ஈராக்கிற்கும் ஆப்கானுக்கும் செல்லும் இராணுவ மையத்தில் மேஜர்.ஹசன் மாலிக் நடத்திய துப்பாக்கிச் சூடு

fordgoodஅமெரிக்காவின் Texas மாநிலத்திலுள்ள Fort Hood தரைப்படை தளத்தில், இன்று இராணுவ அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர்.
மேஜர்.ஹசன் மாலிக் என்ற குறித்த இராணுவ வீரர் தனது இரு கைத்துப்பாகிகளையும் எடுத்து அருகில் இருந்தவர்களை கண்மூடித்தனமான சுட்டுள்ளதுடன், இறுதியில் அவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நிகழ்த்துவதற்கு முன்பதாக “அல்லாஹ் அக்பர் ” என அவர் சத்தமிட்டதாக காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் தெரிவித்தார். இதைவேளை முடிபுகளுக்கு உடனடியாக வர வேண்டாம் என அமரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மேஜர். மாலிக் ஆரம்பத்தில் உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டாலும் பிந்திய செய்திகள் இன்னும் அவர் உயிருடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றன.

இத்தாக்குதல் சம்பவம், ஆப்கானிஸ்த்தானுக்கும், ஈராக்கிற்கும் செல்வதற்காக, அமெரிக்காவில் இருந்து இராணுவ வீரர்கள் புறப்படும் ஹூட் ராணுவ மையத்தில் இடம்பெற்றிருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய இராணுவ மையம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிரான கொந்தளிப்பு நிலை காணப்படுவதாக பல தரப்புக்கள் தெரிவிக்கின்றன.