ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்கள் : வரவர ராவ்

வரவார ராவ்(Varavara Rao) ஆந்திரப் பிரதேசத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) (மாவோயிஸ்டுக்கள்) இன் ஆதரவாளரகவும் பல தடவைகள் அவர்களின் வெளிப்படையான குரலாகவும்  செயற்படுபவர். இலக்கிய விமர்சகர், கவிஞர், அரசியல் பேச்சாளர் என்ற பல்வேறு தளங்களில் செயற்படும் வரவர ராவ் தெலுங்கு இலக்கிய விமர்சகர்களுள் முதன்மையானவர். புரட்சிகர இயக்கங்களோடு கடந்த நாற்பது வருடங்களாகச் செயற்பட்டு வருகிறார். பரந்துபட்ட மக்கள் ஆதரவைப் பெற்றவர்.

பேராசிரியராகவும், அதிபராகவும், விரிவுரையாளராகவும் கடமையாற்றிய வரவர ராவ் தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக தனது வாழ் நாளின் பாதிக் காலத்தைச் சிறையில் வாழ்ந்து முடித்தவர்.

மார்க்சிய அறிவியலில் ஆழமான பார்வையைக் கொண்ட வரவர ராவ், இனியொருவிற்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதியை இங்கே தருகிறோம்.

ஈழத்தில் மனிதகுலம் வெட்கித் தலைகுனியும் மிகப்பெரும் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது. வன்னிப் படுகொலைகள் குறுகிய நிலப்பரப்பினுள் ஒரு லட்சம் மனித உயிர்களை நவீன அழிவு ஆயுதங்களைக் கொண்டு கொடிய பேரினவாத அரசு அழித்துப் போட்ட அந்தக் கோர நிகழ்வை மனித குலம் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. அதே வேளை இன்று உலகத்தில் காணப்படும் போராட்ட அமைப்புக்களில் ஒழுங்கமைக்கப்பட்டதும் பலம்பொருந்தியதுமாகக் கருதப்படும் இந்திய மாவோயிஸ்டுக்கள் தமது கொல்லைப்புறத்தில் நடைபெற்ற இந்த அழிவிற்கு காத்திரமான எதிர்ப்பை வெளிக்காட்டவில்லையே ஏன்?

இன அழிப்பிற்கு எதிராக மாவோயிஸ்டுக்கள் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். இந்தியாவின் பல பகுதிகளிலும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றிருக்கின்றன. மாவோயிஸ்டுக்களைப் பொறுத்தவரை இந்திய விஸ்தரிப்பு வாத அரசானது அயல் நாடுகளில் தலையிட்டு அழிவுகளைத் திட்டமிட்டு ஏற்படுத்துகின்றது என்பதை ஆரம்பத்திலிருந்தே கூறிவந்திருக்கிறார்கள். இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கையை ஆக்கிரமித்து ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய அரசு, வன்னியில் நட்த்தப்பட்ட இனப்படுகொலையின் பின்னணியிலும் செயற்பட்டிருக்கிறது.

மாவோயிஸ்டுக்கள் இந்திய அரசிற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.மாவோயிஸ்டுக்கள் இந்தியாவில் தடைசெய்யபட்ட தலைமறைவு இயக்கம். இந்த வகையில் இலங்கை இந்திய அரசுகள் வன்னியில் நடத்திய இன அழிப்புக்கு எதிரான போராட்டத்திலும் மாவோயிஸ்டுக்கள் தமது ஆதரவு அமைப்புக்கள் ஊடாகப் பங்கேற்றிருக்கிறார்கள்.

அந்தப் போராட்டங்கள் அவர்களுக்க்க் கிடைத்த தகவல்கள், தொடர்புகள், பரஸ்பர புரிந்துணர்வு என்பவற்றினுள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பதே உண்மை.

இன்று மக்களின் உடனடி எதிரி உலகமயமான நிலையைக் காண்கிறோம். ஏகாதிபத்தியங்களை அதன் முகவர்களுக்கு ஊடாக அன்றி நேரடியாகவே உணர்ந்து கொள்கிறோம். ஆக, உலகின் புரட்சிகர இயக்கங்கள் மற்றும் போராட்டங்களுடனான ஒத்துழைப்பும் ஒருங்கிணைவும் அவசியமானதாகக் கருதவில்லையா?

