இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் எச்சரிக்கை

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
இலங்கையில் நடைபெற்ற போரில் படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளையும் சுவரொட்டிகளையும் கிழித்தெறிந்து ஈரோட்டில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் .வி.கே.எஸ். இளங்கோவன் பகிரங்கமாக நடத்திய காலித்தனத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொண்டு கலவரத்தில் ஈடுபட்ட இளங்கோவனைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி ஆணையிட வேண்டிய முதலமைச்சர் கருணாநிதி அவருக்குப் பாதுகாப்புக் கொடுத்திருப்பது காலித்தனத்தை ஊக்குவிப்பதாகும்.தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது சட்டப்படிக் குற்றமல்ல என மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பல தீர்ப்புகள் வழங்கிய பிறகும் அவற்றைச் சிறிதும் மதிக்காமல் நடந்து கொண்ட இளங்கோவன் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தைச் செய்தவர் ஆவார்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இளங்கோவன் உட்பட முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் தோற்கடிக்கப்பட்டதற்கு ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ் தலைமை செய்த தவறும் அதன் விளைவாக தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட கோபமுமே காரணமாகும். இதைக் கொஞ்சமும் உணராது இளங்கோவன் போன்றவர்களின் காலித்தனமான செயற்பாடு தமிழகத்தில் காங்கிரசை ஆழக் குழி தோண்டிப் புதைத்துவிடும் என எச்சரிக்கிறேன்.பெருமைமிக்க பெரியாரின் பாரம்பரியத்திற்கும் தமிழ்நாட்டில் அரசியல் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்ந்த .வெ.கி. சம்பத் அவர்களின் நற்பெயருக்கும் இளங்கோவனின் செயல் பெரும் இழுக்கைத் தேடித் தந்துவிட்டது.இத்தகைய செயல்களை அடக்காமல் கருணாநிதி வேடிக்கைப் பார்ப்பாரானால் மக்கள் முன் வந்து காலித்தனங்களை அடக்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கிறேன்.

6 thoughts on “இளங்கோவனுக்கு நெடுமாறன் கடும் எச்சரிக்கை”

 1. ‘அம்பாள் என்றைக்கடா பேசினாள்?” என்பது மாதிரி காங்கிரஸை கலைஞர் என்றைக்கைய்யா காங்கிரஸை அடக்கினார்? அவர்தான் காங்கிஸின் காலில் விழுந்து பதவிப் பால் குடித்துக் கொண்டிருக்கிறாரே! அந்த ருசியால்தான்…. இளஙகோவனை கைது செய்வதற்கு பதில்… அவர் வீட்டில் பெட்ரோல் குண்டு எறிந்ததாக… நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்திருக்கிறார் கருணாநிதி. அந்த நேரம் அவர்கள் சீமானை வரவேற்க சென்னை விமான நிலையத்தில் இருந்தார்கள் என தெரிந்தும், இளஙகோவனின் அ.தி.மு.க. ஆதரவு நிலைப்பாட்டை தணிப்பதற்காக கருணாநிதி செய்த சொரியும் நடவடிக்கை இது. எல்லாவற்றுக்கும் பதில் சொல்லியாக வேண்டும்!

 2. பதவிக்காக எதையும் செய்வார் என்பது எப்போதோ தெரிந்தது தானே?சும்மா எதுக்கு செவிடன் காதில் சங்கு ஊத வேண்டும்?இருக்கும் வரை அனுபவிக்கட்டும். ஆனால் ஒன்று நல்ல சாவே வராது.

  1. கூட்டணித் தலைவர் அமிர் இயற்கையான சாவு வரக்கூடாதேருக்கு லிஸ்ற் போட்ட மாதிரிப் பேசுகிறிர்கள்?

 3. இந்த ……எச்சரிக்கும் அளவு நாடு கெட்டு கிடக்கிறது. புலிகள்கிட்ட வாங்கின காசுக்கு நன்றிக் கடனா ……..

 4. தனியாக நின்றால் அவமானப்பட்டு தோற்று மானத்தை இழக்க வேண்டியவர், சட்டத்தை மீறி வீரம் காட்டுகின்றார். எஜமான விசுவாசம் உள்ள குரைக்கும் நாய்.
  சொல்லின் செல்வருக்கு இப்படி ஒரு தறுதலையா?
  ஒரே ஒரு நாள் உண்மையாக வேலை செய்திருந்தால் அந்தப் பதாகை ஒட்டியவரின் உழைப்பின் அருமை ,உணர்வின் அருமை புரிந்திருக்கும்.
  கிழிப்பதில் புலியாக் உள்ள இந்த ஜென்மம் செய்து கிழித்துள்ளது என்ன?

  1. முதலில் தி.மு.கவை நீங்கித் தனிக் கட்சி தொடங்கி காங்கிரஸில் ஒட்டிக் கொண்டவரே “சொல்லின் செல்வர்” தானே!

Comments are closed.