ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

ஈபிஆர்எல்எவ் (பத்மநாபா)வின் தேர்தல் விஞ்ஞாபனம் நேற்று(21.03.2010)   யாழ்ப்பாணத்தில் கூட்டப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதரன் (சுகு) தலைமையில் நடைபெற்ற இப் பத்திரிகை மகாநாட்டில் கட்சியின் சார்பில் 2010 பொதுத் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களும், கடசியின் முன்னணி உறுப்பினர்களும் பங்கு பற்றினர்.

இப் பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அம்சங்கள் விளக்கப்பட்டும் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.

10 thoughts on “ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.”

 1. இதன் பிரதி எங்கு கிடைக்கும்?
  அவர்களது இணையத்தள முகவரி உண்டா?

 2. அண்ணையோ, தம்பியோ சிவாவுக்கு, இவையள் http://www.eprlf.net/ எண்டு ஒரு இணையம் வச்சுக்கினம் தான் அதில பதினைஞ்சாம் திஹதிக்கு பிறகு ஒண்டும் இல்லை. அந்தாள் நல்ல மனுஷன் நாபா போய்செந்துவிட்டார். பிறகு ராபர்ட்டையும் போட்டிட்டாங்கள் (ராபர்ட்டையும் டக்கிளஸ்தான் போட்டதோ புலிக்கு மெல்லவா தஹவல் அனுப்பி போட சமிக்க்சை கொடுத்ததாகவோ ஒரு கேள்வி அதுவும் டொராண்டோவில இருந்துதான் கசிஞ்சது) . கேதீசையும் போட்டிடான்கள். இப்ப உவயல்ல எத்தனை பிரிவு. டக்கிளஸ் ஒரு பிரிவு, மற்ற சுரேஷ் ஒரு பிரிவு. இவர் ஸ்ரீதருக்கு தலைவர் என்கிறவர் இந்தியாவில ராஜ போக வாழ்க்கை, மகளுக்கு வடநாட்டான் கல்யாணம். மற்ற மகள் சினிமாவில. இவரோட கூடி போன பெடியள் முகாம்களில (சிலர் குடும்பத்தொடையும் போனவை) ரிஹ்ஷா இழுத்தும் கூலி வேலை செய்தும் பிழைப்பு. உந்த கரூர் சம்பவத்தில பிடிபட்டு இருக்கிறவையும் இவயிண்டை ஆக்கலாம்.

  இப்ப இந்த வின்ஜாபனம் விட்டவர் கட்சியிண்டை பெயரை கூட கோட்டை விட்டு சுரேஷ்யிடை கொடுத்திட்டு ஒரு வெப் சயேட்டே நடத்த முடியாமல் இருக்கினம். முதல் இவைஎண்டை கட்சியில எத்தனை பேர் இருக்கினம் எண்டே தெரியாது. அந்தாள் இரா. துரைரத்தினமும் இவையலயொட இருந்தால் சரிப்பட்டு வராதெண்டு சம்பதரோட கூட்டு சேந்திட்டார்.

  முந்தி இடது சாரி கொல்கஎண்டு தொடங்கினவை. இப்ப என்ன கொள்கையோ. இவையோட கூட்டு வைச்ச சங்கரியும் இப்ப தனிய இவைக்கு போட்டியா. புளொட் காரருக்கும் யாழ்பாணத்து பெடியளை உட்கொளையில பிரசித்தம் முக்கியமா சந்ததியிண்ட சுழிபுரம் பக்கம் தலை வைக்க முடியாது. டக்கிளஸ் இண்டை ஆக்களும் புலோட்காறரை எலக்ஷன் வேலை செய்ய விடமாடினம், புலோட்காரரும் தனிய யாழ்பாணம் போகாமல் ஸ்ரீதருக்கு பின்னலை போகினம்.

  இதுல ஒரு கிசு கிசுவும் சங்கரியிண்டை கொழும்பில எலக்க்ஷன் கேட்கிற மகனும் புலோட்காரரும் நல்ல ஓட்டாம். சங்கரி கனடாவுக்கு டொராண்டோவுக்கு போனால் கனடா புலோட்காரர் தானாம் கூட்டங்களுக்கு பாதுகாப்பாம் , சித்தார்த்தனும் டொராண்டோவுக்கு போனால் சங்கரியிண்டை மகனொடதான் திரியிரத்து தன்கிரதாம். இப்ப கொழும்பில எலக்க்ஷன் கேக்க புலோட்காரர் தான் முன்னுக்கு விட்டு இருக்கினமாம். கிழக்கிலையும் பிள்ளையானுக்கு கருணாவுக்கு எதிரா நேர போகாமல் யாரையும் இப்பிடி விட பாத்திடுப்பினம் துறைரத்தினத்தாரும் அங்கால போட்டார். புளொட்காரரும் தனிய வன்னிய விட்டு வெளிக்கிட முடியாத நிலை. இந்த ஸ்ரீதர் தான் பாவப் பட்ட ஜென்மம். டக்கிளஸ்வோட பிரச்சனை வந்தால் அதுவும் டக்கிளஸ் அரசாங்க வெத்திலையில எல்லாம் ஸ்ரீதர் தானே முகம் கொடுக்க வேணும். இதை விட அங்கை சிறுபான்மை, தாழ்த்தப்பட்டவை என்டவேட்ட பலர் வாக்கு கேட்ட்கினம்.
  மகிந்த ராசபக்சவின் ஆதரவு பெற்ற மக்கள் கட்சியினால் நிறுத்தப்பட்டிருக்கும் சுயேச்சைக்குழுவுக்கு செங்கைஆழியான் க.குணராசாவும், சிறுபான்மை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழுவுக்கு எழுத்தாளர் தெணியானும் தலைமை தாங்குகினம். இந்த வள்ளலா இடதுசாரி முன்னணியில சிறிகாந்தா, சிவாஜிலிங்கமும் கேட்கினம்.
  இதுல இந்த தேர்தல் வின்ஜாபனம் விட்டு என்ன சொல்லப்போகினம். சிலவேளை புலோட்காரர் எழுதி கொடுத்ததை சொல்லுவினம். இல்லாட்டி இந்தியாவில அகல வசதியோட இருக்கிற முன்னால் அமைச்சர் ஏதாவது எழுதி அனுப்பி இருப்பார். இந்த ஸ்ரீதர் தானே முகம் கொடுத்து முட்டுப்படுறது.

