ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியும் : நேபாள மாவோயிஸ்டுகள்

தாம் எண்பது வீதமான எல்லைப் பரப்புகளைக் கைப்பற்ற பத்து வருடங்கள் மட்டுமே சென்றது என்றும், மக்கள் போராடத்தினாலேயே இது சாத்தியமானது என்றும் நேபாள மாவோயிஸ்டுகள் தெரிவித்தனர். கட்மண்டூர் பரிஸ் டன்டாவில் இனியொரு மற்றும் புதிய திசைகள் சார்பில் நிகழ்ந்த உரையாடலில் மாவோயிஸ்ட் மத்திய குழு உறுப்பினர்களான ராம் கார்க்கி, பசுந்தா ஆகியோர் கலந்துகொண்டனர். பஞ்சாயத் அமைப்புமுறை நிலவிய காலத்தில், இந்திய ஆதரவு ரோயல் நேபாளி இராணுவம் கொடுரமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டிருந்தது. இதற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது போல ஈழப் போராட்டமும் மக்கள் போராட்டமாக ஒடுக்கப்பட்ட மக்கள் தலைமையில் நடத்தப்பட்டிருந்தால் வெற்றி பெற்றிருக்கும் என இவர்கள் தெரிவித்தனர். கட்சியில் பேச்சாளரும் மத்திய குழு உறுப்பினருமான தினநாத் சர்மா, வெளிவிகாரப் பொறுப்பாளர் மொகாரா, பசுந்தா, ராம் கார்க்கி, சமிர் ஆகியோருடன் ஈழம் குறித்து நடத்திய பேச்சுக்கள் இனியொருவில் வெளிவரும்.

10 thoughts on “ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்க முடியும் : நேபாள மாவோயிஸ்டுகள்”

 1. அவர்கள் (மாவோயிஸ்டுக்கள் ) மாக்சிய கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.ஆனால் தனி ஈழம் என்பது முன்வைக்கப்பட போதும் சரி ,பின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் சரி
  சரியான திசை வழியே செல்லாமல் குறுக்கு வழியில் ,இந்தியாவை வைத்து சாதித்து விடலாம் என்று தான் கருதப்பட்டது.
  தமிழீழம் என்பதை முன் மொழிந்த “அடங்கா தமிழன் ” என்று புகழ் பெற்ற சுந்தரலிங்கம் என்பவர் “தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் ” நடாத்திய ஆலய நுழைவு போராடத்திற்கு முற்று முழுதாக எதிரியாகி களத்தில் நின்றவர்.

  தமிழ் தேசிய வாதம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களை அடக்கி மேலும் ஒடுக்க நினைத்தவ்ர்களாலேயே தலைமை தாங்க பட்டது.தமிழ் உயர் ,நடுத்தர வர்க்க தலைமை இடதுசாரிகளை என்றுமே நம்பியது கிடையாது.அவர்கள் நம்பியது எல்லாம் பேரு முதலாளிய கட்சியான யூ.என்.பீ யையே.
  பல் இன மக்கள் வாழும் இலங்கையில் , ஏனைய மக்களை மதித்ததும் கிடையாது.அணி திரட்டியதும் கிடையாது.
  பின் வந்த புலிகளும் தங்கள் எஜமான்களை பின் பற்றியதாலேயே “பிரபாகரன் ஆயுதம் தரிக்காத அமிர்தலிங்கம் ,அமிர்தலிங்கம் ஆயுதம் தரித்த பிரபாகரன் ” என்ற கருத்து சொல்லப்பட காரணமானது.

  1. //அவர்கள் (மாவோயிஸ்டுக்கள் ) மாக்சிய கண்ணோட்டத்தில் சொல்கிறார்கள்.ஆனால் தனி ஈழம் என்பது முன்வைக்கப்பட போதும் சரி ,பின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போதும் சரிசரியான திசை வழியே செல்லாமல் குறுக்கு வழியில் ,இந்தியாவை வைத்து சாதித்து விடலாம் என்று தான் கருதப்பட்டது.//

