள் 341, 342 ல் “தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின் பட்டியலை அந்தந்த மாநில ஆளுநர்களுடன் கலந்து ஆலோசனை செய்து பட்டியல் சாதியினர் யார்யார் என்ற பட்டியலை ஒரு பொது அறிவிக்கை மூலம் ஜனாதிபதி குறிப்பிட வேண்டும“; என்றுள்ளது.
  இதன்படி ஜனாதிபதி அவர்கள் 1950 ஆம்ஆண்டு தாழ்த்தப்பட்டோர்ஃ பழங்குடியினருக்கான பட்டியலைத்; தயாரித்தார்கள். பிறசமுகங்கள், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்கு உயர்ந்த நிலையிலான சமுக அங்கிகாரம் இன்றுவரை கொடுக்கமறுக்கும் நிலையில், கிறித்தவ மதத்தைச்சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஃ பழங்குடியினரை பட்டியல் சாதிகளில் வைக்காமல், சாதியின் பெயரால் தீண்டாமைக்கொடுமை செய்யும் பிற்பட்ட சாதியினரின் பட்டியலுக்குள் புகுத்தி வைத்து ஆணை வெளியிட்டார்கள். தாழ்த்தப்பட்டவர்கள் கிறித்தவ மதத்திற்கு போய்விடக்கூடாது என்ற உள் நோக்கத்தில் மதவெறி; பிடித்த ஆட்சியாளர்கள் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை பட்டியல் சாதியிலிருந்து தூக்கி எறிய இவ்வாணை பயன்பட்டது.
  3. பட்டியல் சாதிக் கிறித்தவர்களை பிற்படுத்தப்பட்ட சாதியாக்கி ஆணை போட்ட போது, இதைப்போல பிற்படுத்தப்பட்ட சாதியிலுள்ள கிறித்தவர்களை முற்படுத்தப்பட்ட சாதியாக்கி ஆணை போடாததும், இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுவோர்கள் செய்த சாதி பாகுபாட்டுக் குற்றமாகும்!
  4. இந்திய அரசியல்சாசனம் நாள் (20.11.1949) முகவுரையில்: “பாரத தேசத்தை மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசாக அமைப்போம் என்று உறுதிபநிண்டு; (1)சமூக, பொருளாதார, அரசியலில் நீதியும் (2) எண்ண, எழுத, எடுத்துச்சொல்ல, நம்பிக்கைவைக்க,வழிபடுவதற்கு சுதந்திரமும் (3) தரம், தகுதி, வாய்ப்பில், சமத்துவமும் ஆகியவற்றை தரத்தக்க எங்களுக்கிடையேயுள்ள தனி மனித கௌரவம், தேசிய ஓற்றுமை, ஒருமைப்பாட்டை, நிலைப்படுத்தத்தக்க சகோதரத்துவத்தையும் வளர்ப்பதற்கு உறுதி பநிண்டுள்ளோம்; “ . என்றுள்ளது.
  ஆனால் மேற்படி ஜனாதிபதியின் ஆணையால் மதச்சார்பற்ற, சமதர்ம பாரத நாடான நம் நாட்டின் அரசியல் சாசனத்தின் கழுத்து அறுக்கப்பட்டது. ஒரே சாதியிலுள்ள இந்துக்களுக்கு மட்டும்; சமூக, பொருளாதார அரசியல் இவைகளில் கொடுக்கப்படும் நீதி, அச்சாதியின் கிறித்;தவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இவ்வாறு வேறுபட்ட சலுகைகளால் ஒரே சாதியின் சம உரிமை ஏற்றதாழ்வுக்கு உள்ளாக்கப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளது. ஒரேசாதியின் தாழ்த்தப்பட்ட இந்துக்களும், கிறித்தவர்களும் ஒரே சாதி என்று எண்ண முடியாமல், எழுத முடியாமல், எடுத்துச் சொல்ல முடியாமல், நம்ப முடியாமல் எந்த மதத்தையும் யாரும் வழிபடலாம் என்ற சுதந்திரமும் இவ்வாணையால் பறிக்கப்பட்டுள்ளது. ஓரே சாதியிலுள்ள இந்து, கிறித்தவர்களுக்கிடையே, தரம் ,தகுதி, வாய்ப்பில் எற்றதாழ்வு ஏற்பட்டு சமத்துவம் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்கிடையே ஒன்று போல இருந்த தனிமனித கௌரவம், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு என்ற சகோதரத்துவம் எல்லாம் ஒரே சாதியை மதத்தின் பெயரால் இரு பிளவாக்கியதன் மூலம் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளது.