 3. முதலிலை புதிய ஜனநாயகக் கட்சி அறிக்கை வந்துது.

  அதன் பிறகு த.தே.கூ. அதிலை கொஞ்சம் கொப்பியடிக்கப் பாத்துத் தங்களின்டை வரலாற்றையே குழப்பிஅடிச்சுப் போட்டினம். (ஞாயிறு தினக்குரலிலை மறுபக்கம் பாக்கிறனியளோ? கொஞ்சப் புலுடாக்களைத் தான் நக்கலடிச்சிருந்துது).

  பிறகு தமிழ்க் கொங்கிரஸ்காரர் வட்டுக்கோட்டைக்குப் போக வழி தேடுகினம்.

  மற்றவையும் என்ன சொல்லுகினை எண்டு தெரிய வேணாமோ?

 4. யாழ்ப்பாணத்திலை காசுள்ள கட்சிக்காறர் எல்லரும் போஸ்ற்றர் யுத்தமெல்லோ நடத்துகினம்.
  அவைக்குக் கொள்கை என்ன கோவணமென்ன?

 5. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடும், வேட்பாளர் அறிமுகமும் அந்தக் கட்சியின் தேர்தல் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கும்போது எடுக்கப்பட்ட படம். http://www.tamil.dailymirror.lk/2009-08-26-06-32-39/1370-ஈ-பி-ஆர்-எல்-எப்பின்-தேர்தல்-விஞ்ஞாபனம்-வெளியீடு

 6. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பாராளுமன்றத் தேர்தல் 2010 தேர்தல் விஞ்ஞாபனம்

  தமிழ் மக்களின் இன்றைய நிலைமை

  இலங்கை வாழ் தமிழ்பேசும் மக்கள் சிறுபான்மையினர்கள் என்பதால் காலம்காலமாக பற்பல இனரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், அடிப்படை உரிமைகள்; ரீதியாகவும் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சொல்லொணாத் துன்பங்களாலும் இழப்புக்களாலும்; வாழ்வில் மிகவும் நொந்து போயிருக்கிறார்கள்; விரக்தியின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, கடந்க பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் பட்ட துன்பங்களும் இழப்புக்களும் வேதனைகளும், சோதனைகளும் கணக்கலடங்காது.
  தமிழ்மக்களின் உடனடித் தேவைகள்

  இன்று பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களின் வாழ்க்கை சீரழிக்கப்பட்டு விட்டது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல வாழ்க்கை மீளமைய வேண்டும். அதற்கான அவர்களுக்கு உடனடி அடிப்படைத் தேவைகளாக:

  • சீரான இல்லம் வேண்டும்;;;
  • வேண்டிய உடைகள் வேண்டும்;.
  • சுகாதாரமான சூழல் வேண்டும்;
  • வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு உரிய தொழில் வேண்டும்.
  • பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வேண்டும்,
  • இலங்கையில் எங்கும் செல்ல இலகுவான போக்குவரத்தும் மற்றும் சர்வதேச தொடர்பு வசதிகளும் வேண்டும்;.

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடு

  எமது கட்சியாகிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(பத்மநாபா)யின் நிலைப்பாடானது, தமிழ்பேசும் மக்களின் தேவைகள் நிறைவேறி, இலங்கைவாழ் சமூகங்கள் அனைத்தும் சமாதானத்துடனும், சமூக, கலாச்சார, பொருளாதார மேம்பாட்டுகளுடனும் வாழும் உயர் நிலைமையை அடைய வேண்டுமாயின்:
  ;
  • வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுய நிர்ணய அதிகாரங்கள் கொண்ட அரசியற் தீர்வு வேண்டும்.

  • அங்கு உண்மையான ஜனநாயகச் சூழல் நிலவி, ஜனநாயக அரசியல் பேணப்படவேண்டும்.,

  • அப் பிரதேசங்களில்; விரைவான பொருளாதார அபிவிருத்திகள் நடைபெற வேண்டும்.

  • மனித உரிமைகள் மதிக்கப்படும் சுதந்திரமான சூழல்கள் வேண்டும்;.

  • மனித உரிமை தனி மனித சுதந்திரம் ஜனநாயகம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான சுயாதீனமான நிறுவனங்கள் சமூகத்தில் அனுமதிக்கப்படவும், ஊக்குவிக்கப்படவும் வேண்டும்.

  • இனம் சாதி மத பேதங்களற்ற சமாதானமும் சமத்தவமும் காக்கப்பட வேண்டும்.

  • அமைதியும், சமாதானமும் மகிழ்ச்சியும் தவழும் தேசம் நிர்மாணிக்கப்பட வேண்டும்.
  இவை கிட்ட வேண்டுமாயின்:-

  • தமிழ் மக்கள் தமது பகுதிகளில் தமது அலுவல்களை தாமே பார்த்துக் கொள்வதற்கு உரிய வகையில் நிலம், கல்வி, சுகாதாரம், பொருளாதார அபிவிருத்திகள், பொலிஸ் விடயங்கள், நகர விருத்திகள், கிராம முன்னேற்றங்கள் போன்ற விடயங்களில் சுயநிர்;ணய உரிமைகள் கொண்டிருக்க வேண்டும்;.– இந்த அடிப்படையில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

  • இலங்கையின் மத்திய அரசாங்க முறைமையில் தமிழர்களும் உரிய பங்காளர்களாக ஆக்கப்பட வேண்டும்.

