உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.

உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக அரசு. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், போலீசும், தமிழக அரசும் ஆதிக்கசாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிற நிலையில் உடைக்கப்பட்ட சுவரின் வழியே உருவாக்கப்பட்ட பாதையில் தலித் மக்களின் அடிப்படை நடமாடும் உரிமை கோரி சி.பி.எம் போராடிவந்தது. போராடியவர்களை கடுமையாகத் தாக்கியது கருணாநிதி அரசு. இந்நிலையில் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கேள்வி: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதோடு, தாங்களும் பலமுறை அதற்காக மாவட்ட கலெக்டரோடு கலந்து பேசி ஒரு சுமூகமான நிலை இருந்து வந்த நிலையில் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கே போராட்டம் நடைபெற்றதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏடுகளில் பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு எதிர்ப்பு என்றால் உடனடியாக கண்டன அறிக்கை விடும் ஒரு சில கட்சிகளும் அறிக்கை விடுத்துள்ளனவே? உண்மை விவரம் என்ன?

பதில்: உத்தப்புரம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே உள்ள பிரச்சினையைக் களைவதற்காககடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்காக நான் எத்தனை முறை மாவட்ட கலெக்டரோடு பேசியிருக்கிறேன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உத்தப்புரம் கிராமத்தில் வாழும் மக்களும் தற்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களால் அவர்கள் அமைதியாக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்தக் கிராம மக்களைத் தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை செய்ய முடியாதா என்று பார்க்கிறார்கள்.

இதற்கோர், உதாரணம் கூற வேண்டுமேயானால், இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வேறு சில தலைவர்களும் இணைந்து ஒரு பத்திரிகைக் குறிப்பையே ஏடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில், “உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் உத்தப்புரம் கிராமத்தில் அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், உத்தப்புரம் கிராமத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது. எங்களுக்குள் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மைஎன்று எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அந்தக் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த போதிலும் அங்கே ஒற்றுமை நிலவக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்கள் யார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். கருணாநிதி குறிப்பிட்டுள்ள எழுதிக் கையெழுத்திட்ட அறிக்கை என்பது போலிசாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் மிரட்டி தலித் மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஒன்றாகும்.

5 thoughts on “உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.”

 1. உத்தபுரத்தில் நிலவும் அமைதி என்பது கருணாநிதி குடும்பத்தில் நிலவும் (தற்காலிக) அமைதி போன்றதுதான்.அதாவது அகத்தில் நெருப்பு முகத்தில் சிரிப்பு..! கோடிகோடியாய் குவிந்திருக்கும் பணத்தை பாதுகாக்கவும் இன்னும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவும் ‘இதயம் இனிக்க கண்கள் பனிக்க’ தான் முன்னின்று ஏற்படுத்திய ‘தற்காலிக சமாதானம் போலத்தான் உத்தபுர சமாதானமும்,அமைதியும் என்பது கருணாநிதிக்கு தெரியாததல்ல.’ஆதிக்க ஜாதி நெருப்பு எரியுது’ என்று தோழர்கள் சொன்னால், கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கருணாநிதி அதை அமைதியின் வெளிச்சம் என்கிறார்.!

  இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது அரை வயிற்று கஞ்சிக்காக உயிரை பணயம் வைத்து பயணம் போகும் அப்பாவி மீனவர்களை ‘பேராசைக்கார மீனவர்கள்’ என்று எழுதிய பேனா கருணாநிதியினுடையது. முள்ளி வாய்க்காலில் யுத்தநிறுத்தம் கேட்டபோது ‘நானொரு அடிமை நீயொரு அடிமை ஒருவர் முதுகிலே ஒருவரடி’என்பது மாதிரி தந்திர அறிக்கை விட்டதைப்போலவே உத்தபுரத்தில் அமைதிக் கொலுவிருப்பதாய் உளறுகிறார் இந்த கோபாலபுரத்து மாஃபியா குடும்பத்தின் தலைவன்.
  மீடியா,சினிமா,ஏற்றுமதி,இறக்குமதி,கட்டுமனத்தொழில்,ஐடி ,ரசாயனம், பர்னிச்சர்,டெக்ஸ்டைல்ஸ்,வாகனம்,மோட்டார்.கல் மண்,குவாரிகள்,கல்வி,மதுபானம்,என்று எல்லா தொழில்களிலும் கால்பதித்து அந்த துறைகளையே கபளிகரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் பேராசையற்ற பெருமக்கள் என நாம் கருத வேண்டும்.அதே போன்று பொன்னுக்கும் பொருளுக்கும் தான்,தன் குடும்பம்,பெண்டு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என்று சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும்,புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமே தான் அடிமை என்பதை கருணாநிதியும் புரிந்து கொள்ளவேண்டும்..!
  தமிழக மக்கள் தொகையில் இசைவேளாளர் என்ற கருணாநிதியின் சமுகம் (சாதி) எத்தனை சதம்? ஆனால் முதல்வர்,துணைமுதல்வர்,திட்டக்குழு தலைவர்,மத்திய கேபினட் அமைச்சர்கள்,ராஜ்ய சபை உறுப்பினர்,இன்னும் பதவி பெறப்போகும் வாரிசுகள் இவைபோக அச்சாதி பெற்றிருக்கும் அதிகார முக்கியத்துவங்கள்,போன்ற விஷயங்களை யாராவது ஆய்வு செய்தால் உத்தபுரம் அமைதியாக இருப்பதன் காரணம் புரியும்.!

