ஈரானில் முதல் பெண் அமைச்சர் நியமனம் : முப்பது ஆண்டுகள் கழித்து அங்கீகாரம்!

ஈரான் ஜனாதிபதி அகமதி நிஜாத் அளித்த அமைச்சரவைப் பட்டியலை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்தது.

இப்பட்டியலில் ஒரு பெண் அமைச்சரும் இடம் பெற்றுள்ளார். 1979-ல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் முதல் முறையாக ஒரு பெண், ஈரானில் அமைச்சராகியுள்ளார்.

மார்சியே வாஹித் டாஸ்ட்ஜெர்டி, சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் உள்ளிட்ட 18 பேர்களின் அமைச்சர் நியமனத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டது.

மிகவும் சர்ச்சைக்குரிய முறையில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அகமதி நிஜாத் அளித்த பட்டியலில் மூன்று பெண்கள் இடம் பெற்றனர்.

பாத்திமெ அஜோர்லோ, நலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைச்சராகவும், சூசன் கேசவார்ஸ் கல்வி அமைச்சராகவும் முன் மொழியப்பட்டனர்.

இவ்விருவர் பெயரையும் நாடாளுமன்றம் நிராகரித்தது.

அர்ஜென்டினாவில் 1994-ம் ஆண்டில் யூத கலாச்சார மையத்தைத் தகர்த்து, 85 பேரைக் கொன் றதால் தேடப்பட்டு வரும் ஜெனரல் அகமது வாஹிதி,பாதுகாப்பு அமைச்சராக நிய மிக்கப்பட்டுள்ளார். இவருடைய நியமனத்துக்கு அர்ஜென்டினா கண்டனம் தெரிவித்துள்ளது.

அகமதி நிஜாத்தின் பரிந்துரைகளை பழமைவாதிகள் மிகுந்த ஈரான் நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டது.

அஹமதி நிஜாத்தின் வெற்றியை அவருடைய எதிரிகள் நிராகரித்து விட்டனர்.