  5. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 15(1) “சமயம், சாதி, இனம், பால் பிறப்பிடம் காரணமாக அல்லது வேறெந்தக் காரணத்திற்காகவும் எந்த குடிமகனிடமும் அரசு பாகு பாடு செய்யக் கூடாது“ என்றுள்ளபோது.
  மேதகு ஜனாதிபதியின் ஆணை, சாதியாலும், சமயத்தாலும் வேறுபடாமல் இருந்த ஒரே சாதியை இரண்டாக உடைத்து, இந்திய அரசியல் சாசனத்தின் மதச்சார்பற்ற கோட்பாட்டை சுக்குநூறாக்கியது. இந்தியாவை ஆளும் மத்திய மாநில அரசுகளே இப்பாகுபாட்டுக்குக் காரணமாகியுள்ளன. சாதியினால்; ஒன்றுபட்டும் மதத்தினால் வௌ;வேறு கடவுளைத் தொழுது வாழ்ந்து வருகின்ற கணவனையும் மனைவியையும், ஒரே குடும்பத்தாரையும், ஒரே ஊராரையும், ஒரே நாட்டு மக்களையும்;, ஒரு வகையான மதத்தாலான தீண்டாமைக் கொடுமைக்குள்ளே ஆளும் நம் அரசு பலி கொடுத்துவிட்டது.
  6. இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 17ல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. அதனை எந்த வகையிலும் செயல்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக எழும் எந்தக் குறைபாடுகளும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் “எனஉள்ளது.
  ஆனால,; தீண்டாமைச்சட்டம் ஃ வன்கொடுமைச்சட்டப்படி, பட்டியல் இனக் கிறித்தவர்கள் வன்கொடுமைக்குள்ளாகும் பொழுது இக்கொடுமைக்கானவர்கள் மீது வழக்கிட்டு தண்டிக்க முடியவில்லை. ஜனாதிபதியின் இந்த மதச்சார்பான ஆணையின் காரணமாக அரசின் வன்கொடுமைச் சட்டங்களால்; கிறித்தவ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தாழ்த்தப்பட்ட சாதி இந்துக்கள் அதே சாதிக் கிறித்தவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தைப் பாய்ச்ச இச்சட்டம் வழிவகுக்குகிறது. இதன் மூலம் இந்திய அரசியல் சாசனத்தை மத வாதத்தால் இரத்தக்கண்ணீர் வடிக்க வைத்து விட்டனர்.
  7. கோட்பாடு 25(1), “எல்லோரும் தன் மனச்சாட்சிப்படி மதத்தை தழுவ உரிமையுடையவர்கள்“; என்று உள்ள போது.
  இந்திய ஆட்சியாளருக்கு , கிறித்தவ தாழ்த்தப்பட்ட மக்கள் மீது மட்டும் ஏன் இந்தத் தீண்டாமைப் பாகுபாடு? இந்திய அரசியல் சாசனத்தில் உலக அரங்கில் பாரத மாதாவைப் பகட்டாகக் காட்டிவிட்டு, ஜனாதிபதி போட்ட வேதனைக்குரிய மதச்சார்புள்ள இந்த ஆணையை எம் பாரத மாதாவின் உடலுக்குள் கொல்லும் நஞ்சாகச் செலுத்தலாமோ? எந்த மதத்தையும் யாரும் தழுவலாம் என்று வழிபாட்டுச் ;சுதந்திரத்தைத் தந்துவிட்டு, அதில் கிறித்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் சாதியினரின் இதயத்தை அறுத்து எடுப்பது போல பட்டியல் சாதிக்குரிய சலுகைகள் ஃ உரிமைகளை அச்சாதியின்; கிறித்தவர்களுக்கு கிடைக்கவிடாமல் அரசே செய்யலாமா?