  • இனவாதங்கள் மதவாதங்கள் அற்ற ரீதியில் இலங்கையில் கல்வியும், அரசாங்க உத்தியோகங்களும் வழங்கப்பட வேண்டும்.

  • தமிழர்களின் பகுதிகளில் சிங்களவர்களை திட்டமிட்டுக் குடியேற்றி தமிழர்களின் பொருளாதார வாழ்வை அச்சுறுத்தும் நிலை இல்லாதொழிய வேண்டும்:

  • இலங்கையின் அரச படைகள் சிங்களப்படைகள் என்ற நிலை மாறி அனைத்து இனத்தவர்களையும் உரிய அளவு கொண்ட உண்மையான தேசியப்படைகளாக ஆக்கப்படுதல் வேண்டும்.

  தமிழர் அரசியலில் ஈபிஆர்எல்எவ் இன் பங்களிப்பு

  • 1988ல் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு அரசியல் அதிகார பகிர்வு முறையை நடைமுறை சாத்தியமாக்கினோம்.

  • குறுகிய காலமாக இருப்பினும் அதுவொரு நம்பிக்கை தரக்கூடிய வெற்றிகரமான முயற்சியாக நாங்கள் முன்னெடுத்தோம்.

  • எமது கட்சியைச் சார்ந்த சிறந்த கல்விமானும் புத்திசாதுரியமும் தீர்க்கதரிசனமும் மிக்க தோழர் வரதராஜபெருமாள் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கின் முதல் தமிழ் முதலமைச்சராகப் பணியாற்றினார். அந்த மாகாண அரச முறைமை சீர்குலைக்கப்படாது இருந்திருந்தால் — தமிழர்களின் சக்திகள் ஒற்றுமையாக அதனை அன்று செயற்படுத்தியிருந்தால் — இன்று இந்த நிலைமை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்காது: 20 வருடங்களுக்கு முன்னரே இழப்புக்களையும் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். தமிழர்களின் ஒற்றுமை, தமிழக மக்களின் அரவணைப்பு, இந்தியாவின் அதரவு, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அகியவற்றுடன் தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து நின்றிருப்பார்கள்.

  தமிழர்களால் இன்று மேற்கொள்ளப்பட வேண்டிய தீர்மானங்கள்

  கடந்த காலத்தில் கிடைத்த வாய்ப்புக்கள் அனைத்தும் தமிழ்ச் சமூகத்தின் தவிர்க்க முடியாத தலைவிதியால் தவறிப் போய்விட்டன. எனினும், இனியாவது எதிர்காலத்தைக் குறித்து தமிழர்கள் அனைவரும் கீழ்க்காணும் தீர்மானங்களை உறுதியாகவும், நிதானமாகவும், சரியாகவும் மேற்கொள்ள வேண்டும்:-

  • வாக்கில் உண்மையும் நடத்தையில் நேர்மையும் அரசியலில் வல்லமையும் கொண்டவர்களையே தமிழர்களின் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்ய வேண்டும்.

  • தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக வன்முறையற்ற பாதைகளில் மக்களை நேரடிப் பங்காளர்களாக அணி திரட்டிப் போராடக் கூடியவர்களையே தலைவர்களாகக் கொள்ள வேண்டும்.

  • தமிழர்கள் மத்தியில் இருந்து மீண்டும் சுயநலமற்ற, சுய தியாகங்கள் செய்யும் தலைவர்கள் உருவாக தமிழர்கள் அங்கீகாரம் வழங்குதல் வேண்டும்.

  • கடந்த தேர்தலில் பணம் பதவி சுகபோகங்களுக்காக ஆசை கொண்ட ஒரு சுயநலக் கூட்டத்தினரை புலிகள் பாராளுமன்றம் அனுப்பி வைத்தார்கள். ஆனால் அவர்களோ சிங்களத் தலைவர்களிடமிருந்து தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெற்றுக் கொண்டார்களே தவிர தமிழ் மக்களின் எந்த நம்பிக்கைக்கும் உரியவர்களாக நடந்து கொள்ளவில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள். இப்போது அவர்கள் நாலு குழுக்களாகப் பிரிந்து நின்று ஆளுக்காள் பாராளுமன்றப் பதவிக்காக குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்டள்ளனர். இவர்களா தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றப் போகிறார்கள்? இவர்கள் அனைவரும் தமிழர்கள் மத்தியில் வீராவேசமாகப் பேசுவார்கள். அளவற்ற ஆசை வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். ஆனால் தேர்தல் முடிந்ததும் கொழும்பு சென்று தமிழர்களின் உரிமைகளை மறந்து விடுவார்கள், அல்லது விற்று விடுவார்கள். இப்படிப் பட்டவர்களை தமிழர்கள் தெரிவு செய்ய மாட்டார்கள் என்னும் நிலையை இனியாவது ஏற்படுத்த வேண்டும்.

  • இனப்பிரச்சினைக்கு இந்தியாவினதும், மற்றைய உலகநாடுகளினதும் உதவியுடன் தீர்வு காண கிடைத்த பல சந்தர்பங்களை நாம் தவற விட்டுவிட்டோம். இனிமேலும் அத்தகைய தவறுகளுக்கு நாம் இடமளிக்கப் படாது.

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரலாறு

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர்:

  • தமிழ் மக்கள் இந்த நாட்டில் சுய நிர்ணய உரிமைகளுடன் வாழவேண்டிய ஒரு தேசிய இனம் என்பதை நிலைநாட்டுவதற்காகக் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடி வருபவர்கள்.

  • இலங்கை சிங்களமக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்பேசும் அனைத்து மக்களுக்கும் சமஉரிமை கொண்ட நாடு என்பதை நிலைநாட்டுவதில் உறுதியாகச் செயற்பட்டு வருபவர்கள்.