நிச்சயமாக. மாவோயிஸ்டுக்கள் இதை நன்கு உணர்ந்துள்ளார்கள். பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் அதிகாரமும் உலகை ஆக்கிரமிக்கும் பொதுவான பிரச்சனைகளை ஒடுக்கப்படும் மக்கள் முகம் கொள்கிறார்கள். இவற்றிற்கு எதிரான உலகம் தழுவிய ஒருங்கிணைவு என்பது அவசியமானது.

புலிகளின் அழிவிற்குப் பின்னான சூழலை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

அங்கு ஒரு தற்காலிக பின்னடைவே ஏற்பட்டிருக்கிறது. இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக ஒடுக்கப்படுகிறார்கள். அதற்கு எதிராக மக்கள் போராடுவார்கள். இந்திய அரசிற்கும் ஏனைய ஏகாதிபத்திய நாடுகளுக்கும் எதிரான தேசிய விடுதலைப் போராட்டமாக அது முன்னெழும். தனி ஈழ அரசு அமைப்பதற்கான போராட்டத்தை அவர்கள் முன்னெடுக்கவேண்டும்.

ஏனைய புரட்சிகர இயக்கங்களின் ஆதரவோடும் புரிந்துணர்வோடும் ஒத்துழைப்போடும் ஈழப் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும். வன்னிப் படுகொலைகள் இந்தியாவினதும் உலக நாடுகளதும் ஒத்துழைப்புடனேயே நடைபெற்றது. தேசிய விடுதலைப் போராட்டம் என்பது அடிப்படையில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிரான போராட்டமே. அந்த வகையில் ஈழப் போராட்டம் முற்போக்கானது. போராட்டம் விட்டுக்கொடுப்பின்றி பேரினவாதத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேசிய இன ஒடுக்குமுறை கூர்மையடைந்துள்ள ஒரு நாட்டில் சுய நிர்ணய உரிமைக்கான போராத்தில் மக்கள் இணைந்து கொள்வார்கள்.

இந்திய மற்றும் சர்வதேச பல்தேசிய நிறுவனங்கள் பேரினவாதத்தின் துணையோடு தமிழ்ப் பேசும் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொள்ளையடிக்கின்றது. ஆக, இதற்கு எதிரான மக்களின் போராட்டம் உறுதியான அரசியல் தலைமையின் வழி நடத்தலில் எழுச்சிபெறும்.

சுய நிர்ணய உரிமை என்பது பிரிந்துபோகும் உரிமை என்பது பிரிவினைக்கான முழக்கம் என்றும் இதனால் பிரிந்து செல்லாத அல்லது பிரிந்துசெல்வதை நிராகரிக்கும் சுய நிர்ணைய உரிமை என்பதே எமது சூழலுக்கு சரியானது என புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி உட்பட இலங்கையின் இடது சாரிக் கட்சிகள் கூறுகின்றன.இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நீண்ட நாளைய நிலைப்பாடு இவ்வாறு தான் இருந்தது இது குறித்து உங்கள் கருத்து என்ன?

அது அவர்களின் கருத்தாக இருக்கலாம்.கம்யூனிஸ்ட்களைப் பொறுத்தவரை சுய நிர்ணய உரிமை என்பதே பிரிந்து செல்லும் உரிமைதான். ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படும் போது அது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை நடத்துவது விடுதலைக்கான முன் நிபந்தனையாகும். கம்யூனிஸ்ட் கட்சிகள் அதனைத் தலைமையேற்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் தனியரசை அமைத்துக்கொள்வதற்கான போராட்டதை முன்னெடுக்கும் போதே அது ஒடுக்கும் தேசிய இனங்களுடானான இணைவைக் கூட ஏற்படுத்தும். வியட்னாம் இதற்கு சிறந்த உதாரணமாகக் கருதப்படலாம்.

ஆக, ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்களா?

ஈழப் போராட்டம் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் உரிமைக்கான போராட்டம் என்ற வகையில் மாவோயிஸ்டுக்கள் தமது ஆதரவை எப்போதும் வழங்கியிருக்கிறார்கள். இன்றும் பேரினவாத ராஜப்கச அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய போராட்டம் என்ற வகையில் ஈழப் போராட்டத்தை அவர்கள் ஆதரிக்கிறார்கள். அது ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கொண்டிருந்ததால் தான் உலக நாடுகள் முழுவதும் இணைந்து அந்தப் போராட்டதை அழித்தன.