  8. இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 25(2)(அ) ல், “மத வழிபாட்டுடன் தொடர்புடைய பொருளாதாரம், நீதி, அரசியல் மற்றும் இதர மதச்சார்புள்ள செயல்களுக்கு தேவைப்படும் சட்டத்தை அமல்படுத்த அல்லது புதிய சட்டத்தை அரசு உண்டாக்கலாம் “என்று உள்ளது.
  ஆனால் ஒரேசாதியினர், மதத்தினால் இருபிளவாக்கப்பட்டபோது, கிறித்தவ தாழ்த்தப்பட்டவர்கள், இந்து தாழ்த்தப்பட்ட சாதியினர் பெறும் அரசு சலுகைகளைப் பெற முடியவில்லை. இதனால் ஒரே சாதியினருக்கிடையே பொருளாதாரம், நீதி, அரசியல், மதச்சார்புள்ள செயல்கள் போன்ற எல்லாவற்றிலும் ஏற்றதாழ்வு ஏற்பட்டுள்ளன. இதனைச் சரிப்படுத்த வேண்டி பாராளுமன்றத்தில், ஒரே சாதியிலுள்ள எந்த மதத்தினரும் ஒரே பட்டியலில் இருக்கும் படி ஆளுங்கட்சியினர் சட்டம் போட்டு இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தைக் காக்க முன்வருவார்களா?
  இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 46 ,ன்படி “பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் பொருளாதார, வளர்ச்சித் திட்டங்களை அரசு அமல்படுத்துவதுடன், சமூக அநீதி, அனைத்துச் சுரண்டல்களிலுமிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும்“ என்று உள்ளது.
  ஆனால், தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களுக்;கு, தம் சாதியின் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பெறுகின்ற அரசின் சலுகைகளான பொருளாதாரம், வளர்ச்சித் திட்டங்கள், சமூக நீதி;யை அரசு சமமாக வழங்காமல் அரசே சுரண்டிப் பாதகம் செய்கிறது. இக்கோட்பாட்டை நிறைவேற்ற விடாமல் ஜனாதிபதியின் ஆணையால் கிறித்தவ தாழ்த்தப்பட்டவர்களுக்கு அரசு பாதுகாப்புத் தராமல் நோகடித்துக் கொல்லுகிறது என்பதே உண்மை! என்பதை அரசாளுவோர்கள் உணர்கிறார்களா?
  9. மேதகு ஜனாதிபதியின் ஆணையின்;படி தாழ்த்தப்பட்ட கிறித்தவர்களை தாழ்த்தப்பட்டவர் என்ற பட்டியல் சாதிக்குள்ளே வைக்க முடியாத காரணத்தால், அரசியல் சாசனக் கோட்பாடுகளின் முகவுரையும், கோட்பாடுகளான 15(1), 17, 25(1), 46, அனைத்தும் ஆளுங்கட்சியின் ஆட்சிகளில் ஆதிக்க சாதிவெறி; பிடித்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாகத் தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சலுகைகளை அனுபவிக்கவும் முடியாமல் பின்தங்கிய சாதியினரால் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாக்கப்படுகின்றனர். வன்கொடுமை செய்தவர்கள் மீது வழக்குத் தொடுக்கவும் வகையின்றி சட்டத்தால் முடக்கப்படுகின்றனர். தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினரும்; இவர்களை சமமாக மனதால் நினைத்தாலும் சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாமல், பின் தங்கிய சாதிகளும் இவர்களை சமமாக ஏற்றுக் கொள்ள மனமில்லாமல,; ஒருவகை மதத்தீண்டாமையின் கொடுமைச் சிறைக்குள் தலித் கிறித்தவர்களென்று விலங்கிடப்பட்டு அல்லல்படுகிறார்கள்.
  இந்தியாவில,; தாழ்த்தப்பட்ட அனைவரும் எங்கே கிறித்தவர்களாக மாறி விடுவார்களோ என்று பயந்த இந்திய அரசு, இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிராக மேதகு பாரத ஜனாதிபதி மூலம் இந்த ஆணையைப் போட்டது மாபெரும் பாதகச் செயலாகும் . பிற்படுத்தப்பட்ட, முற்படுத்தப்பட்ட சாதிகளின் கிறித்தவ சபையினர் இவ்வாறு தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் அல்லாடுவதைக் கண்டுங் காணாமல் இருப்பதற்கு என்ன உள் நோக்கமோ?