  • தமிழர்கள் மத்தியில் சாதி, மத பேதங்களை இல்லாதொழிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிய உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் விடாது போராடி வருபவர்கள்.

  • தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் அரசியற் சக்திகள் மத்தியில் உண்மையான ஒற்றுமை ஏற்படுவதற்காக நேர்மையாக உழைத்து வருபவர்கள.;

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு அளிக்கும் உறுதிமொழிகள்

  தமிழ்மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதே ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் உயரிய இலட்சியங்கள். தமிழ் மக்களின் உடனடித் தேவைகளையும் நீணடகாலக் கனவுகளையும் நடைமுறையாக்க நாம் உரிய உபாயங்களை முன்னெடுப்போம். அந்த வகையில்-

  • நாம் தமிழ் மக்களின் தேசிய அரசியல் உரிமைகளுக்காகத் தொடர்ந்து மக்களை அணி திரட்டிப் போராடுவோம்.

  • தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வுக்காக சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகளின் ஆதரவைத் திரட்டுவோம்;

  • தமிழர்களின் அபிலாஷைகளை நிலைநாட்டுவதற்கு தமிழக மக்களின் உண்மையான ஆதரவையும் இந்திய அரசின் சரியான அனுசரணையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம்;

  • தமிழர்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பைத் திரட்டுவோம்.

  • யுத்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களினதும் வாழ்வாதாரங்கள் மறு நிர்மாணம் செய்யப்படவும், வீடுகள், வீதிகள், பாடசாலைகள, ஆஸ்பத்திரிகள், ஆலயங்கள், நீர்ப்பாசனக் குளங்கள் துறைமுகங்கள் என அனைத்தும் செப்பனிடப்படவும் வேண்டி அரசை உரிமையோடு வலியுறுத்துவோம்.

  • எமது தேசத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் மீண்டும் நவீன நுட்பங்களோடு உயிரோட்டம் பெறவும், பல்வகைப்பட்ட தொழிற் துறைகள் மற்றும் வர்த்தகத் தறைகள் செழிப்படையவும் அத்துடன் எமது கடற்கரைகள் எங்கும் சுற்றுலாத்துறை விரிவுகொள்ளவும் ஆவன செய்வோம்.

  • சிறப்பு முகாம்களிலும் சிறைகளிலும் உள்ள அப்பாவி இளைஞர்களை விடுவிக்க நாம் வேண்டிய கோரிக்கைகளை முன்னெடுப்போம்.

  வடக்கு வலிகாமம் மக்கள் கடந்த 20 வருடங்களாக அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்: பெருந்தொகை குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்கள் இராணுவ பாதுகாப்பு வலயங்களாக இன்னமும் உள்ளன. அவை உடனடியாக நீக்கப்படவும் அகதிகளான மக்கள் மீண்டும்; குடியேறவும் வேண்டியன செய்வோம்.

  • தமிழர் பிரதேசங்களின் முன்னேற்றங்களுக்காகவும் தமிழர்களின் வாழ்வில் செழிப்பு எழுச்சி பெறவும் மேலைத்தேச நாடுகளில் உள்ள இலட்சக்கணக்கான எமது சகோதரர்களின் வளங்கள் வந்தடைய வழிகள் செய்வோம்.

  • இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் உதவிகள் எமது மக்களையும் பிரதேசங்களையும் தவறாது வந்தடைய அனைத்தும் செய்வோம்.

  • இலங்கை மக்கள் ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமைகளை தவறாது அங்கீகரிப்போம். ஆனால் தமிழர் தேசத்தில் அரசின் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கான முயற்சிகளை அங்கீகரிக்க மாட்டோம்.

  • தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் மீண்டும் ஒருங்கிணைந்து ஒரே மாநிலமாக நிமிர்ந்து நிற்க அனைத்து சக்திகளினதும் ஆதரவை அணிதிரட்டுவோம்;.

  • இலங்கை அரசு தமிழ்பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் பகிர்வு திட்டத்தை செயற்படுத்துவதற்கு இந்தியா காத்திரமான பங்களிப்பும், ஒத்தாசையும் வழங்க முடியும். அவற்றினை பெறுவதற்கு நாம் ஆவன செய்வோம்.

  • தமிழர்கள் மத்தியில் இன்னமும் நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்கப் போராடுவோம்: சமூகத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்துக்காக அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.

  • தமிழர்கள் மத்தியில் உண்மையான ஒற்றுமை உருவாகுவதற்க உரிய முயற்சிகள் அனைத்தையும் மக்களின் ஆதரவோடு நேர்மையாக மேற்கொள்வோம்.

  • இலங்கையின் அனைத்து முற்போக்கு ஜனநாயக சமூக சக்திகளின் மத்தியில் புதிய ஐக்கிய முன்னணியொன்று எழுச்சி பெற அனைத்தும் செய்வாம்.

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ்மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்;

  எனவே, இவ்வாறான எமது கட்சியின் வேட்பாளர்களுக்கு உங்கள் வாக்குகளை எமது கட்சியின் தேர்தற் சின்னமான மெழுகுதிரிக்கு நேரே அளித்து அவர்களை நீங்கள் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமென்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

  தமிழர் வாழ்வில் விடிவுகள் பிறக்க மெழுகுதிரிக்கு உங்கள் புள்ளடிகள்!

  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்கு உங்கள் வாக்குகள்!

 7. ஈழத் தமிழரின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக மாறப் போகும் ஏப்ரல் 9 – இரா.துரைரத்தினம்

  முழுநாட்டையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விட்டதாக மகிந்த ராசபக்சவும் சிங்கள தேசமும் எக்காளமிட்டு கொண்டாடிய நாள் மே 19ஆம் திகதி. தமிழரின் ஆயுதபலம் தோற்கடிக்கப்பட்டு வீழ்த்தப்பட்டு விட்டோம் என்று தமிழர்கள் விம்மி விம்மி அழுத நாளும் அதுதான். அரசியல் பலம் மட்டுமே தமிழர்களை தலைநிமிர்த்தும் என்ற நம்பிக்கை இருந்தநிலையில், அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9 ம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது.