   சரியாக சொன்னீர்கள் நேபாள மாவோயிஸ்டுகள் முதலில் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார்கள். மன்னரை ஒழிக்க அந்த கூட்டு. பிறகு இந்த கம்யூனிஸ்டுகளை ஒழிக்க மன்னர் ஆதரவு கட்சியுடன் இப்போது கூட்டு சேர்ந்துள்ளார்கள். இந்த நேர்வழி அவர்களுக்கு தெரியாமல் மாண்டுபோனார்கள். மடையர்கள். இப்போது நேபாளத்தில் மன்னரை ஒழித்தார்கள். மன்னர் கட்சி இருக்கிறது. போலி கம்யூனிஸ்ட்டை ஒழித்தார்கள் ஆனால் அவர்கள் இப்போது ஆட்சியில். இவர்கள் ஒழித்தது ஒழித்தது என்று சொன்னார்களே அது கட்சியையா இல்லை கம்யூனிசத்தையேவா? இவர்கள் யாரையும் வைத்து சாதிக்காமல் (மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ இவர்களை சாராமல்) இவர்களாகவே முன் முயற்சி எடுத்து புதிய கம்யூனிச பார்வையை சர்வதேசத்துக்கே வழங்கி, பிரசந்தா வழியாக மாற்றியதன் மூலம் மிகச் சிறந்த நேர் பாதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஒழிக்கவேண்டும் ஆனால் ஒழியக்கூடாது என்ற தத்துவத்தின் பிதாமகன்கள். மார்க்சியம் சொல்லவேண்டும் ஆனால் இருக்கக்கூடாது என்பதில் வல்லவர்கள். இதையெல்லாம் புரிந்துகொண்டு நீங்கள் உங்கள் ஆதரவை வழங்கி உங்கள் மார்க்சிய அறிவை எண்ணி வியக்கிறேன். உங்களுக்கு துணையாக தமிழ்நாட்டில் நிறைய மார்க்சிய இயக்கங்கள் உண்டு. தயவு செய்து அவர்களுடன் நீங்களும் ஐக்கியமுன்னணி வைத்து ஒரு சிறந்த எடுத்துக்காட்டை உருவாக்கவேண்டும். அப்போதுதான் இங்குள்ள ’சிங்’கை வெளியேற்ற முடியும். காங்கிரசை தக்கவைக்கமுடியும். சில கம்பெனிகளை வெளியேற்றமுடியும் ஆனால் அந்நிய மூலதனத்தை தக்கவைக்க முடியும். பார்ப்பனர்களை வெளியேற்ற முடியும் பன்னையடிமைத் தனத்தை தக்கவைக்கமுடியும். உங்கள் தீர்கத்தரிசன பார்வைக்கு எனது வாழ்த்துக்கள்.

   உங்கள் வர்க்கத்தை நான் நடுத்தர வர்க்கமாக பார்க்கவில்லை. அதற்கும் மேலானவையாக பார்க்கிறேன். “பிரபாகரன் ஆயுதம் தரிக்காத அமிர்தலிங்கம் ,அமிர்தலிங்கம் ஆயுதம் தரித்த பிரபாகரன் ”. நீங்கள் கடைசியாக கூறியது அதிலும் மிகச் சிறப்பு. ஏனென்றால் அமிர்தலிங்கம் கூட அந்த ஆளும் வர்க்கத்தின் கைப்பாவையாகத்தான் மாறிப்போக முடிந்தது. ஆனால் நேபாள மாவோயிஸ்டுகளால் மட்டுமே ஆளும் வர்க்கமாகவே (தரகுமுதலாளிகள், பன்னையடிமைதனத்தை வைத்துக்கொண்டு) வரமுடிந்தது. இவர்களால்தான் நேரடியாக யாரையும் சார்ந்திராமல் சுயமாக மாறமுடிந்தது. ஆனால் ஒரு வருத்தம் மட்டும் உண்டு. இவர்கள் ஏழு கட்சி கூட்டணியை 2004ல் ஏற்படுத்துவதற்கு முன் பல முறை சீதாராம் யெச்சூர், ஹர்கிஷன் சிங்க் சுர்ஜித், பிரகாஷ் காரத் ஆகியோருடன் வந்து நிறைய முறை ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்திச் சென்றதுதான் எனக்கு வருத்தமானது. ஏனென்றால் இவர்களைவிடவா இந்த அறிவாளிகளுக்கு அதிகம் மார்க்சியம் தெரிந்திருந்தது என்பதுதான் எனது வருத்தம். இவர்கள் ஆலோசனை ஏன் என்பது எனக்கு விளங்கவில்லை? இதை ஏன் இந்திய அரசாங்கம் தெரிந்தே அனுமதித்தது என்பதும் எனக்கு விளங்கவில்லை? இது ஒன்றைத் தவிர மற்றவை எல்லாம் சுயமான முடிவே என்பதை நான் அறிவேன். ஆனால் அமிர்த்தலிங்கமாக முயற்சிப்பதில் பயனில்லை. ராஜபக்‌ஷேவாக மாறாமல் இதுவரையில் இப்பது மகிழ்ச்சி. ஆனால் சிங்காக மாறவும் பலமில்லை. ஆனால் நிச்சயமாக இன்னொரு கருணாநிதியாக மாற நிறையவே வாய்ப்பிருக்கிறது. எனது வாழ்த்துக்கள். வெற்றி பெறுக. நம் யோகனின் ஆதரவைப் பெருக.