 2. Home » உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.
  உத்தபுரத்தில் அமைதி நிலவுகிறதாம்- கருணாநிதி சொல்கிறார்.
  தமிழ்மணம் பரிந்துரை : 0/0

  Pathivu Toolbar ©2010thamizmanam.com

  உத்தபுரத்தில் தலித் மக்களுக்கு எதிராக வெள்ளாளர்கள் தீண்டாமைச் சுவர் கட்டப்பட்டது, நீண்டகாலமாக தீண்டாமையின் வடிவமாக இருந்து வந்த அந்தச் சுவரின் ஒரு பகுதியை மட்டும் இடித்தது தமிழக அரசு. ஆனாலும் மாவட்ட நிர்வாகமும், போலீசும், தமிழக அரசும் ஆதிக்கசாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்கிற நிலையில் உடைக்கப்பட்ட சுவரின் வழியே உருவாக்கப்பட்ட பாதையில் தலித் மக்களின் அடிப்படை நடமாடும் உரிமை கோரி சி.பி.எம் போராடிவந்தது. போராடியவர்களை கடுமையாகத் தாக்கியது கருணாநிதி அரசு. இந்நிலையில் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

  கேள்வி: மதுரை மாவட்டம், உத்தப்புரத்தில் தலித் மக்களின் அடிப்படை உரிமைகள் குறித்து நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருவதோடு, தாங்களும் பலமுறை அதற்காக மாவட்ட கலெக்டரோடு கலந்து பேசி ஒரு சுமூகமான நிலை இருந்து வந்த நிலையில் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அங்கே போராட்டம் நடைபெற்றதாகவும், போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதாகவும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஏடுகளில் பெரிதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன. மேலும், அரசுக்கு எதிர்ப்பு என்றால் உடனடியாக கண்டன அறிக்கை விடும் ஒரு சில கட்சிகளும் அறிக்கை விடுத்துள்ளனவே? உண்மை விவரம் என்ன?

  பதில்: உத்தப்புரம் கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கிடையே உள்ள பிரச்சினையைக் களைவதற்காக – கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசின் சார்பில் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, அதற்காக நான் எத்தனை முறை மாவட்ட கலெக்டரோடு பேசியிருக்கிறேன் என்பதெல்லாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். உத்தப்புரம் கிராமத்தில் வாழும் மக்களும் தற்போது எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களால் அவர்கள் அமைதியாக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மாதத்துக்கு ஒரு முறை அந்தக் கிராம மக்களைத் தூண்டிவிட்டு ஏதாவது பிரச்சினை செய்ய முடியாதா என்று பார்க்கிறார்கள்.

  இதற்கோர், உதாரணம் கூற வேண்டுமேயானால், இந்தச் சம்பவம் நடந்த அதே நாளில் உத்தப்புரம் ஊராட்சி மன்றத்தலைவரும், வேறு சில தலைவர்களும் இணைந்து ஒரு பத்திரிகைக் குறிப்பையே ஏடுகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். அதில், “உத்தப்புரத்தில் கடந்த சில வருடங்களாக இரு சாதி மக்களிடையே தொடர்ந்து பிரச்சினை நிலவி வருவதாக சில அரசியல் கட்சிகள் விஷமப் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால் உண்மையில் உத்தப்புரம் கிராமத்தில் அனைத்துச் சாதியினரும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருகிறோம். சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும், சுயநலத்துக்காகவும், உத்தப்புரம் கிராமத்தைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