கடந்த காலத்தில் அதன் இயல்பு எவ்வாறு அமைந்திருந்தது என்ற விமர்சனங்களுக்கு அப்பால் எதிர்காலத்தில் அது எழுச்சி பெறுமானால் மாவோயிஸ்டுக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அதற்குக் கிடைக்குமா?

நீங்கள் முன்னமே குறிப்பிட்டதுபோன்றே இன்று பொது எதிரிக்கு எதிரான உலகம் தழுவிய பொதுத்தளத்தில் புரட்சிகர இயக்கங்கள் பொதுவான வேலைத்திட்ட அடிப்படையில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பது இன்றைய தேவையாகும். அந்தவகையில் அனைவரும் செயற்பாட்டுத் தளம் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

விடுதலைப் புலிகள் குறித்து?

தமிழீழ விடுதலைப் புலிகளை எமது விமர்சனங்களுக்கு அப்பால் ஏகாதிபத்திய எதிர்பு இயக்கங்கமாகவே பார்க்கின்றோம். அதன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் காரணமாகவே உலக நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழ விடுத்லைப் புலிகளை அழித்தன.

ஈழத் தமிழ் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

முன்னையவற்றிலிருந்து கற்றுக்கொண்டு ஈழப் போராட்டத்தை பரந்துபட்ட தளத்தில் முன்னெடுக்க வேண்டும்.

தொடரும்…

22 thoughts on “ஈழப் போராட்டத்தை மாவோயிஸ்டுக்கள் ஆதரிக்கிறார்கள் : வரவர ராவ்”

 1. No more criminal activity in the territory of Sri Lanka – Shri Lanka. Professor G. L. Peiris is right in that they will come from all over the world to learn from institutions like the Kotalawela Defence University and Diyatalawa Military Academy. Indians should come to learn as to how to put the Maoists out of buisiness there.

  1. Don’t worry revolutionary forces have already learnt how to put the imperialist agenda out of the business, which massacres the millions of innocents day by day.

  2. Tamil eelam birth is now in the hands of US, Norway, Switzerland etc., Please give tamils in lanka a place to live like jews in ISRAEL & East timor etc., Let the world see the brutality of srilankan govt. and awake…..

 2. The Man, you are still the sixties. Did you Richard Quest on CNN. Treaty of Versailles. End of World War One. Then known as just the World War. A war to end all wars.

 3. /தமிழீழ விடுதலைப் புலிகளை எமது விமர்சனங்களுக்கு அப்பால் ஏகாதிபத்திய எதிர்பு இயக்கங்கமாகவே பார்க்கின்றோம். அதன் ஏகாதிபத்திய எதிர்ப்புக் காரணமாகவே உலக நாடுகள் ஒன்றிணைந்து தமிழீழ விடுத்லைப் புலிகளை அழித்தன./

  புலிகள் கூட தாம் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என்று கூறியதில்லை. அவர்கள் ஒருபொதும் இந்தியா உட்பட எந்த ஏகாதிபத்தியத்தையும் எதிரிகள் என்று அறிவிக்காதபோது இந்த வரவராவ் எந்த அடிப்படையில் புலிகளின் போராட்டம் “ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்” என்று கூறுகிறார். ஒரு புரட்சிகர கட்சியின் பிரதிநிதியாக கருதப்படும் வரவராவ் அவர்கள் புலிகள் புரட்சிகர இயக்கங்களையும் புரட்சிகர சக்திகளையும் அழித்து ஒரு பாசிஸ்ட் இயக்கமாக இருந்தது குறித்து எதுவும் தெரிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

  இங்கு வரவராவ் கூறியதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் எந்தளவுக்கு மாவோஸ்டுக்களின் கருத்துக்களாக எடுக்க முடியும் என்பது ஒருபுறம் இருக்க இலங்கையில் எத்தகைய தீர்வை முன்வைத்து போராட வேண்டும் என்பதை இலங்கை மக்களும் அவர்களை பிரதிநிதிப் படுத்தும் ஒரு புரட்சிகர கட்சியுமே தீர்மானிக்க முடியும் என்பதே என் கருத்தாகும். ஈழவிடுதலையை முன்னெடுப்பதே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் என வரவராவ் மூலம் சொல்ல முனையும் நாவலன் முயற்சிகள் ஒருபோதும் வெற்றியளிக்காது.