 2. இலங்கை நிலைமைகளைப் பாற்றிய நேபாள மாஓவாதிகளின் புரிதல் அவர்களுடன் 1990களிலிருந்து தொடர்புகொண்டிருந்த சில சந்தேகத்துக்குரிய அமைப்புக்கள் மூலமாகவே ஏற்பட்டது என நினைக்கிறேன்.
  இலங்கையின் தேசிய இன்ப் பிரச்சனையின் பல சிக்கலான அம்சங்கள் நேபாள மாஒவாதிகதோ இந்திய மாஓவாதிகட்கோ இன்னமும் விளங்குகிறது என நான் நம்பவில்லை.
  தமிழர் சிங்களவர் பிரச்சனையாக மட்டுமே தேசிய இன்ப் பிரச்சனையைக் காணும் போக்கு இன்னமும் இரு நாடுகளிலும் பரவலாக உள்ளது.
  அண்மை தொட்டே சில உண்மைகளை நேபாள மாஓவாதிகள் அறியத் தொடங்கி உள்ளனர்.
  ஒரு முழுமையான மதிப்பீடு எதிர்காலத்தில் நல்ல விளைவுகளைத் தரும்.

 3. உணமை இடைநடுவில் நிற்கிறதா?
  நேபாளப் போராட்டத்திற்கு ஓரளவு ஒத்ததாக இலங்கையில் கொள்ளத்தக்கதாக தமிழீழப் போராட்டம் விளங்கவில்லை. (ஜேவிபியின் போராட்டத்தில் அதிக ஒத்த அம்சங்கள் உண்டு)
  ஒருநாட்டினுள் வாழும் ஒரு சிறு பிரிவு மக்கள் மட்டும் நடாத்தும் போராட்டங்கள் வெற்றி பெறுவதற்குப் புறக்காரணிகளின் பங்களிப்ப அதிகம் தேவை என நான் நம்புகிறேன்.
  இநதியா உள்நாட்டுப்பிரச்சினைகளில் மூழ்கியிருந்த 90களின் ஆரம்பத்தில் இலங்கையும் சற்றுத் தனிமைப்பட்டேயிருந்தது. எனினும் அவ்வேளை சில இராணுவ வெற்றிகளிற்குப் போராட்டம் மட்டுப்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் சிங்களமக்களின் ஆதரவின்மையே. ஆக மக்கள் போராட்டமாக நடத்தப் பட்டிருந்தாலும் சிங்கள மக்களின் ஆதரவின்றி இது வெற்றி பெற முடியாது. (கொசுறுக் கேள்வி: சிங்கள மக்களிடையே புரிந்துணர்வு ஏற்பட்டு அவர்கள் தமிழ்மக்களின் போராட்டத்தை எதிர்க்காத நிலை தோன்றுமாயின் அந்த நிலையில தனிநாட்டை விட இணைந்திருப்பது மேலல்லவா?)

 4. பாரதி + பகத் = வெற்றி !
  உங்கள் மாக்சிய அறிவை எண்ணி நாம் வியக்கிறோம் .நீங்கள் உங்கள் போராட்டத்தை ஆரம்பியுங்கள் ,அல்லது உங்கள் கொள்கை பிரகடனத்தை வெளியிடுங்கள்.உங்கள் பின்னால் நாம் வர தயாராக உள்ளோம்

  இலங்கையில் சண் தலைமையில் கட்சி தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தினர் ஒரு போராட்டத்தை நடத்திய படிப்பினைகளும் ,பின்னர் புலிகள் நடத்திய போராட்டம் ஒரு படிப்பினைகளையும் நமக்கு விட்டு சென்றுள்ளனர்.