  எங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் நல்ல முறையில் செய்து வருகிறது. எங்களுக்குள் சிற்சில பிரச்சினைகள் இருந்தாலும் அமைதியுடன் வாழ்ந்து வருகிறோம் என்பதுதான் உண்மை” என்று எழுதி கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அந்தக் கிராம மக்கள் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்த போதிலும் அங்கே ஒற்றுமை நிலவக் கூடாது என்ற எண்ணத்தோடு செயல்படுபவர்கள் யார் என்பதை சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். கருணாநிதி குறிப்பிட்டுள்ள எழுதிக் கையெழுத்திட்ட அறிக்கை என்பது போலிசாலும் மாவட்ட நிர்வாகத்தாலும் மிரட்டி தலித் மக்களிடம் இருந்து வாங்கப்பட்ட ஒன்றாகும்.

  No Comments
  செழியன்
  Posted on 07/15/2010 at 3:34 pm
  உத்தபுரத்தில் நிலவும் அமைதி என்பது கருணாநிதி குடும்பத்தில் நலவும் அமைதி போன்றதுதான்.அதாவது அகத்தில் நெருப்பு முகத்தில் சிரிப்பு..! கோடிகோடியாய் குவிந்திருக்கும் பணத்தை பாதுகாக்கவும் இன்னும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவும் ‘இதயம் இனிக்க கண்கள் பனிக்க’ தான் முன்னின்று ஏற்படுத்திய ‘தற்காலிக சமாதானம் போலத்தான் உத்தபுர சமாதானமும்,அமைதியும் என்பது கருணாநிதிக்கு தெரியாததல்ல.’ஆதிக்க ஜாதி நெருப்பு எரியுது’ என்று தோழர்கள் சொன்னால், அதை அமைதியின் வெளிச்சம் என்கிற கருணாநிதி,கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார் என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

  இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது அரை வயிற்று கஞ்சிக்காக உயிரை பணயம் வைத்து பயணம் போகும் அப்பாவி மீனவர்களை ‘பேராசைக்கார மீனவர்கள்’ என்று எழுதிய பேனா கருணாநிதியினுடையது. முள்ளி வாய்க்காலில் யுத்தநிறுத்தம் கேட்டபோது ‘நானொரு அடிமை நீயொரு அடிமை ஒருவர் முதுகிலே ஒருவரடி’என்பது மாதிரி தந்திர அறிக்கை விட்டதைப்போலவே உத்தபுரத்தில் அமைதிக் கொலுவிருப்பதாய் உளறுகிறார் இந்த கோபாலபுரத்து மாஃபியா கும்பலின் தலைவன்.
  மீடியா,சினிமா,ஏற்றுமதி,இறக்குமதி,கட்டுமனத்தொழில்,ஐடி ,ரசாயனம்,பர்னிச்சர்,டெக்ஸ்டைல்ஸ்,வாகனம்,மோட்டார்.கல் மண்,குவாரிகள்,கல்வி,மதுபானம்,என்று எல்லா தொழில்களிலும் கால்பதித்து அந்த துறைகளையே கபளிகரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் பேராசையற்ற பெருமக்கள் என நாம் கருத வேண்டும்.அதே போன்று பொன்னுக்கும் பொருளுக்கும் தான்,தன் குடும்பம்,பெண்டு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என்று சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும்,புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமே தான் அடிமை என்பதை கருணாநிதியும் புரிந்து கொள்ளவேண்டும்..!
  தமிழக மக்கள் தொகையில் இசைவேளாளர் என்ற கருணாநிதியின் சமுகம் (சாதி) எத்தனை சதம்? ஆனால் முதல்வர்,துணைமுதல்வர்,திட்டக்குழு தலைவர்,மத்திய கேபினட் அமைச்சர்கள்,ராஜ்ய சபை உறுப்பினர்,இன்னும் பதவி பெறப்போகும் வாரிசுகள் இவைபோக அச்சாதி பெற்றிருக்கும் அதிகார முக்கியத்துவங்கள்,போன்ற விஷயங்களை யாராவது ஆய்வு செய்தால் உத்தபுரம் அமைதியாக இருப்பதன் காரணம் புரியும்.!