  1. பாலன், நேர்காணல் ஆங்கிலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதன் வரிக்கு வரியான மொழிபெயர்பே இது. இந்த ஒலிப்பதிவில் வாவரவின் அனுமதி இன்றி நானோ இனியொரு ஆசிரியர் குழுவைச் சார்ந்த எவருமோ மாற்றம் செய்ய முடியாது. எனக்குத் தனிப்பட்ட அளவில் அவரின் பல கருத்துக்களோடு உட்ன்பாடில்லை. எது எவ்வாறாயினும் குறுக்கு வழிகளில் சிந்திக்கும் உங்கள் செயற்பாடுகளை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள். ஒரு கருத்துத் தவறானால் அதனை விவாதம் செய்யுங்கள். முடியாவிட்டால் “சிவனே” என்று இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்குங்கள். அடையாளப்படுத்துவது, கதைகட்டுவது, புனைவுகளை உருவாக்கி கருத்துக்களைச் சிதைப்பது போன்றவை அருவருப்பான செயற்பாடுகள். முதலில் வராவரவ் இன் கருத்துக்கள் மாவோயிஸ்ட்களின் கருத்துக்கள் இல்லை என்கிறீர்கள். பிறகு நான் அவரூடாக எதையோ சொல்ல முற்படுகிறேன் என்கிறீர்கள். தற்செயலாக வராவரவ் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடக் கூடாது என்றிருந்தால் அவரை தலை மேல் தூக்கிவைத்து கொண்டாடியிருப்பீர்கள். தவிர, புலி – புலி எதிர்ப்பு என்ற இந்த இரண்டு எலைகளை விட்டு நீங்கள் வெளியே வர முற்படாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது.

   1. தோழர் நல்லா வாங்கிக் கட்டியிருக்கார் இங்க. சும்மாதான் கேக்குறன் அது என்ன தோழர் முதலின்னு ஒரு அடைமொழி எல்லாம் ?

    1. நண்பர் பிலிப் அவர்களுக்கு ! உங்கள் கருத்துக்கள் புல்லரிக்க வைக்கின்றன. மாக்சிச லெனிச மாவோசிச சிந்தனைகளை நன்கு வளர்க்கின்றன. எனக்கு அடி விழுந்தாலும் பரவாயில்லை. உங்கள் பணி தொடரட்டும் நண்பரே?

     1. I am not going to call you Tholar or a friend because you are not one. My only objective is to trash the fake Marxism you are trying to preach here. If you want to preach it you must practice it first. If you want to practice it you will go and live in a Marxist country instead of a capitalist country. First go and live there and see how horrible life is there for the common man. Not the lives of the ruling criminals in those countries. When your rear end was on fire the country that gave you shelter is the capitalist country not any of the socialist countries. How many such countries are welcoming asylum seekers? Even if the offer asylum how many of the refugees will want to go there anyway.
      By the way you get trashed for your insidious remarks not for your socialist ideas. Despite you continue to do that. I have absolutely no interest in your socialism.

 4. //பிரிந்துசெல்வதை நிராகரிக்கும் சுய நிர்ணைய உரிமை என்பதே எமது சூழலுக்கு சரியானது என புதிய ஜனநாயக மார்க்சிய லெனினியக் கட்சி உட்பட இலங்கையின் இடது சாரிக் கட்சிகள் கூறுகின்றன.//
  மாவோ சார்பு கட்சி என்று தம்மை விளம்பரப்படுத்தும் புதிய சனனாயக மார்க்சிய லெனிச கட்சிக்கு வராவரவின் பதில் உச்ச தலையில் அடி

 5. Pingback: Indli.com
 6. கே: ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாக மாவோயிஸ்டுகள் குரல் கொடுக்கவில்லை என தமிழகத்தில் பேசப்படுகிறதே?

  ப: ஆந்திராவில் சட்டசபை முன்பு பெருந்திரளாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். டில்லியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஈழப் போராட்டத்தை ஆதரித்தும் பிரபாகரனை ஆதரித்தும் நானே கவிதை பாடினேன். பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக எங்கள் இதழின் அட்டைப் படத்தில் அவர் படமே இடம்பெற்றிருந்தது. -கீற்றுநேர்கணாலில் வரவர ராவ்

 7. /நேர்காணல் ஆங்கிலத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அதன் வரிக்கு வரியான மொழிபெயர்பே இது. இந்த ஒலிப்பதிவில் வாவரவின் அனுமதி இன்றி நானோ இனியொரு ஆசிரியர் குழுவைச் சார்ந்த எவருமோ மாற்றம் செய்ய முடியாது./ இனியொரு மொழிபெயர்ப்பில் மாற்றம் செய்திருப்பதாக நான் எங்கேயாவது குறிப்பிட்டிருக்கிறேனா?