  நீங்கள் / அல்லது நீங்கள் ஆதரிக்கும் மாக்சிய இயக்கம் தமிழ் நாட்டில் நடாத்திய ஒரு போராட்டத்தை குறிப்பிடுங்கள்.அதனை பின் பற்றி நாமும் தங்களை போல ஒரு “மேதையாக” வளர வாய்ப்பிருக்கும் அல்லவா ?

  “…..தாராம் யெச்சூர், ஹர்கிஷன் சிங்க் சுர்ஜித், பிரகாஷ் காரத் ஆகியோருடன் வந்து நிறைய முறை ரகசிய ஆலோசனை ..” என்று எழுதுகிறீர்கள்.

  மாவோ தான் நிக்சனை அழைத்து சீனாவை சீரழித்தார் என்றும்,அவர் நல்ல உடல் நலத்தோடு இருக்கையிலேயே இது நடந்தது என்றும் முன்னை நாள் மாக்சிய ,மாவோ கட்சி தோழர் என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் பொது வீரமாக விமர்சித்தார். அது போல் ஸ்டாலி தான் தெலிங்கான போராட்டத்தை தோல்வி அடைய செய்தார். நேரு அரசை ஆதரித்தார் என்று புது விளக்கங்கள் எனக்கு சொன்னார்.கிட்லேருடன் ஸ்டாலின் உடன் பாடு செய்தார்.ஆகவே ஹிட்லர் = ஸ்டாலின் .

  மாவோ ,ஸ்டாலின் மட்டுமல்ல லெனின் தான் மிகப்பெரிய தவறு செய்தவர் என்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
  வெற்றி !
  உங்கள் சரியான கொள்கைகளை கொண்டுள்ள கட்சியின் பெயரை சொல்லுங்கள்.அவர்களின் கொள்கை விளக்கங்களை அறியும் வாய்ப்பு இருக்கும் அல்லவா !
  எதோ நமக்கு தெரிந்தது ம.க இ.க. தான்.

  “இலங்கையின் தேசிய இன்ப் பிரச்சனையின் பல சிக்கலான அம்சங்கள் நேபாள மாஒவாதிகதோ இந்திய மாஓவாதிகட்கோ இன்னமும் விளங்குகிறது என நான் நம்பவில்லை -..” Shiva
  வெற்றி !இது உங்களுக்கு மிகவும் பொருந்தும்.

  1. //இப்போது நேபாளத்தில் மன்னரை ஒழித்தார்கள். மன்னர் கட்சி இருக்கிறது. போலி கம்யூனிஸ்ட்டை ஒழித்தார்கள் ஆனால் அவர்கள் இப்போது ஆட்சியில்.//  மீண்டும் நினைவுப்படுத்த வேண்டிய விஷயம். இதற்கு எந்த பதிலும் இல்லை. குதற்கமான பதில்தான் இருக்கிறது. 
   அவர்களிடம் சந்தர்ப்பவாதம் மேலோங்கிக்கொண்டிருக்கிறது. அதைவிட உங்கள் விசயம்தான் எனக்கு வியப்பாக இருக்கிறது. உங்களுக்கு மேதையாக மாற ஆசை. எனக்கு அந்த ஆசான்களின் சிறந்த மாணவனாக ஆகவேண்டிய முயற்சி. யாரையாவது எடுத்துக்காட்டி முன்சென்றால் அவர்களை தொழுது பின் செல்பவர் நீங்கள் என்பது தெரிகிறது. ஆனால அந்த அமைப்பை தொழுவதற்கு முன் மார்க்சிய அடிப்படையை விவாதிப்பதில் உங்களுக்கு என்ன தடை? எந்த விசயத்திற்கு பதிலளிக்க வேண்டுமோ, எந்த அரசியலுக்கு பதிலளிக்கவேண்டுமோ அதை தவிர்த்து நடைமுறை விசயங்களை வைத்து வாய்மாலங்கள் செய்கிறீர்கள். அரசியலுக்கான நடைமுறைவிசயங்களைபற்றி குறிப்பிடுகிறேன். ஆனால் நீங்கள் நடைமுறை பற்றி மட்டுமே அதுவும் எதற்கு ஏன் என்பதில்லாமல் மொட்டையாக ஏதோதோ சொல்கிறீர்கள்.