  தமிழரின் மிகப்பெரிய ஆயுதபலம் வீழ்ச்சியடைந்த நிலையில் இனிமேல் அரசியல் ரீதியான பலத்தை வைத்தே தலைநிமிர முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே தமிழர்களிடம் இருந்தது.

  ஆனால் அந்த அரசியல் பலமும் ஏப்ரல் 9ஆம் திகதியுடன் மகிந்தவின் கைகளுக்கு போய்விடப்போகிறது. ஆம் ஈழத் தமிழர்களின் இரண்டாவது முள்ளிவாய்க்காலாக எதிர்வரும் ஏப்ரல் 8ம்திகதி அமைய இருக்கின்றது.

  இதை நான் சொல்லும் போது இவர் என்ன மகிந்தவின் பக்கம் சென்றுவிட்டாரா மகிந்தவுக்காக அல்லது டக்ளஸ், கருணாவுக்காக பிரசாரம் செய்ய ஆரம்பித்து விட்டாரா?என்று நீங்கள் யோசிக்கலாம்.

  வடக்கு கிழக்கில் தேர்தல் அரசியல் களநிலவரங்களை பார்க்கும் போது எமது அரசியல் பலத்தையும் மகிந்தவின் கைகளில் கொடுத்துவிடப்போகிறோம் என்று அச்சமே எழுந்திருக்கிறது.

  சிங்கள தேசம் வகுத்த சூழ்ச்சியினால் வடக்கு கிழக்கில் இன்று ஒன்றுமையாக இருந்து செயற்பட வேண்டிய தமிழர்கள் தங்களுக்குள் முட்டி மோதிக்கொள்வதும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தமது பலவீனம் வெளிப்பட்ட நிலையில் அச்சமடைந்திருந்த டக்ளஸ், கருணா போன்றவர்கள் இன்று காலுக்கு மேல் காலைப்போட்டுக்கொண்டு நாம் படுகின்ற பாட்டைப் பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெற்றிக்காக நமது தமிழர்கள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்கள்.

  அது எப்படி சொல்லமுடியும். வடக்கு கிழக்கில் தமிழர்கள்தான் வெற்றிபெறப்போகிறார்கள். உங்களுக்கு என்ன பையித்திமா பிடித்து விட்டது என்று என்னை கேள்வி கேட்கப்போகிறீர்கள் என்பதும் எனக்கு தெரியும். ஆனால் யதார்த்தம் எங்கள் விருப்பத்திற்கு மாறாகத்தான் இருக்கிறது.

  ஒவ்வொரு மாவட்டமாக இருக்கும் களநிலவரங்களையும் வாக்குகள் எவ்வாறு பிரிக்கப்பட போகிறன என்பது பற்றியும் முதலில் பார்ப்போம். அதன் பின்னர் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு பின்னர் தமிழரின் அரசியல் தலைமை யாரிடம் இருக்கப்போகிறது என்பதை தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

  இம்முறை தமிழர் பிரதேசங்களில் வாக்குகள் பிரிக்கப்பட்டு முன்னணியில் இருக்கும் தமிழ் கட்சிகளின் வாக்குவங்கிகளை குறைப்பதற்காகவும் தமிழர் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்காகவும் மகிந்த ராசபக்ச அரசு மிகவும் திட்டமிட்டு செயற்பட்டிருக்கிறது.

  இலங்கையிலேயே ஆகக்கூடிய கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடும் மாவட்டங்களில் அம்பாறை முதலாம் இடத்திலும் மட்டக்களப்பு இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

  முதலில் யாழ்ப்பாண மாவட்டத்தை எடுத்துக்கொள்வோம்.

  யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ( கிளிநொச்சி தொகுதி உட்பட) வாக்காளர்களாக தேர்தல் திணைக்களத்தால் 7இலட்சத்து 21ஆயிரத்து 359பேரின் பெயர்கள் பதியப்பட்டுள்ளன. ஆனால் புள்ளிவிபரத் திணைக்களம் இறுதியாக 2008 ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி 18வயதிற்கு மேற்பட்டவர்கள் 3இலட்சத்து 70ஆயிரத்து 620பேரே இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

  இறந்தவர்கள், காணாமல் போனவர்கள், யாழ்மாவட்டத்தை விட்டு பல ஆண்டுகளுக்கு முதல் வெளியேறியவர்கள் உட்பட அங்கு இல்லாத பலரின் பெயர்கள் வாக்காளர் இடாப்பிலிருந்து நீக்கப்படாததன் காரணமாகவே 7இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் அங்கு இருப்பதாக காட்டப்பட்டு வருகிறது.

  கடந்த ஜனாதிபதி தேர்தலில் அங்கிருந்த வாக்காளர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வாக்களித்திருந்தனர். ஆனால் 7இலட்சம் வாக்காளர்கள் என்ற கணக்கை வைத்துக்கொண்டு அங்கு ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரித்தார்கள் என்று கூட பிரசாரம் செய்தனர்.

  2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்திலிருந்த 95வீதமான மக்கள் வாக்களித்தனர்.

  தற்போது கிளிநொச்சி தொகுதி மற்றும் பருத்தித்துறை தொகுதியின் பெரும்பகுதியான வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களில் பலர் இறுதிக்கட்ட போரின் போது இறந்துள்ளனர். பலர் யாழ் மாவட்டத்திற்கு வெளியில் வவுனியா பகுதிக்கு இடம்பெயர்ந்திருக்கின்றனர். முகாம்களில் இருக்கும் பலர் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்க வில்லை. இதன் காரணமாக நடைபெறப்போகும் தேர்தலில் 2இலட்சத்து 50ஆயிரத்திற்கு குறைவானவர்களே வாக்களிக்கப்போகிறார்கள்.

  யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 15 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 27 அணிகள் போட்டியிடுகின்றன. 324 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் குதித்து பம்பரமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

  தமிழ் கட்சிகள் வரிசையில் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, பிள்ளையான் அணி ஆகிய கட்சிகளும், சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் டக்ளஸ் போன்றோரும், ஐக்கிய தேசியக்கட்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் மனைவி உட்பட சிலரும், இடதுசாரி முன்னணியில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரும், போட்டியிடுகின்றனர்.

  மகிந்த ராசபக்சவின் ஆதரவு பெற்ற மக்கள் கட்சியினால் நிறுத்தப்பட்டிருக்கும் சுயேச்சைக்குழுவுக்கு செங்கைஆழியான் க.குணராசாவும், சிறுபான்மை தமிழர் மகாசபையின் சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழுவுக்கு எழுத்தாளர் தெணியானும் தலைமை தாங்குகின்றனர்.

  கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராசபக்சவின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 44154 வாக்குகள் யாழ்.மாவட்டத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இம்முறை இந்த வாக்கு எண்ணிக்கை அக்கட்சிக்கு அதிகரிக்குமே ஒழிய அவை வீழ்ச்சியடைவதற்கு வாய்ப்பு இல்லை.

  வேட்பாளர்களின் தனிப்பட்ட வாக்கு சேகரிப்பு மற்றும் நிவாரணங்களை நம்பியிருக்கும் அகதி முகாம் மக்கள் அரசு தரப்பினருக்கு தமது ஆதரவை தெரிவித்து வருகின்றமை காரணமாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கான வாக்கு இப்பொதுத்தேர்தலில் 50ஆயிரமாக உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  மிகுதியாக இருக்கும் ஒரு இலட்சத்து 60ஆயிரம் வாக்குகளைத்தான் ஏனைய 26அணிகளும் பிரிக்கப்போகின்றன.

  சுயேச்சைக்குழுக்கள் ஆசனங்கள் எதையும் எடுக்கப்போவதில்லையாயினும் அவர்களும் கணிசமான வாக்குகளை பிரித்தெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

  தெணியான் தலைமையிலான சிறுபான்மை தமிழர் மகாசபை சார்பில் போட்டியிடும் சுயேச்சைக்குழு சுமார் 10ஆயிரம் வாக்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அதேபோன்று தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக சில சுயேச்சைக்குழுக்களும் கணிசமான வாக்குகளை பிரிக்கலாம்.

  இடதுசாரி முன்னணியின் சார்பில் போட்டியிடும் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோரும் 10ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகிறது.

  திருமதி மகேஸ்வரன் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி கூட சுமார் 15ஆயிரம் வாக்குகளை பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.( 2000, 2001ஆண்டு தேர்தல்களில் மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் வெற்றி பெற்றிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)

  வெற்றிபெற முடியாதவர்கள் என கணிக்கப்படும் அரசியல் கட்சிகள், சுயேச்சைக்குழுக்கள் என இந்த 24 அணிகளும் மொத்தம் 50ஆயிரம் வாக்குகளைப்பெறுவார்கள் என்பது திண்ணம்.

  எனவே மிகுதி 85ஆயிரம் அல்லது 90ஆயிரம் வாக்குகளைத்தான் தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் தங்களுக்குள் பிரிக்கப்போகிறார்கள்.

  இதிலிருந்து தமிழ் கட்சிகள் தங்களுக்குள் பிரிந்து நிற்பதால் யாழ்ப்பாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணிக்கு எவ்வாறு வெற்றிவாய்ப்பை தேடிக்கொடுக்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

  வன்னி மாவட்டம்

  முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி மாவட்டத்தை பார்ப்போம். வடக்கு கிழக்கில் வன்னி மாவட்டம் மட்டுமே தமிழர் தரப்பிற்கு ஓரளவு நம்பிக்கை தரக்கூடியதாக இருந்தாலும் தமிழர்களின் வாக்குகள் பிரிக்கப்படுவதாலும், தமிழ் மக்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதாலும் தமிழர்களுக்கு வர வேண்டிய இரு ஆசனங்கள் முஸ்லீம்கள், சிங்களவர்கள் கைகளுக்கு போகப்போகிறது என்பதே உண்மை.

  வன்னி மாவட்டத்தில் 6 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 16 அரசியல் கட்சிகளும் 12 சுயேச்சைக்குழுக்களுமாக 28அணிகளில் 253 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

  இம்மாவட்ட வாக்காளர்களின் இனவிகிதாசார அடிப்படையில் 5 தமிழர்களும் ஒரு முஸ்லீமும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் சிங்கள கட்சிகளுக்கு வாக்களிப்பதால் அதிலிருந்து தெரிவு செய்யப்படப்போகின்றவர்கள் முஸ்லீம்களும் சிங்களவர்களுமாகத்தான் இருப்பார்கள்.

  வன்னி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 2இலட்சத்து 66ஆயிரத்து 976ஆக இருந்த போதிலும் இவர்களில் கணிசமானவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தின் போது இறந்துவிட்டார்கள். மிகுதிப்பேர் வன்னி மாவட்டத்தை விட்டு இடம்பெயர்ந்து விட்டார்கள். இந்நிலையில் கணிசமான தமிழ் வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை.

  இது தவிர வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 11ஆயிரம் சிங்கள வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் சுமார் 7ஆயிரம் முஸ்லீம் வாக்காளர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் வன்னி மாவட்டத்தில் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்திருக்கிறதே ஒழிய அதிகரிக்கவில்லை.

  இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் மணலாறு பிரதேசத்திலும் சிங்கள வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (சிலோன் பாம் உட்பட பல பகுதிகளில் சிங்களவர்களின் குடியேற்றம் அதிகரித்து வருவது பற்றி பின்னர் தனியாக பார்ப்போம்)

  வன்னி மாவட்டத்தில் 28அணிகள் போட்டியிட்டாலும் தமிழரசுக்கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி இணைந்த ஐக்கிய தேசியக் கட்சி, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில்தான் கடுமையான போட்டி இருக்கும் என கருதப்படுகிறது. இம்முறை கணிசமான தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதற்கே அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

  ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இம்முறை கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்ற தமிழர்களும், அப்துல் ரிசாத் பதியுதீன், மக்ருப் போன்ற முஸ்லீம் வேட்பாளர்களும், பிரேமரத்ன சுமதிபால, சமிந்த உபுல் பாலசூரிய ஆகிய சிங்களவர்களும் போட்டியிடுகின்றனர்.

  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் கனகரத்தினம், கிசோர் சிவநாதன் போன்றவர்கள் கணிசமான வாக்குகளைப்பெற்று அக்கட்சிக்கு கொடுத்தாலும் அவர்கள் அக்கட்சியிலிருந்து தெரிவு செய்யப்படப்போவதில்லை.

  ஏனெனில் முஸ்லீம்கள் அனைவரும் ஒருமித்து தமது விருப்பு வாக்குகளை ரிச்சாட் பதியுதீன், மக்ருப் போன்றவர்களுக்கே அளிப்பார்கள். முஸ்லீம் வேட்பாளர்களே 30ஆயிரத்திற்கு மேற்பட்ட விரும்பு வாக்குகளை பெறும் சந்தர்ப்பமே காணப்படுகிறது.

  இவ்வளவு விருப்பு வாக்கை கனகரத்தினமோ கிசோரோ, பெற முடியாது. எனவே தமிழ் வேட்பாளர்கள் வாக்குகளை எடுத்து முஸ்லீம், சிங்கள வேட்பாளர்களைத்தான் வெல்ல வைக்க முடியும். அந்தக் காரியத்தை இந்த இருவரும் கச்சிதமாகச் செய்துமுடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

  இம்முறை தமிழரசுக்கட்சி 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரு ஆசனங்களையும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஒரு ஆசனத்தையும் பெறலாம் என நம்ப்படுகிறது. சில வேளைகளில் சித்தார்த்தன் தலைமையிலான புளொட்டும் ஒரு ஆசனத்தை பெறலாம்.

  திருகோணமலை மாவட்டம்

  திருகோணமலை, மூதூர், சேருவல தொகுதிகளை உள்ளடக்கிய திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 17அரசியல் கட்சிகளும், 14 சுயேச்சைக்குழுக்களுமாக 31அணிகளில் 217 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2,41,133 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

  வடக்கு கிழக்கில் திருகோணமலை அம்பாறை மாவட்டங்களே பெரும் சர்ச்சையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  கடந்த பொதுத்தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட்டதன் காரணமாகவே இரு பிரதிநிதிகளை பெற முடிந்தது. இம்மாவட்டத்தில் இரு தமிழ் பிரதிநிதிகளும் முஸ்லீம்கள் சிங்களவர்கள் தரப்பிலிருந்து தலா ஒவ்வொருவரும் தெரிவு செய்யப்பட வேண்டும். ஆனால் தமிழ் வாக்குகள் பிரிக்கப்பட்டால் ஒரு தமிழர் கூட தெரிவு செய்யப்பட முடியாத நிலை கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கிறது.

  திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ் பத்மநாபா அணி, உட்பட சில தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி, சிவாஜிலிங்கம் அணி போட்டியிடும் இடதுசாரி முன்னணி உட்பட சிங்கள கட்சிகளும் தமிழ் வாக்குகளைப் பிரிப்பதால் இம்முறை திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாமல் போய் இலங்கையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும் வெற்றிபெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

  2004ம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக் கட்சி 68995 வாக்குகளினைப் பெற்றது. சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 65187 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 31053 வாக்குகளினையும் ஐக்கிய தேசியக் கட்சி 15693 வாக்குகளினையும் பெற்றது.

  கடந்த முறை தமிழரசுக்கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் 3808 வாக்கு வித்தியாசமே காணப்பட்டது. இந்த முறை சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கு சாதகமான விடயங்கள் சிலவும் காணப்படுகின்றன.

  தற்போது சிறிலங்கா முஸ்லீம்காங்கிரஷ் கட்சியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிடுகின்றன. திருகோணமலையில் முஸ்லீம்களின் வாக்குகள் பிரிந்து போகாது இருப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சி தன்னுடைய வேட்பாளர் பட்டியலில் சிங்களவர்களையும் தமிழர்களையும் இணைத்திருக்கிறது.

  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பட்டியலில் கடந்த

 8. பிற்குறிப்பு:
  “நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களின் நிலையும், வாக்காளர்களின் நிலையும்” என்ற தலைப்பில் தரவுகளோடு கட்டுரை ஒன்று வரைந்துகொண்டிருந்த நிலையில், தோழர் இரா. துரைரத்தினம் அவர்களின் கட்டுரை விரிவாக தமிழர் பிரதேசங்களின் நிலையை காட்டுவதால், இக்கட்டுரையை தோழர் இரா. துரைரத்தினம் அவர்களின் அனுமதியோடு இங்கு பதிவு செய்துள்ளேன்..

  நன்றி!
  – அலெக்ஸ் இரவி.

 9. தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக இந்தியாவை போன்ற மாநிலங்களின் அதிகாரங்களை உள்ளடக்கிய தீர்வே சரியானதுகாக அமையும் என தமிழர் விடுதலை கூட்டணி தலைவரும் யாழ் மாவட்டத்தின் அக்கட்சியின் தலைமை வேட்பாளருமான வீ.ஆனந்தசங்கரி ரிபிசியில நடைபெற்ற அரசியில் கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.