  /எனக்குத் தனிப்பட்ட அளவில் அவரின் பல கருத்துக்களோடு உட்ன்பாடில்லை. /
  உங்களுக்கு கருத்து வேறுபாடு இருப்பதுபோல் எனக்கும் இருக்கக்கூடாதா நாவலன் அவர்களே?
  / எது எவ்வாறாயினும் குறுக்கு வழிகளில் சிந்திக்கும் உங்கள் செயற்பாடுகளை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்/.
  எதை வைத்து இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமத்துகிறீர்கள் என்று கூறமுடியுமா?
  /ஒரு கருத்துத் தவறானால் அதனை விவாதம் செய்யுங்கள். முடியாவிட்டால் “சிவனே” என்று இழுத்துப் போர்த்திக்கொண்டு படுத்து உறங்குங்கள்./
  எதற்காக இவ்வளவு உணர்ச்சி வசப்பட வேண்டும்? எதற்காக இப்படி கொச்சையாக பதில் சொல்ல முற்பட வேண்டும்? ஒரு மாக்சியவாதி இப்படியா கருத்தை எதிர்கொள்வது? /அடையாளப்படுத்துவதுஇ கதைகட்டுவதுஇ புனைவுகளை உருவாக்கி கருத்துக்களைச் சிதைப்பது போன்றவை அருவருப்பான செயற்பாடுகள்./
  நண்பரே இப்படியான அவசியம் எனக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை. இனியும் ஏற்படாது என நம்புகிறேன். முடியுமானால் நான் எப்போது அப்படி செய்தேன் என்று நிரூபிக்கும்படி சவால் விடுகிறேன். /முதலில் வராவரவ் இன் கருத்துக்கள் மாவோயிஸ்ட்களின் கருத்துக்கள் இல்லை என்கிறீர்கள்./
  நான் கூறியது அவரது கருத்துக்கள் எந்தளவுக்கு மாவோஸ்டுக்களின் கருத்துக்களாக எடுக்க முடியும் என்பதே. ஏனெனில் நீங்கள் கூட அவரை மாவோஸ்ட்டுக்ளின் ஆதரவாளர் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறீர்களேயொழிய அவரை மாவோஸ்ட் கட்சியின் ஒரு நிர்வாகி என்று எங்குமே குறிப்பிடவில்லை. எனவே இந் நிலையில் எப்படி அவரின் கருத்தை மாவோஸ்ட் கருத்தாக நான் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும் நாவலன் அவர்களே?
  /பிறகு நான் அவரூடாக எதையோ சொல்ல முற்படுகிறேன் என்கிறீர்கள்/
  .தில் என்ன தவறு இருக்கிறது? நீங்கள் சுயநிர்ணயத்தின் பேரால் ஈழவிடுதலையை முன்வைப்பவர். உங்கள் கருத்துக்கு ஆதரவான கருத்தை எதிர்பார்ப்பது ஒன்றும் தவறில்லை நண்பரே. அதேபோல் உங்கள் தவறான கருத்து வெற்றியளிக்காது என்று நான் சொல்வதும் தவறு இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள் நண்பரே! /தற்செயலாக வராவரவ் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடக் கூடாது என்றிருந்தால் அவரை தலை மேல் தூக்கிவைத்து கொண்டாடியிருப்பீர்கள்./ அவர் ஈழவிடுதலையை முன்வைத்தாலும் வைக்காவிட்டாலும் அவர் மீதான எமது மாறாது நண்பரே. ஏனெனில் அவர் மாக்சிய லெனிச மாவோசிச சிந்தனையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்ல அதற்காக உழைப்பவர்.எனவே ஒரு தோழர் என்ற வகையில் அவர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது சரி நாவலன்! இந்தியாவில் மட்டுமல்ல உலகில் பலர் எமது கருத்தை ஆதரிக்கின்றனர்.அவர்களையெல்லாம் நாம் தலையில் தூக்கி கொண்டாடுகிறோமா? ஒரு மாக்சியவாதி என்று சொல்லிக்கொண்டு இப்படியான சொற்களை பாவிப்பது குறித்து வெட்கப்படவில்லையா? /புலி – புலி எதிர்ப்பு என்ற இந்த இரண்டு எலைகளை விட்டு நீங்கள் வெளியே வர முற்படாமல் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது./

  இப்போது அடையாளப்படுத்துவது சிதைப்பது யார் என்று புரிகிறதா?

