உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான்- அசிங்கம், ஆபாசம், செம்மொழி மாநாடு.

 400 கோடி ரூபாயில் தமிழை வளர்ப்பதற்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் செம்மொழி மாநாட்டில் கவியரங்கில் கலந்து கொண்ட கவிஞர்களின் செம்மொழி ஆய்வுக் கவிதைகள் சாம்பிளுக்குச் சில,

கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும்:கவிஞர் வைரமுத்துகவிஞர் வைரமுத்து,பெருத்த நிலம் உண்டு ஆனால் கோவை பொருத்த நி‌லம் என தேர்வு செய்தாய் , தமிழ் மொழிகள் உலகத்திற்கும் செல்ல வேண்டும், கலையெல்லாம் தமிழுக்கு துணையாக வேண்டும். கலைஞருக்கு தமிழ் உலகம் நன்றி சொல்ல வேண்டும், கலைஞர்தான் மறுபடியும் முதல்வராக வேண்டும்’’ என்று கவிதை படித்தார்.
‘’

கவிஞர் நா.முத்துக்குமார்,நெல்லை கவிஞர் ‌ஜெயந்தா,

தலை வைத்ததால் தண்டவாளம் கூட தமிழ் பேச கற்றுக்கொண்டது. கலைஞர் கால் வைத்ததால் கோவை மாநகர் செம்மொழி மாநாடு நடக்கும் தகுதி பெற்றது. வைரமுத்து தலைமையில் இங்கு முத்து நான் வந்திருக்கிறேன். அவரது பெயரின் முடிவு.. எனது பெயரின் தொடர்ச்சி , இது எனக்கு மகிழ்ச்சி. தமிழுக்கொரு தகுதி உண்டு. தண்ணீரில் மூழ்கினால் முத்துக்குளிக்க முடியும், தமிழில் மூழ்கினால் முத்துக்குளிக்க வைக்கும். எல்லா மாமியாருக்கும் தமிழை பிடிக்கும், காரணம் அவள் சீர் கொண்டு வருவதால் தமிழ் கண்டிப்பான தாய், தமிழ் ஒரு மருத்துவர் மாத்திரை போன்றது. தமிழ் ஒரு தன்மானம் கொண்டவள் கால் மேல் கால் போட்டு உட்காருவாள், தமிழுக்கு ஒரு போராட்ட குணம் உண்டு எனவேதான் ஆயுத எழுத்தை வைத்திருக்கிறாள். கலைஞர் திரை உலகை வென்றவர், எல்லோரது பேனாவும் மீன் பிடிக்கும், கலைஞர் பேனா விண்மீன் பிடிக்கும், கலைஞரும், கடிகாரமும் ஓன்று ’’என்று கவிதை படித்தார்.

’’அரச மரம் அருகே ஆல மரம் இருக்கும். இதில் விழுதுகள் இருக்கும் ஆனால் நீ அதிசய ஆலமரம் எனவே உனக்கு அருகே விருதுகள் இருக்கிறது. வைகை கூட தன்மானம் உள்ளது இது போல தமிழின் தன்மானம் காக்க கலப்படம் இல்லாத கண்ணீராக இருக்க வேண்டும். இது கோடம்பாக்கத்தில் உண்டு.

சின்னத்திரை நடிர்கள் தமிழ் தன்மானம் காக்க வேண்டும், கண்ணில் கவர்ச்சி, கண்ணத்தில் குழி இருப்பது போல், நாக்கில் மொழி இருக்கட்டும். தமிழகத்திற்கு நாட்டின் மீது பற்று அதிகம், அதனால்தான் நட்சத்திரங்கள் நாட்டை ஆள ஆசைப்படுகிறது. ஆனால் அத்தனை நட்சத்திரங்களையும் உடைத்தது சூரியன். அந்த வள்ளூவன் தமிழ் கிடைத்தபோது அதிகாரங்களை பாடினான். இவர் அதிகாரம் கிடைத்த போதெல்லாம் தமிழ‌ை பாடினார். தன்மானம் காத்த தமிழ்தலைவர்கள் பெயர்களை உயிருள்ளவரை நாக்கில் பச்சைக்குத்திக்கொள்வோம்’’ என்று கவியரங்க கவிதை படித்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன்,

இக்காலத்து இளங்கோ நீ, உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான் உனக்கு, ஏழைகளின் இக்கால குலோத்துங்கன், குடிசைவாசிகளுக்கு கான்கிரீட் வீடு கொடுத்த கரிகாலன், செம்மொழி மாநாட்டிற்கு கோவையை தேர்வு செய்த தமிழ்கால பாண்டியன், பாட்டுடை தலைமகனே, செம்மொழி நாயகனே !’’ என்று கவிதை படித்தார்.’’

‘’

3 thoughts on “உனது உமிழ்நீர் கூட தமிழ்நீர் தான்- அசிங்கம், ஆபாசம், செம்மொழி மாநாடு.”

 1. கலைஞரின் துரோகத்தால் ஈழமே சுடுகாடு
  துரோகத்தை மறைக்கவே செம்மொழி மாநாடு!…

  உள்ளூர்த் தமிழா… ஊர் ஊராய் ஓடு! உலகத் தமிழா… கோவையில் கூடு!

  http://vrinternationalists.wordpress.com/2010/06/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF/

 2. எப்போதும் நீயேன் தப்பாகவே புரிந்து கொள்கிறாய் அப்போதும் ஏனோ இனிவெறிக்குள் புதைந்து கொள்கிறாய் தமிழால் நீ அரசியல் நடத்து நான் கவலைப்படமாட்டேன் ஆனால் தமிழுக்குள் அரசியலைப் புகுத்தாதே ஏனேனில் தமிழைச் சாகடிப்பதில் நீ முன் நிற்பாய்
  ஈழத்தில் என் மக்கள் படும் துயரை மட்டும் மத்தியில் வைத்து மற்ற அனைத்தையும் ஓரம் கட்டாதே ஏனெனில் அம்மக்களின் கண்ணீருக்கு உன்னைப்போன்ற உணர்ச்சிப்பெருக்கால் உண்மை மறக்கும் மனிதர்களும் காரணம்

 3. முன்னர் தமிழினி மாநாடு என்ற ஒன்று நடந்தது. அப்போது அல்லா…தமிழ் அறிவ சீவிகளும் அடிச்சுப்பிடிச்சுஓப்பிடிச்சு நக்கிப்பிடிச்சாங்ய்யா!
  அதை அல்லாரும் ஆதரிச்சாங்கய்யா!
  இப்ப செம்மொழி மாநாடு என்னா செக்குமாடு மாநாடு என்னா அல்லாம் ஒண்ணுதான்.

  அப்ப ஆதரிப்பு இப்ப கழுத்தறுப்பா

  அதுவம் இதுவும் வேற இல்ல.
  அதில போனது அறிவ சீவி …இதில போனதும் தமிழ் சீவி.
  சாக்கடை மண்டையங்க
  இதில பொண்ணுங்களும் உண்டு..
  ச.சீ என்னத்தை இதப்பத்தி தொடர்ந்து எழுதுறது

Comments are closed.