  Reply செழியன்
  Posted on 07/15/2010 at 3:41 pm
  உத்தபுரத்தில் நிலவும் அமைதி என்பது கருணாநிதி குடும்பத்தில் நிலவும் (தற்காலிக) அமைதி போன்றதுதான்.அதாவது அகத்தில் நெருப்பு முகத்தில் சிரிப்பு..! கோடிகோடியாய் குவிந்திருக்கும் பணத்தை பாதுகாக்கவும் இன்னும் கோடிகோடியாய் கொள்ளையடிக்கவும் ‘இதயம் இனிக்க கண்கள் பனிக்க’ தான் முன்னின்று ஏற்படுத்திய ‘தற்காலிக சமாதானம் போலத்தான் உத்தபுர சமாதானமும்,அமைதியும் என்பது கருணாநிதிக்கு தெரியாததல்ல.’ஆதிக்க ஜாதி நெருப்பு எரியுது’ என்று தோழர்கள் சொன்னால், கண்களை மூடிக்கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கும் கருணாநிதி அதை அமைதியின் வெளிச்சம் என்கிறார்.!

  இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது அரை வயிற்று கஞ்சிக்காக உயிரை பணயம் வைத்து பயணம் போகும் அப்பாவி மீனவர்களை ‘பேராசைக்கார மீனவர்கள்’ என்று எழுதிய பேனா கருணாநிதியினுடையது. முள்ளி வாய்க்காலில் யுத்தநிறுத்தம் கேட்டபோது ‘நானொரு அடிமை நீயொரு அடிமை ஒருவர் முதுகிலே ஒருவரடி’என்பது மாதிரி தந்திர அறிக்கை விட்டதைப்போலவே உத்தபுரத்தில் அமைதிக் கொலுவிருப்பதாய் உளறுகிறார் இந்த கோபாலபுரத்து மாஃபியா குடும்பத்தின் தலைவன்.
  மீடியா,சினிமா,ஏற்றுமதி,இறக்குமதி,கட்டுமனத்தொழில்,ஐடி ,ரசாயனம், பர்னிச்சர்,டெக்ஸ்டைல்ஸ்,வாகனம்,மோட்டார்.கல் மண்,குவாரிகள்,கல்வி,மதுபானம்,என்று எல்லா தொழில்களிலும் கால்பதித்து அந்த துறைகளையே கபளிகரம் செய்துவரும் கருணாநிதி குடும்பத்தினர் மட்டும் பேராசையற்ற பெருமக்கள் என நாம் கருத வேண்டும்.அதே போன்று பொன்னுக்கும் பொருளுக்கும் தான்,தன் குடும்பம்,பெண்டு பிள்ளை, பேரப்பிள்ளைகள் என்று சொந்தங்களுக்கும் பந்தங்களுக்கும்,புகழ்ச்சிக்கும் மகிழ்ச்சிக்குமே தான் அடிமை என்பதை கருணாநிதியும் புரிந்து கொள்ளவேண்டும்..!
  தமிழக மக்கள் தொகையில் இசைவேளாளர் என்ற கருணாநிதியின் சமுகம் (சாதி) எத்தனை சதம்? ஆனால் முதல்வர்,துணைமுதல்வர்,திட்டக்குழு தலைவர்,மத்திய கேபினட் அமைச்சர்கள்,ராஜ்ய சபை உறுப்பினர்,இன்னும் பதவி பெறப்போகும் வாரிசுகள் இவைபோக அச்சாதி பெற்றிருக்கும் அதிகார முக்கியத்துவங்கள்,போன்ற விஷயங்களை யாராவது ஆய்வு செய்தால் உத்தபுரம் அமைதியாக இருப்பதன் காரணம் புரியும்.!

  1. காணீயன் பின்னூட்டத்தை மிகவும் ரசித்தோம்.தொடர்ந்து வாருங்கள்.

 3. அன்பார்ந்த தமிழ்க மக்களே சாதியால் பிரிந்து நிற்காது தமிழராய் ஒன்றூ படிங்கள்.உதாரணமாய் ஈழ்த் தமிழர் இருக்கிறோம்.ஒட்டு மொத்த தமிழரையும் ஒரு தலித்தே தலமை தாங்கினார் தலித்,சாதி இந்து எனப் பாராது நாம் தமிழராய் வாழ்கிறோம் நீங்க்ள் மட்டும் ஏன் பிரிந்து நிற்கிறீர்கள்.தமிழாய் தமிழ் உணர்வாய் பொங்கிப் பாயும் தமிழ் உறவுகளாய் நீங்கள் மாற வேண்டாமா?

  1. யாரந்தத் தலித்?
   காமராஜரா? நாடார் சமூகம் தன்னைத் தலித் என்று ஏற்காது.

Comments are closed.