  இது தொடர்பாக தான் இலங்கையில் உள்ள அணைத்த மததலைவர்களுடனும் அமைச்சர்கள் பல பாரளுமன்ற உறுப்பினர்கள் பல சமூக அமைப்புகள் முக்கிய இராஜதந்திரிகள் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கருஜெயசூரியா ஆகியோருடனும் இது தொடர்பாக உரையாடிய போது சாதகமான பதிலை கிடைத்தாகவும் தெரிவித்தார் சமஸ்டி என்ற சொற்பதம் இலங்கையில் உள்ள சிங்கள மக்களை பொறுத்தமட்டில் ஓரு வேண்டாத சொற்பதமாக உள்ளது அதைபற்றி பேசி நேரத்தை விரயம் செய்யாமால் மூவின சமூக ஏற்ற கொண்டு சமமாக வாழ்க் கூடியவகையில் இந்தியாவில் உள்ள மாநில முறையே சிறந்தது எனவும் தெரிவித்தார் தற்போது நடைபெறுகின்ற தேர்தல் சர்வதிகாரத்தை நோக்கி செல்வதாக தெரிவித்தார் அதனுடைய தாக்கமே இந்தளவு வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் ஒன்றுமே இல்லாமால் இருந்த பலர் தேர்தல் அறிவிக்கபட்டபின் செல்வந்தாரக ஆகியுள்ளமையும் தமிழ் மக்கள் ஒரு பெறும் சதிவலைக்குள் சிக்கியுள்ளதை காண கூடியதாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

  புலிகளுக்கு எதிராக தான் செயற்படவில்லை எனவும் புலிகளை சரியான வழியில் கொண்டு செல்லுவதற்காக தான் பல ஆலோசனைகளை வழங்கியதாகவும் ஆனால் அவை அணைத்தையும் புலிகளால் நிராகரிக்கபட்டதாகவும் கூறிய தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் அன்று புலிகளால் தனது ஆலோசனைகளை ஏற்று கொண்டிருந்தால் இன்று புலிகள் அழிக்கபட்டிருக்கமாட்டார்கள் அத்தோடு புலிதலைவர் காப்பாற்பட்டிருப்பார் பெரும் தொகையான எமது மக்கள் பாதுகாக்கபட்டிருப்பார்கள எனவும் தெரிவித்தார்.

  அதேநரத்தில் யுத்ததின் போது எமது மக்கள் கொள்ளபட்டமைக்கும் புலிகளின் தலைவர் உட்பட புலிகள் அழிக்கபட்டமைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினர்களே பொறுப்பு எனவும் தெரிவித்தார் ஏன்னில் புலிகள் செய்த அத்தனை நடவடிக்கைகளை சரியென ஏற்று கொண்டதோடு அவர்களின் தவறுகளை சுட்டிகாட்டமால் தமிழ்தேசிய கூட்டமைப்பின் செயற்பட்டதன் காரணமே புலிகளின் அழிவிற்க்கு காரணம் எனவும் தெரிவித்தார்.

  தான் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் போது வன்னி மக்கள் கையேந்தி கந்தல் உடைகளுடன் நடமாடுவதை காணக்கூடியதாக உள்ளதாகவும் அதனை தான் பார்த்து வேதனையடைவதாகவும் குறிப்பிட்டார் அந்த மக்கள் கடந்த காலங்களில் வாழ்ந்த வாழ்க்கை தான் நேரடியாக பார்த்ததோடு அந்த மக்களோடு வாழ்ந்தவன் என்ற ரீதயில் அந்த மக்கள் கையேந்தி வாழ்வதையிட்ட கவலை அடைவதாகவும் குறிப்பிட்டார்.

  அண்மையில் ஜனாதிபதி சிங்கப்பூர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்து கருத்து குறித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்த அவர் எமது மக்கள் உணவுக்காக அல்லது கட்டிடங்களுக்காக போரடவில்லை என தெரிவித்த அவர் அரசியல் உரிமைகளுக்காகவே போரடியதாகவும் தெரிவித்தார்
  சிலர் வெளிநாடுகளில் இருந்து இங்கு விஜயம் செய்து ஒரு சில முகாம்களை பார்த்துவிட்டு அரசை பாரட்டி ஊடங்களுக்கு கருத்துகளை வெளியிட்டு இங்கு உள்ள மக்களை வேதனை அடையவைத்தாகவும் குறிப்பிட்டார்.

  800 அகதி வாழும் மக்களுக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளதை எடுத்த விளக்கிய தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் வீ ஆனந்தசங்கரி இது போன்று பல குறைபாடுகள் அகதி முகாம்களில் உள்ளதை புலம் பெயர்ந்த பிரதநிதிகள் என்று கூறி கொண்டு இங்கு விஜயம் செய்பவர்கள் கண்டும் கானமால் அரசுக்கு புகழாரம் சூட்டுவதிலே நேரத்தை செலவிட்டார்கள் எனவும் எனவே இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நடவடிக்கையை தவிர்த்து கொண்டு மக்களை பாதுகாக்குமாறு வேண்டுகோள் ஒன்றினையும் விடுத்தார்.

  தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது வன்னி இளைஞர் ஒருவர் கூறிய கருத்தினையும் மிகவும் கவலையுடன் பகிர்ந்து கொண்டார் யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்த போது எங்கள் நிலங்களை வீடுகளையும் கொடுத்தோம் எங்கள் தோட்டங்களிலும் வயல்களிலும் விளைந்த பயிர்களை கொடுத்தோம் அத்தோடு தேவையான அத்தனை உதவிகளையும் செய்தோம் ஆனால் நாங்கள வன்னியில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு அகதிகளாக எங்கள் அவயங்களை இழந்து வந்தபோது இருபதனாயிரம் வாடகையும் இரண்டு லட்சம் ரூபாய் முற்பணமாக கேட்பதாகவும் அந்த இளைஞன் குறிப்பிட்டபோது தான் வெட்கம் அடைந்தாக குறிப்பிட்டார்

  நன்றி! அதிரடி இணையம்.

Comments are closed.