ஈழத் தமிழர்களை இந்திய அரசு கைகழுவி விட்டது. டி.ராஜா.

தமிழகத்தின் தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை ராணுவத்தினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி, கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க மத்திய அரசு தவறி விட்டது.வருகிற புதன்கிழமை நடைபெறும் மாநிலங்களவை கூட்டத்தில் இந்திய மீனவர்கள் பாதுகாப்பு குறித்து கடுமையாக பேசப்படும். அதுபோல இலங்கை தமிழர் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதை உள்நாட்டு பிரச்சினையாக மட்டும் பார்க்க கூடாது.தமிழகத்தில் 80 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அகதிகளாக வந்ததற்கு காரணம் இலங்கையில் தமிழர்கள் மீது நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய அரசு ராணுவத்தை தார்மீக ரீதியாக வழங்கி உள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இதை ஒப்பு கொண்டுள்ளார். இந்திய அரசு என்பது காங்கிரஸ் கட்சி மட்டும் அல்ல. தி.மு..வும் கூட்டணியில் உள்ளது. இலங்கை போரில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது. இதை .நா.சபையின் பொதுச் செயலாளர் பாங்கி மூன் கூட அறிவித்து உள்ளார். ஈழத் தமிழர்களை மத்திய அரசு கைகழுவி விட்டது. இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது.

6 thoughts on “ஈழத் தமிழர்களை இந்திய அரசு கைகழுவி விட்டது. டி.ராஜா.”

 1. இலங்கை போரில் மனித உரிமை மீறல் நடைபெற்றுள்ளது – this is not a rocket science,for you to tell now.

  இந்திய மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது – everyone know this, why? where is this happen? within Indian sea boundry or near lanka?

  இதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி கண்டிக்கிறது – you people can release only this kind of statements.

  now your party in which party alliance? what is the latest news in kashmir? how many people died today? why?

  ok sir, any Srilankan tamil party accept you?

  1. அய்யா அன்புள்ளங் கொண்டவரே, அரசியல்வாதியின் வேலையே அறீக்கை விடுவதுதான் அதைச் செய்யாமல் விட்டால் மட்டும்தான் கேள்வி கேட் க வேண்டும்.ஒன்றீரண்டு நல்ல மனிதர்களயும் இப்ப்டிப் பேசிப், பேசியே குழப்பி விடுவீர்கள் போலிருக்கிறது.

   1. மரியாதைக்குரிய தமிழ் மாறன் அவர்களே! அன்புள்ளங் கொண்ட மன்னித்துரை அவர்களே!
    இந்திய கம்யூனிஸ்டு கட்சி டி.ராஜா அவர்கள் நல்லவர்தான், வாழும் அரசியல்வாதிகளில் எளிமையானவர், தனக்கென ஓர் சொத்தும் சேர்க்காதவர், மிகவும் மரியாதைக்குரியவர். தாங்கள் இருவரும் சொல்லும் கருத்துகளிலும் உண்மை இருக்கிறது. ஆனால், இன்றைய CPI யின் நிலை என்ன? (உள்நாட்டு கொள்கையிலும் சரி, வெளிநாட்டு கொள்கையிலும் சரி) இவர்களின் வரலாறு என்ன? என்பதை நாம் தெளிவாக ஆராய வேண்டும்.

    Rahul Bajaj richest, D. Raja poorest!

    With Rs 308 crore, industrialist Rahul Bajaj is the richest Rajya Sabha MP and CPI secretary D. Raja is the poorest Upper House member with zero assetsமேலும் இராஜ்ஜ சபா, மேல்சபையில் உள்ள அங்கத்தினரின் சொத்து விபரங்கள் அறிய ஆதாரத்துடனான செய்தி:

    Unlike the Lok Sabha, the Election Commission does not declare information about Upper House members. The information is maintained by state
    assemblies.The NGO Association for Democratic Reforms got the information though the Right to Information for the first time.

    The data shows that Rajya Sabha MPs are richer than Lok Sabha MPs, of whom the richest, Nageshwar Rao of the TDP, has assets worth Rs 178 crore — less than the fifth-richest MP in the Rajya Sabha, Anil Lad of the Congress.

    Bajaj is not only the richest MP but his liabilities are also the maximum (Rs 386 crore) among Indian MPs.

    Of the 184 MPs assessed, 54 per cent are crorepatis in the Rajya Sabha. Karnataka leads with 87 per cent of its MPs listed as crorepatis while 65 per cent of Uttar Pradesh’s MPs are crorepatis.

    The Rajya Sabha is, however, no match with the Lok Sabha in terms of MPs with criminal records. Just 17 per cent MPs have a criminal record in the Rajya Sabha compared to 30 per cent in the Lok Sabha.

    “Rajya Sabha… members are chosen through a special process. The entry of people with criminal cases is an assault on the dignity of the Upper House,” said L.C. Jain, a former Planning Commission member.http://www.hindustantimes.com/Rahul-Bajaj-richest-D-Raja-poorest/Article1-528056.aspx

 2. அட இந்தியா எப்போது ஈழத்தமிழருக்கு கைகொடுத்தது. இப்போது கைவிட?  எமது பிரச்சனைக்குள் இநதியா தனது அசிங்க விரலை நுழைததிருக்கவிடின் என்றொ எமது பிரச்சனைகள் முடிவுக்கு வந்திருக்கும். ஈழததமிழன் அமைதியாக நிம்மதியாக வாழ்ந்திருப்பான். இன்று பரமபரை பரம்பறரயாக வாழ்ந்த மண்ணைக் கூட சிங்கள கொலைவெறி அரசிற்கு பறித்துக் கொடுத்துள்ளது நாசகார இந்தியா. எம்மை விடுங்கள் தயவு செய்து உங்கள் போலி இறையாண்மைக்கு உற்பட்ட தமிழகதின் மீனவ சகோதரர்களையாவது காப்பாற்ற வழியைத் தேடுங்கள்.   

  1. சிந்தித்து எழுதுவது என்பது இதுதான் ஆனால் இன்னும் நம் சிந்தனையில் மாற்றமி வரவில்லையே? நாசகார இந்தியா என்பது,மூள இல்லாதவர்கள் என்பது, சினா இந்தியாவவை போரில் வெல்லும் என்பது இன்னும் ஒரு மண்ணூம் புரியாமல் பேசுவது எங்களூக்கு நல்லதா?பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் முரண்டு பிடித்த்வர் யார்? கோமாளீகள் நாங்களா இந்தியாவா?

   1. “ஒரு மண்ணூம் புரியாமல் பேசுவது” தான் உங்களுக்குக் கை வந்த கலையாயிற்றே! கோமாளித்தனத்துக்கு ஏன் துணை தேடுகிறீர்கள்?

Comments are closed.