   இரண்டாவது அமைப்பை பற்றியது. நீங்கள் நேபாள மோவோயிச இயக்கத்தை விரும்பலாம். அல்லது பிரசந்தா வழியை ஏற்றுக்கொண்டதாக நீங்கள் நினைக்கிற ம.க.இ.க வை ஏற்கலாம். பிரச்சனையின் மையபொருள் நேபாள மாவோயிச வழி சரியான வழியா இல்லையா என்பதே. இதை யார் ஏற்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்பது அதன் அரசியல் தத்துவ வழி மீதான விமர்சனத்தை பொருத்தே. 

   மீண்டும் மீண்டும் உங்களின் தொடர்ச்சியான பல பின்னூட்டங்களில் ஒரு விசயம் இன்னும் தைரியமாக, எந்த வித தயக்கமுமில்லாமல் சொல்வதில்லை. அதாவது
   1. தனி ஈழத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா?
   2. தேசிய இனப்பிரச்சனை என்பது முதலாளித்துவ கோரிக்கையே, பாட்டாளிவர்க்கக் கோரிக்கை இல்லை என்ற தவறான கொள்கையை நீஙக்ள் மறுக்கிறீர்களா இல்லை ஏற்கிறீர்களா? இல்லை நீங்கள் நேசிக்கும் எந்த அமைப்பும் இது குறித்து என்ன கூறியிருக்கிறது என்பது தெளிவாக ஆதாரங்களோடு விளக்க முடியுமா?

   இது இல்லாமல் இன்னும் சில கேள்விகள்? அது ஏற்கெனவே பல பின்னூட்டத்தில் தொக்கி இருந்தாலும் இதிலும் தொடரவேண்டியது பதில் வரும் வரை?

   3. உலக அரசு தோன்றிவிட்டது என்று நேபாள் மாவோயிச அமைப்பு கூறுகிறதே அதை நீங்களோ அல்லது நீங்கள் ஆதரிக்கும் எந்த அமைப்போ ஏற்கிறதா?

   4. உலக நிதி மூலதனம், ஒன்றுபட்ட நிதி மூலதனம் உருவாகிவிட்டதாக நேபாள மாவோயிச அமைப்பு கூறுகிறதே? அதன் மீதான் அதே போன்ற கருத்து உங்களுடையதா?

   5. நேபாளில் நடந்தால் அது வித்தியாசமான சூழ்நிலை, அதுவே ஈழத்தில் நடந்தால் வழக்கமான சூழ்நிலை, மாறாத சூழ்நிலை என்கிறீரா?

   6. ஏகாதிபத்தியம் குறித்த லெனினிய வரையரை இந்த 21ஆம் நூற்றாண்டிற்கு இன்றைக்கு பொருந்தாது என்கிறார்கள் நேபாள மாவொயிசவாதிகள்? அதை ஏற்கிறீரா?

   7. நேபாளின் சிறிய நாட்டில் இனி தனியொரு நாட்டில் புரட்சி சாதியமில்லை? என்று வரையரை செய்ததை ஏற்கிறீரா?

   8. ஈழத்தில், இலங்கையில் இந்தியா மேலாதிக்கம் செய்கிறது. சீனா செல்வாக்கு மட்டுமே வகிக்கிறது என்ற கருத்தை ஏற்கிறீரா?

   9. பல கட்சி ஆட்சி ஜனநாயக முறைதான் வளர்ச்சிக்கான இந்த நூற்றாண்டின் கண்டுபிடிப்பு. ஒரு கட்சி ஆட்சி முறை, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் முதலாளித்துவ வளர்ச்சிக்கு விலங்காகும், என்ற நேபாள மாவோயிஸ்ட் பாதையை ஏற்கிறீரா?

   இவையெல்லாம் மார்க்சியத்திலிருந்து விலகியதா. இல்லை வளர்ப்பதா. வியட்நாம் புரட்சி தோல்வி கண்டது, கியூப புரட்சி பாதியில் விடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று நேபாள புரட்சி பாதியில் நிறுத்தப்பட்டிருக்கிறது. கைவிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் விட இன்னும் அமைப்பியல், போர்த்தந்திரம், செயல்தந்திரம் ஆகியவை குறித்து இன்னும் நிறைய விசயங்கள் பதில் சொல்லப்படாமல் இருக்கிறது. புரட்சிகர இயக்கங்கள் என்று சொல்லுபவை கூட இன்னும் பதில் சொல்லாமல் இருக்கின்றார்கள். அல்லது மவுனம் சாதிக்கின்றார்கள். ஏன்?

