ஈழப் போரை வெற்றி கொண்டதனைப் போன்றே தேசத்தை மீட்பேன் : சரத்

Sarath & mahinthaநான்காவது ஈழப் போரை வெற்றி கொண்டதனைப் போன்றே தேசத்தை மீட்டெடுக்கும் யுத்தத்திலும் வெற்றியீட்ட முடியும் என ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கை மக்களுக்கு விரைவில் நல்லதொரு எதிர்காலம் உருவாக்கிக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது நிலவி வரும் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசியலில் பால் நிலை சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபடாமல் இருப்பதற்காக பல்வேறு சலுகைகளை அரசாங்கம் வழங்குவதற்கு முனைப்பு காட்டியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், மக்கள் சேவைக்கு முன்னுரிமை அளித்து தாம் சுய லாபங்களை புறந்தள்ளியதாக தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புச் செயலாளர் பதவியை பகிர்ந்து கொள்ளுமாறும், வேறும் பல செலயாளர் பதவிகளை வழங்குவதாகவும் அரசாங்கம் ஆசை காட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.