  10. தாழ்த்தப்பட்டஃ பழங்குடி கிறித்தவர்கள் மீண்டும் பட்டியல் இனமாக மாற்றப்;பட வேண்டுமானால் இந்திய அரசியல் சாசனம் கோட்பாடு 341(2),342(2) ன்படி பாராளுமன்றத்தின் சட்டம் மூலம் தான் நிறைவேற்றப்பட வேண்டும் எனவே, ஆளுங்கட்சியின் அரசாங்கம் கிறித்தவர்களை பட்டியல் இனத்தில் வைக்க பாராளுமன்றத்தில்; உடனே சட்டம் இயற்றுமா?
  இந்திய அரசியல் சாசனக் கோட்பாடு 25(2)(அ) ன்படி இந்திய அரசு தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள், தம்முடைய பொருளாதாரம், நீதி , அரசியல் இவைகளில் முன்னேற, இவர்களை பட்டியல் சாதிக்குள் கொண்டு வந்து தேவையான சலுகைகளை வழங்க அதற்கான சட்டத்தை உடனே இயற்றுமா?
  11. தாழ்த்தப்பட்டோர் ஃ பழங்குடியினர் வன்கொடுமைச் சட்டம் 1989 பிரிவு 3(1)8 கூறுவது , “தாழ்த்தப்பட்ட ஃ பழங்குடியினருக்கு எதிராகப் பொய்யான தீய நோக்கத்துடன் அலைக்கழிப்புக்கு உள்ளாக்கும் நோக்கோடு உரிமையியல் சட்டம் அல்லது குற்றயியல் சட்டம் அல்லது பிறசட்டமுறை நடவடிக்கைகளைத் தொடுப்பது“ தண்டனைக்குரியது என்று உள்ளபோது,
  பிற சமூகங்கள் சமமான அங்கிகாரத்தைக் கொடுக்காத பட்சத்தில், மதத்தைக் காரணமாக்கி கிறித்தவ தாழ்த்தப்பட்டவர்களை, பட்டியல் சாதிக்குள் வராது என்று ஆணையிட்ட ஜனாதிபதியின் பிற சட்டமுறை நடவடிக்கை என்ற செயலே ஃ ஆணையே வன்கொடுமைச் சட்டத்துக்குள் வரக்கூடியது தானே! பொய்யாகத் தீய நோக்கத்துடன் அலைக் கழிப்புக்குள்ளாகும் பிறசட்டமுறை நடவடிக்கைகளை அரசு அமல்படுத்துவது குற்றத்தண்டனைக்குரிய செயல்அல்லவா? அரசே இவ்வாணையை இன்னும் தொடர்வதும் குற்றமல்லவா?
  12. போலிக் குல உயர்வுக்காக சாதியின் இழிவை மறைக்க இசைவேளாளர்களாக மாற்றிக் கொண்ட அருந்;ததியர்கள்:
  “இசைவேளாளர்கள் தெலுங்குப் படையெடுப்பின் போது ஆந்திராவில் இருந்து தமிழகம் வந்தவர்கள் அல்லது ஆந்திராவில் இருந்து வந்த நடனக் குழுவினர். தேவதாசி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வரும் வரை இம்மரபுப் பெண்கள் கோயில்களில் தேவரடியராகப் பணிபுரிந்து வந்ததுடன் பரத்தையர்த் தொழிலும், கலைத் தொழிலும் நடத்திவந்தனர் “ பக்கம் 50, வேளாளர்யார்? இரா.தேவஆசீர்வாதம்.
  3.8.2010 அன்று சன் தொலைக்காட்சிகாட்டிய நிஜம் நிகழ்ச்சியில் ஆந்திராவில் தாழ்த்தப்பட்டவர்கள் மாலா, மாதிகா என்ற வேறுபட்ட இருபிரிவினர் உள்ளதாயும், மாலா அரிசனங்கள் என்றும், மாதிகா ஆதிஅருந்ததியர் என்றும் ஒளிப்;பரப்பப்பட்டது. ஆதிஅருந்ததியர் மட்டுமே கோயில்களுக்குக் கன்னிப்பெண்களை மாத்தம்மா என்ற பெயரில் தானம் செய்து அல்லது பொட்டுக்கட்டி அல்லது தேவரடியார்களாக்கி தொன்றுதொட்டு பெண்களை பரத்தையர்த் தொழிலுக்கும், நடன கலைத் தொழிலுக்கும் உட்படுத்தி வருகின்றனர் என்ற தெளிவான கருத்துக்கள் சாட்சியாக ஆதாரங்களுடன் நேரடியாக ஒளிப்பரப்பப்பட்டன.
