உதுல் பிரேமரட்ன கைது செய்யப்படுவார் – கறுவாத்தோட்டப் பொலிஸார்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரத்ன கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு-கறுவாத்தோட்டப் பொலிஸார் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் உயர்கல்வி அமைச்சிற்குள் அத்துமீறிப் பிரவேசித்து பொதுச்சொத்துக்களைத் தூண்டியமை, அரசாங்கத்துக்கெதிரான மாணவர் கிளர்ச்சிகளுக்குத் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுளுடன் வன்முறையில் ஈடுபட்டமை மற்றவர்களை அதற்காகத் தூண்டியமை ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தான் கைது செய்யபடுவேன் என்|று உதுல்  இனியொருவிற்கு  தொலைபேசி  ஊடாகத் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.