ஈழப் பிரச்சனை வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்- நெடுமாறன்

ஈழத்தமிழர் பிரச்னை சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பூதப்பாண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பழ.நெடுமாறன் பேசினார். கம்யூனிஸ்ட் தலைவர் ஜீவாவின் 104-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பூதப்பாண்டியில் நடைபெற்றது. நாவலாசிரியர் பொன்னீலன் தலைமை வகித்தார். இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் சந்திரபாபு முன்னிலை வகித்தார். விழாவில் பங்கேற்ற உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பேசியதாவது: தமிழை ஆட்சி மொழியாக்க முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஜீவா. 1967-ம் ஆண்டு சீனா, இந்தியா மீது போர் தொடுத்த போது சீனா கம்யூனிஸ்ட் நாடாக இருந்த போதும் அதற்கு எதிராக குரல் கொடுத்த ஒரே தலைவர் ஜீவா. கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய நேசமணி போன்ற தலைவர்களுடன் இணைந்து போராடியவர். ஈழத்தமிழர் பிரச்னை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த உணர்வு வெளிப்படுமானால் ஒவ்வொரு தொகுதியிலும் காங்கிரஸýக்கு சரியான பாடம் கிடைக்கும் என்றார் அவர். கூட்டத்தில் ..டி.யு.சி மாநில துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், பூதப்பாண்டி பேரூராட்சி துணைத் தலைவர் அனில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

7 thoughts on “ஈழப் பிரச்சனை வரும் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்- நெடுமாறன்”

 1. ஈழப்பிரச்சினை தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ,தமிழ்நாட்டில் ஆட்சிமாற்றம் நிகழ்தாகும் என்பது நிச்சியம் ,இதற்கும் நிறையவே எதிர்மறையான கருத்துக்கள் கொட்டப்படப்போவதை எல்லோரும் பார்க்கலாம், ஆனாலும் அவைகள் அவரவர் ஆதங்கமே தவிர வேறொன்றுமில்லை, முடிவு முடிவாகிவிட்டது,130,நாட்களின்பின்,புதிய
  ஒரு கூட்டணி ஆசனங்களை சுத்தஞ்செய்து தொடரும்,,,,

 2. கருணாநிதிக்க்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் ஆட்சித் தலைவராவார். அவர் தனக்குப் பிடித்த குண்டர்களைப் பதவியில் அமர்த்துவார்.
  போதுமா ஆட்சி மாற்றம்?

  1. கறக்ற் சின்னத்திருத்தம் கருணாநிதிக்க்குப் பதிலாக மு.க.ஸ்டாலின் எதிர்க்க (ஆ)ட்சித் தலைவராவார். அவர் தனக்குப் பிடித்த குண்டர்களைப் பதவியில் அமர்த்துவார்.
   போதுமா ஆட்சி மாற்றம்?

   1. தங்கள் சித்தம் அடியேன் பாக்கியம். என்றாலும் தமிழ்நாடு இந்தத் தேர்தல் முடிவால் உருப்படப் பொவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

    1. அதென்றால்ச்சரிதான், இருந்தாலும் மாற்றம் ஒன்று இப்போதைக்குத்தேவை என்று நினைக்கிறேன்,

 3. ஆளப்படுவது நானாயின் இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன.

Comments are closed.