ஈழ ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவார்கள். தமிழக அரசு அச்சுறுத்துகிறது.

தமிழகத்தின் காலை நாளிதழ்களில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிப்போர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்கிற தொனியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது தமிழக அரசு. திமுகவின் நண்பனான காங்கிரஸ் கட்சியின் நெருக்குதல் காரணமாக மட்டுமல்லாமல் கருணாநிதியின் அமைச்சரவையில் உள்ள சிலரும். அவரது மகளும் கவிஞருமான கனிமொழியும் இலங்கைத் தூதரோடு நடுபுறவாடுகிற சூழலில் தமிழக அரசு இலங்கை அரசோடு நெருக்கம் பேணுவதாகத் தெரிகிறது. இலங்கை அரசு நேரடியாகவே தமிழக அரசுடன் நெருக்கம் பேணுகிற சூழ்லும் உருவாகியிருக்கிற தோதில் தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்கள் ஈழம், புலிகள், தமிழீழம் என்றெல்லாம் பேசக் கூடாது என்கிற தொனியில் போலீஸ் தொடர் எச்சரிக்கையை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில நடந்து முடிந்த நாடாளும்ன்றத் தேர்தலில் ஈழ ஆதர்வாளர்களுக்கு கிடைத்த தோல்வியைப் பயன்படுத்தியே தமிழக அரசு இவர்களை ஒடுக்க நினைக்கிறது என்கிற பேச்சும் அரசியல் வட்டாரத்தில்  அடிபடுகிறது.