  மேற்படி இரண்டு கருத்துக்களின் உண்மையிலிருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வந்த அருந்ததியர்களில் ஒரு பிரிவினர் தமிழகத்தில் தம் சாதிப் பெயரை இசைவேளாளர் என மாற்றிக் கொண்டது தெளிவு.
  எனவே ஆந்திராவில் தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இனம் தமிழகம் வந்தபின் தம் சாதிப் பெயரை மாற்றி உயர்சாதி ஆக்கிக் கொண்டு மிகவும் பின்தங்கிய சாதியினரின் சலுகையை சில நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பது சட்டப்படி குற்றமல்லவா?
  ஒரு இனம் தம் மீது திணிக்கப்பட்ட இழிவைத் துடைத்தெறிய முயல்வது பாராட்டப்பட வேண்டிய உயர்ந்த கொள்கை ! தமிழகத்தில் இந்து மதத்தின் பெயரால் தாழ்த்தப்பட்டவர்கள் மீது திணிக்கப்பட்ட இழிவைத் துடைத்தெறிய கிறித்தவ மதத்திற்கு மாறியதும் இது போலத்தான் என்பதை நீதிமான்கள் உணர வேண்டும்.
  தமது, பநிர்வீக அருந்ததியர் சாதி எவருக்கும் தெரியக் கூடாது என்று தானோ கலைஞர் அவர்கள் தம் குடும்பத்தாருக்கு அடுத்த சாதிகளில் திருமணம் செய்து வைக்கிறார்? தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு அளிக்கப்பட்ட உள் ஒதுக்கீடு மேம்பாட்டுக்காகவா? அல்லது இரத்தப் பாசத்திற்காகவா? தான் பநிர்வீகத்தில் தமிழன் இல்லை என்பதால்தான் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்களை அழித்து ஒழிக்கும் ராஜதந்திர அரசியலை தமிழகத்தில் நடத்துகிறாரோ?
  13. திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., கிறித்தவ மதத்தில் இருந்து முறைப்படி இந்துவாக மாறியுள்ள நிலையில், பொய்ச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்தார் என்று மேற்படி இந்திய அரசியல் சாசன கோட்பாடுகளுக்கு எதிராக பணிஇடைநீக்கம் செய்தது சரியா? இது குற்றம் என்றால் மேற்;படி ஆந்திராவில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட அருந்ததியர்கள் தமிழகத்தில் குடியேறி இசைவேளாளர்கள் என்று தம் சாதியை மறைத்துப் பொய்ச்சாதியை புதிதாக எழுதி தம்மை உயர்ந்த சாதியாக்கி சட்டத்திற்கு விரோதமாகச் சான்றிதழ் பெற்று மத்திய, மாநில அரசுப்பணிகளில் ஆண்டாண்டு காலமாய் அமர்ந்தது பற்றி இந்தியஅரசு விசாரணைக் கமிநுன் அமைத்து நடவடிக்கை எடுக்குமா?
  14. தாழ்த்தப்பட்ட கிறித்தவர்கள் சாதியின் காரணமாக கொடுமைப்படுத்தப்பட்டுப் புகார் கொடுத்தால் புகாரின் உண்மையைக் காணவேண்டி புலன்விசாரணை செய்யாமல் “அரசாணைப்படி நீங்கள் பட்டியல் இனம் அல்ல, உங்கள் புகார் மீது தீண்டாமை ஃ வன்கொடுமை வழக்குப் பத

 4. சரியாக பதிவு செய்துஉள்ளீர்கள்.. ஆந்திராவில் தேவதாசி தொழில் செய்துவந்தவர் தமிழ்நாட்டில் இம்மண்ணை ஆட்சி செய்து வந்த மூவேந்தர் மரபிரனான தேவேந்திர குலத்தாரை தலித், அரிசன் என்று பெயர் வைக்க அவர் யார்?

Comments are closed.