   மேற்கண்ட அரசியல் விசயத்தில் மவுனம் சாதித்துவிட்டு ஏதாவது அமைப்பு இருந்ததா என்று கேட்கிறீர்கள். ரஷ்ய அனுபவம், சீன அனுபவம் என்று இருக்கிறது. அதனுடைய அடிப்படை தத்துவம் இருக்கிறது. அதை மறுத்து நீங்கள் சொல்லும் கட்சி அல்ல நிறைய இன்னும் நிறைய கட்சிகள் மார்க்சியத்தின் பெயரால் இருக்கத்தான் செய்கிறது. போராட்டம் தோல்வி என்பதல்ல, அதை காட்டிக்கொடுத்தல் தான் மிகவும் மோசமானது. தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு வெளிவரமுடியும். துரோகத்திலிருந்து அது சுத்தமாக காட்டிக்கொடுக்கப்பட்டு முடமாக்கப்படும். இதன் ஒரு தொடர்ச்சியாகத்தான் நான் மீண்டும் கூறுவது
   இப்பொழுது எந்த அடிப்படையில் மன்னர் ஆதரவு கட்சிக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். இது பாமக வை விஞ்சும் செயலில் இருக்கிறது. இவ்வளவு எழுதியும் இதற்கெல்லாம் எதுவும் சொல்லாமல் கடைசி வரிக்கு மட்டும் பதில் சொல்லி தப்பிப்பீர்கள் என்பது எனது ஆருடம். அப்படி இல்லை என்றால் எனக்கு நானே பெயர் சூட்ட சொல்லி வற்புறுத்துவீர்கள் இல்லை என்றால் நீங்களே எனக்கு பெயர் சூட்டுவீர்கள். இதுவல்ல மார்க்சியம், இதுவல்ல விவாதம். அரைத்ததையே அரைக்காமல் மார்க்சியத்தை விவாதியுங்கள். அடிப்படையை விவாதியுங்கள்.

 5. நேபாள மாவோயிஸ்டுகள் போராட்டம் வேறு ஈழ போராட்டம் வேறு. நேபாள நிலை வேறு. அங்கு‍ இரு‍ வேறு‍ இனங்கள் இல்லை. ஒரு‍ புறம் மன்னர் ஆட்சி. மறு‍ புறம் புரட்சியாளர்கள் என்ற மாவோயிஸ்டுகள். வேறு‍ எந்த நாட்டிலவாது‍ தமிழர்கள் இருந்து. இது‍ போல் போராடி இருந்தால். என்றோ தனி நாடு‍ கிடைத்திருக்கும் ஏன் என்றால். அங்கு‍ எல்லாம் சிறு‍ சதவீகித மக்களும் அரசும் மட்டுமே. போராடும் மக்களுக்கு‍ எதிராக செயல்ப்படும். ஆனால். இலங்கையில் மட்டுமே. அனைத்து‍ சி்ங்கள மக்களும். பௌத்த பிட்சுக்களும் கூட தமிழ் இனத்திற்க்கு‍ எதிரான போக்கை கொண்டிருந்தார்கள். இது‍ உலக அதிசியம். மேலும். நேபாள மாவோயிஸ்டுகளுக்கு‍ எதிராக எந்த நாடும் வரிந்து‍ கட்டி‍ நிற்க்கவி்ல்லை. ஆனால் தமி்ழ் மக்களுக்கு‍ எதிராக. எத்தனை எத்தனை நாடுகள். ஆனால் தமி்ழ் மக்களுக்கு‍ ஆதரவாக பெருபாண்மையான தமிழ் சமூகம் .(உலக) கூட நிற்க்கவில்லை. இந்த நிலையில். தமிழ் ஈழ் மக்கள்./ புலிகள் தோற்று‍ விட்டார்கள்.அதனால் அனைவரும் வாய்க்கு‍ வந்த படி பேசுவார்கள். பொறுத்திருப்போம். தனி தமிழ் ஈழம் கிடைக்க்ம்.

  1. இளமாறன்
   நேபாள மாஒவாதிகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சனையை விட ஆழமான் ஒரு சமூகச்சிக்கல் மத்தியில் செயற்பட்டுள்ளனர்.

  2. இளமாரன்
   மாஓவாதிகளுக்கு எதிராக இந்தியாவும் அமெரிக்காவும் அப்பட்டமாகவெ செயற்படுகின்றன. சீன ஆதரவு என்று ஒன்று இருக்கவில்லை. இனியும்> போராடுவ்சதற்கு சீன ஆதரவு இராத
   அவர்களது போரட்டத்தைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்.

