இஸ்ரேல்-ஹமாஸ் மீது போர்க்குற்ற அறிக்கை : ஐநா உறுதி

isrel300இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது போர்க்குற்றம் சுமத்தும், ‘காசா மீதான இந்த வருட இஸ்ரேலிய தாக்குதல் குறித்த அறிக்கை’ ஒன்றை அங்கீகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு வாக்களித்துள்ளது.

இந்த அறிக்கையை தென்னாபிரிக்க நீதிபதியான ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் தயாரித்துள்ளார்.

அந்தச் சம்பவங்கள் குறித்து இரு தரப்பும் நம்பத்தகுந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கூறும் அந்த அறிக்கை, அவ்வாறு செய்யாவிட்டால் இரு தரப்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அழைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்த அறிக்கையின் மீது மாத்திரமல்லாமல், இந்த விடயத்தில் ஹமாஸை அல்லாமல் இஸ்ரேலை மாத்திரம் குற்றஞ்சாட்ட வேண்டும் என்று கோரும் பாலத்தீன ஆதரவு தீர்மானத்தின் மீது அங்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த விடயம் தொடர்பான தீர்மானம் பிரத்தியேகமாக இஸ்ரேலை மாத்திரம் இலக்கு வைத்தமை தம்மைக் கவலையடைய வைத்துள்ளதாக கோல்ட்ஸ்டோன் தெரிவித்துள்ளார்