டி. அருள் எழிலனின் “பேரினவாதத்தின் ராஜா” நூல் வெளியீட்டு விழா!

perinavathathin-raja-arul-ezhilanகலந்து கொள்பவர்கள் : தமிழருவி மணியன், பி.சி. வினோஜ்குமார், மீனா கந்தசாமி, பீர் முகம்மது, நடராஜா குருபரன், ரஞ்சிதா குணசேகரன், பாரதி தம்பி, ராஜுமூருகன், டி. அருள் எழிலன்.

நிகழ்வு: 06- 12 2009 ஞாயிறு, நேரம் மாலை 6.00 மணி,

இடம்: புக்பாயிண்ட் (ஸ்பென்சர் எதிரில்) அண்ணாசாலை, சென்னை.

நிகழ்வும், ஏற்பாடும்: புலம் பதிப்பகம்.

“எரிந்து கொண்டிருக்கும் இம்மக்களை விட்டு எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் நீதி பேசுகிறார்கள். பாசிசத்தின் காலடியில் அறம் செத்துக் கிடக்கிறது. பெரும்பான்மைவாதத்தின் சர்வாதிகார முகங்கள் ஜனநாயக முகமூடிகளை அணிகிறார்கள் இப்போது. நாடுகள் எரிந்து கொண்டிருக்கிறது. தேசிய வெறியால் ஈழ மக்களைச் சுட்டதும் இந்த நெருப்புதான். விஸ்தரிப்பு நோக்குடன் எவனெல்லாம் மக்களை நிலங்களிலிருந்து பிடுங்கி வீசுகிறானோ அவனெல்லாம் பேரினவாதிதான். ஆமாம் அதுதான் இப்போது ஈழத்தில் நடந்து கொண்டிருக்கிறது.“