  3. //நேபாள மாவோயிஸ்டுகளுக்கு‍ எதிராக எந்த நாடும் வரிந்து‍ கட்டி‍ நிற்க்கவி்ல்லை//
   நீங்கள் கூறுவது தவறு. அனைத்து ஏகாதிபத்தியங்களும் நேபாளப் புரட்சியை ஒழிக்க வரிந்துகட்டிக்கொண்டு நின்றார்கள். அதன் அடிவருடிகளான இந்தியாவும் சீனாவும் கூட வரிந்து கட்டிக்கொண்டு நின்றார்கள். அதில் இன்று ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். அதுதான் புரட்சியை பாதியில் கைவிட்டு ஓடியிருக்கிறார்கள். ஆனால் இதுவே நிடிக்கும் என்று சொல்வதற்கில்லை. மீண்டும் மக்களிலிருந்து சிறந்த தலைவர்கள் உருவார்கள். ஆனால் உலக நாடுகளிலுள்ள உண்மையான கம்யூனிஸ்டுகள் அதற்கு உதவுவும் வேண்டும். அதற்கு மார்க்சியம் அல்லாத கருத்துக்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. 
   ஈழத்தின் வெற்றி ஏகாதிபத்தியத்தின் இருப்புக்கு மறைமுகமான மரண அடி. அதாவது அதன் காலனி ஆதிக்கத்திற்கு ஒரு மரண அடி. ஆனால் நேபாளம் சரியான பாதையில் மார்க்சிய லெனினிய பாதையில் சென்றால் அமெரிக்க அரசுக்கே, முதலாளித்துவப் பாதைக்கே மரண அடி. அது சோசலிசப் பாதைக்கு செல்ல ஒரு மைல்கல்லாக மாறியிருக்கும். அதனால்தான் ஈழத்தை விட நேபாளை ஒழித்துக்கட்டுவதில் மிகவும் மூர்க்கமாக இருந்தார்கள். இதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம். ஆனால் அதை பின்வாங்கும் தந்திரத்தின் அடிப்படையில் மாவோயிஸ்டுகள் ஒரு இடைநிலை விசயமாக செயல்தந்திர பிரச்சனையாக செய்யாமல், ஒரு நிரந்தர பாதையாக மார்க்சியத்தின் ஒழித்துக்கட்டும் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். மார்க்சிய லெனினிய பாதைக்கு எதிரான அல்தூசர், காவுட்ஸ்கி, ட்ராட்ஸ்கி போன்ற மார்க்சிய பகைவர்களின் பாதையை தேர்ந்தெடுத்தார்கள். உண்மையில் சொல்லவேண்டும் என்றால் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு (அரசியல்) அடிபணிந்துப் போனார்கள். நேபாளத்தை ஒடுக்க அதிக அக்கறை கொண்டார்கள். இதே நிலைதான் ஈழத்திற்கும். ஆனால் ஒரு வித்தியாசம் அவர்களும் சரியான முறையில் பின்வாங்கவுமில்லை, அதே நேரத்தில் அடிபணியவும் இல்லை. இதுதான் வித்தியாசம். ஆகையால் நேபாளின் முந்தைய போராட்டத்தை குறைத்து மதிப்பிடவேண்டாம். ஆனால் இதே நிலையை மாவோயிஸ்டுகள் கைக்கொண்டால் நிச்சயம் காயடிக்கப்பட்ட காளைகளாக மாற்றப்படுவார்கள். ஆகையால் 21ஆம் நூற்றாண்டிலும் மார்க்சியம் லெனினியம் பொருந்தும் என்பதை தூக்கிப் பிடிப்பதில்தான் அங்கு மாற்றத்திற்கான வழி. அதற்கு நாம் அந்த மக்களுக்கு கைகொடுப்போம். ஈழத்தில் ஒரு சரியான ஏகாதிபத்தியத்தை எதிர்க்கக் கூடிய ஜனநாயக இயக்கம் மீண்டும் உருவாவதற்கும், பேரினவாத அரசை எதிர்த்து தனி ஈழத்திற்கு போராடக்கூடிய இயக்கத்திற்கு நாம் உதவுவோம். இதுவே உண்மையான கம்யூனிஸ்டின் கடமை.

Comments are closed.