 8. இவ் நேர்காணலை மொழிபெயர்ப்பு பிரச்சனை மற்றும் தொழில்நுட்ப்ப பிரச்சனைகளுடன் வெளியிடுவதைவிட Varavara Rao சொல்லவரும் கருத்தையும், விசயத்தையும் உங்களின் பார்வையில் (ஒரு தொகுப்பாக) தந்தாள் மிக நன்றாகவிருக்கும் மேலும் வாசிப்பவர்களுக்கு ஒரு தெளியும் கிடைக்கும்.

  1. மொழிபெயர்ப்புப் பிரச்சனைகள் தொழிநுட்பப் பிரச்சனைகள் இருப்பதாக யார் உங்களுக்குச் சொன்னது? தவிர, சமீர் அமீன் உடனான உரையாடல் ஒன்றை டாக்காரில் இருக்கும் அவரிடமிருந்து பெற்றுக்கொண்டோம். அது பிரஞ்சு மொழியில் அமைந்திருப்பதாலும் ஒலிப்பதிவு தரமானதாக இல்லாமையாலும் எமது பார்வையில் ஒரு தொகுப்பாக வெளியிட உத்தேசித்துள்ளோம். – நன்றி

 9. எத்தகய தவறுகளையும் நியாயப்படுத்திவிடும் திறமைகொண்ட தமிழர்கள் நிறையவே இருக்கிறார்கள். தாய்ப்பால் பிள்ளைக்கு கொடுப்பது நன்மையா தீமையா என்று பட்டிமன்றம் நடாத்தினால் தீமைதான் என்று நியாயப்படுத்தி பேசவல்ல திறமைசாலிகளைக் கொண்டிருப்பது தமிழினம்.

  அறப்படித்த தீரர்களே, கிடைத்த கலயத்தை உடைத்துவிட்டுத் தத்தளிக்கிறோம். கடலில் மூழ்கும்போது கிடைப்பதைப் பற்றிப்பிடித்து கரையேறுவதற்கு வழிபாருங்கள், வழிகாட்டுங்கள். கரையேறிப் பாதுகாப்புத் தேடிக்கொண்டபின்பு ஜோராக பட்டிமன்றம் நடாத்துங்கள். எல்லோருமே ரசிப்போம்.

 10. Thiruna the word Self Determination came into usage in 1948 the year Sri Lanka became independant. The Jewish State of Israel appeared in the world map. India and Pakistan agreed to a United Nations mediated cease fire in Kashmir. That is the Traditional Tamil Homeland here the North and East is indeed Palestine and Kashmir. Sheik Abdullah – Dr. Farukh Abdullah – Chief Minister Omar Abdullah. I am Sengunthar born on December 27, 1950. Abdullah, it is me, Dhaka, East Pakistan – 1971.

 11. Selva only in the Summer of 1994 I learnt at Terre Haute, Indiana, USA, there is something called dependency in psychology. You are talking on that tune. Timor Leste (East Timor) may come back into the Indonesian Federation. Israel is one of a kind. Discovery Channel – Permanent Friends and Permanent Interests – Abba Eban. Some in this world have a permanent interest in the welfare of Israel. In Sri Lanka Norway facilitated the American Plan for a military defeat of the Killer Machine – Mangala Samaraweera. Colombo is going to be as important and busy as New Delhi in international diplomacy and in many other things. Economy is booming since 1977.

 12. Dr. Mervin Silva, Subramaniyam Swami and Dr. Sri S. Sriskanda you all add spices to the very topic. We are not feeling that Vadivelu is out of movies these days. Keep add as much as possible.

 13. Kavitha I am very humbled that you equated me with those too. I have Dish TV at home and I am in touch with India and America. I see not only Subramaniyam Swami also Mani Shanker Iyer, Vidya Balan and Hemamalini are having a great time there at our expense. Tamil is a stem language like Sanskrit and it did not go dead.

Comments are closed.